Breaking

Saturday, April 4, 2026

9TH TAMIL - உயிர்வகை


நூல் வெளி 

தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியம் பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்திருக்கிறது. இது எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களையும் 27 இயல்களையும் கொண்டுள்ளது. எழுத்து, சொல் அதிகாரங்களில் மொழி இலக்கணங்களை விளக்குகிறது. பொருளதிகாரத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலில் பல அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகப் பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற்கூற்றியல் அடிப்படையில் விளக்கியிருப்பதை அயல்நாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர். இது தமிழர்களின் அறிவாற்றலுக்குச் சிறந்த சான்றாகும்.


ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே -
 (நூ.எ.1516)

இலக்கணக்குறிப்பு

உணர்ந்தோர் - வினையாலணையும் பெயர்.

பகுபத உறுப்பிலக்கணம் 


நெறிப்படுத்தினர் – நெறிப்படுத்து + இன் + அர்
நெறிப்படுத்து – பகுதி
இன் – இறந்தகால இடைநிலை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி

1. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்.

அ) அகத்தியம்    

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்    

ஈ) வீரசோழியம்

2. கீழ்க்கண்டவற்றுள் ‘மூவறிவு’ உடையது எது?

அ) புல்  

ஆ) சிப்பி  

இ) கரையான் 

ஈ) தும்பி

3. ‘நெறிப்படுத்தினார்’- பகுபத உறுப்பிலக்கணம்.

அ) பகுதி +விகுதி  

ஆ) பகுதி+இடைநிலை+விகுதி

இ) பகுதி+ இடைநிலை+சாரியை+விகுதி

ஈ) பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி

4. தொல்காப்பியத்தில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

அ) 3  

ஆ) 9  

இ) 27  

ஈ) 30

5. தொல்காப்பியத்தில் இயல்களின் எண்ணிக்கை

அ) 3  

ஆ) 9  

இ) 27 

ஈ) 30

6. ‘ஐந்தறி வதுவே அவற்றொடு .............’

அ) நாவே 

ஆ) மூக்கே 

இ) கண்ணே 

ஈ) செவியே

7. ‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே, இரண்டறி வதுவே அதனொடு நாவே’- இவ்வடிகளில் ‘அதனொடு’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல் 

ஆ) தொடு உணர்வு 

இ) கேட்டல் 

ஈ) காணல்

8. பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) ஈரறிவு உயிர் – சிப்பி, நத்தை

ஆ) மூவறிவு உயிர் -  கரையான், எறும்பு

இ) நான்கறிவு உயிர் -  நண்டு, தும்பி

ஈ)  ஐந்தறிவு உயிர் – புல், மரம்

9. சரியான விடையைத் தேர்ந்தெடு.

  1. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம்.
  2. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உண்டு.
  3. தொல்காப்பியம் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள் விளக்கப்பட்டுள்ளன.
  4. கடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது தொல்கப்பியம்

அ) 1,2,3 - சரி 4 – தவறு  

ஆ) 1,2-சரி 3,4-தவறு

இ) 1,2-தவறு 3,4-சரி   

ஈ) அனைத்தும் சரி

10. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) தொடுதல்    

ஆ) சுவைத்தல்

இ) பேசுதல்    

ஈ) நுகர்தல்

No comments:

Post a Comment