நூல் வெளி
குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது; கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது; குடும்பம் தொடங்கி உலகினைப் பேணுதல்வரை தன் பணிகளைச் சிறப்பாகச் செய்யும் பெண்ணுக்குக் கல்வி முதன்மையானதும் இன்றியமையாததும் ஆகும். இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில், விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பாடப்பகுதியாக உள்ளன.
பாரதிதாசனின் இயற்பெயர் கனக.சுப்புரத்தினம். இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார். பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழியக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள். இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 'பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்' என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
- மாக்கடல் - உரிச்சொல்தொடர்;
- ஆக்கல் - தொழில்பெயர்;
- பொன்னே போல் - உவம உருபு;
- மலர்க்கை - உவமைத்தொகை;
- வில்வாள் - உம்மைத்தொகை;
- தவிர்க்காணா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
விளைவது = விளை + வ் +அ + துவிளை - பகுதி;
அ - சாரியை;
சமைக்கின்றார் = சமை + க் + கின்று + ஆர்
சமை - பகுதி;
குடும்ப விளக்கு
1.
‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று கூறியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) சுரதா
2.
‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று கூறியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) சுரதா
3.
‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்று கூறியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ)
சுரதா
4.
‘பெண்எனில் பேதை என்ற எண்ணம், இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும், உருப்படல் என்பது
சரிப்படாது’ என்று கூறியவர்.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) சுரதா
5.
குடும்ப விளக்கு ........... பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
6.
‘வில்வாள்’ – இலக்கணக் குறிப்பு தருக.
அ) வினைத்தொகை
ஆ) தொழிற்பெயர்
இ) உம்மைத்தொகை
ஈ) உவமைத்தொகை
7.
‘விளைவது’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ)
பகுதி +விகுதி
ஆ)
பகுதி+ இடைநிலை+விகுதி
இ) பகுதி+ இடைநிலை+சாரியை+விகுதி
ஈ) பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி
8.
‘சமைக்கின்றார்’ - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ)
பகுதி +விகுதி
ஆ)
பகுதி+ இடைநிலை+விகுதி
இ) பகுதி+ சந்தி+இடைநிலை+ விகுதி
ஈ)
பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி
9.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) வையம் – உலகம்
ஆ) தணல் – நெருப்பு
இ) மின்னாள் – மின்னமாட்டாள்
ஈ) அணித்து – அருகில்
10.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) மலர்க்கை – உவமைத்தொகை
ஆ) ஆக்கல் – தொழிற்பெயர்
இ) பொன்னேபோல் – உவமைத்தொகை
ஈ) மாக்கடல் - உரிச்சொல்தொடர்




No comments:
Post a Comment