Breaking

Friday, March 20, 2026

10TH TAMIL - பா வகை, அலகிடுதல்‌






யாப்பு உறுப்புகள் (6)
  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை
பாக்களுக்கு உரிய ஓசை
  • வெண்பா - செப்பல் ஓசை
  • ஆசிரியப்பா - அகவல் ஓசை
  • கலிப்பா - துள்ளல் ஓசை
  • வஞ்சிப்பா - தூங்கல் ஓசை
யாப்போசை தரும் பாவோசை
  1. செப்பலோசை - இருவர் உரையாடுவது போன்ற ஓசை
  2. அகவலோசை - ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
  3. துள்ளலோசை - கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
  4. தூங்கலோசை - சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது.
வெண்பா பா வகைகள் (5)
  1. குறள் வெண்பா
  2. சிந்தியல் வெண்பா
  3. நேரிசை வெண்பா
  4. இன்னிசை வெண்பா
  5. பஃறொடை வெண்பா
ஆசிரியப்பா பா வகைகள் (4)
நேரிசை ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பா
அடிமறி மண்டில ஆசிரியப்பா

பா வகை அலகிடுதல்

  • யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள்
  • யாப்பின் உறுப்புகள் யாவை = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.
  • பாக்கள் எத்தனை வகைப்படும் = நான்கு வகை.
  • நால்வகைப் பாக்கள் யாவை = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா.
  • வெண்பாவின் ஓசை = செப்பல் ஓசை.
  • திருக்குறளும், நாலடியாரும் வெண்பாவால் அமைந்த அறம் கூறும் நூல்களாகும்.
  • அகவல் ஓசை பெற்று வரும் பா = ஆசிரியப்பா.
  • ஆசிரியப்பாவின் ஓசை = அகவல் ஓசை.
  • ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர் = அகவற்பா.
  • இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா.
  • இலக்கணக் கட்டுக்கோபு குறைவாக உள்ள பா வகை = அகவற்பா.
  • கவிதை வெளியீட்டிற்கு எளிதாக இருக்கும் பா வகை = அகவற்பா.
  • அகவர்பாவின் அமைந்த சங்க இலக்கியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.
  • கலிப்பாவிற்கு உரிய ஓசை = துள்ளல் ஓசை.
  • துள்ளல் ஓசை பெற்று வரும் பா = கலிப்பா.
  • செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை வகை = துள்ளல் ஓசை.
  • வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை = தூண்கள் ஓசை.
  • தூங்கல் ஓசை பெற்று வரும் பா வகை = வஞ்சிப்பா.

No comments:

Post a Comment