Breaking

Saturday, April 4, 2026

9TH TAMIL - கல்வியில் சிறந்த பெண்கள்



தெரிந்து தெளிவோம்

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் சிலர் 
ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக் குயத்தியார்,  பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.

பெண்மை - புரட்சி: முத்துலெட்சுமி (1886 - 1968)
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
  • இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். 
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். 
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர். 
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
பெண்மை - துணிவு : மூவலூர் இராமாமிர்தம் (1883 - 1962)

தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி ; எழுத்தாளர்; திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர்.; தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர். தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.

பெண்மை - உயர்வு : பண்டித ரமாபாய் (1858 - 1922)

இவர் சமூகத் தன்னார்வலர். தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்.

பெண்மை – சிறப்பு : ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் (1870-1960)

பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.

யார் இவர்?

பாகிஸ்தானில், பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது பன்னிரண்டு (1997)

பெண்மை - அறிவு: சாவித்திரிபாய் பூலே (1831 - 1897)

1848 இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

1. பொருந்தாததைத் தேர்ந்தெடு

அ) ஔவையார்   

ஆ) காக்கைபாடினியார்

இ) மணிமேகலை   

ஈ) ஆதிமந்தியார்

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை சங்ககாலப் பெண்பாற்

புலவர்கள்)

2. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

அ) மூவலூர் இராமாமிர்தம்  

ஆ) முத்துலெட்சுமி

இ) ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 

ஈ) பண்டித ரமாபாய்

3. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

அ) மூவலூர் இராமாமிர்தம்  

ஆ) முத்துலெட்சுமி

இ) ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 

ஈ) பண்டித ரமாபாய்

4. தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்.

அ) மூவலூர் இராமாமிர்தம்  

ஆ) முத்துலெட்சுமி

இ) ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 

ஈ) பண்டித ரமாபாய்

5. 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

அ) மூவலூர் இராமாமிர்தம்  

ஆ) முத்துலெட்சுமி

இ) ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 

ஈ) பண்டித ரமாபாய்

6. இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரால் வழங்கப்படுகிறது.

அ) மூவலூர் இராமாமிர்தம்  

ஆ) முத்துலெட்சுமி

இ) ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 

ஈ) பண்டித ரமாபாய்

7. எந்த ஆண்டில் ஹண்டர் குழு முதன் முதலில் பெண்கல்விக்குப் பரிந்துரை செய்தது.

அ) 1882  

ஆ) 1848  

இ) 1929  

ஈ) 1997

8. எந்த மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர்.

அ) தமிழ்நாடு 

ஆ) குஜராத் 

இ) மராட்டியம் 

ஈ) மும்பை

9. பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய பன்னிரண்டு வயது பாகிஸ்தான் சிறுமி மலாலாவிற்கு (1997) .............. வழங்கப்பட்டது.

அ) பாரத ரத்னா   

ஆ) சர்

இ) நோபல் பரிசு   

ஈ) ஆஸ்கார்

10. நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.

அ) மூவலூர் இராமாமிர்தம்  

ஆ) முத்துலெட்சுமி

இ) சாவித்திரிபாய் பூலே  

ஈ) பண்டித ரமாபாய்

11. பொருந்தாததைக் கண்டெடு

அ) வடசொல் – தமிழ் அகராதி

ஆ) பரமாணுப் புராணம்

இ) பட்டினத்தார் பாராட்டிய மூவர்

ஈ) முப்பெண்மணிகள் வரலாறு

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை நீலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்கள்)

12. மருத்துவராகி, வேலூரில் இலவச மருத்துவச் சிகிச்சை அளித்தவர்.

அ) மூவலூர் இராமாமிர்தம்  

ஆ) முத்துலெட்சுமி

இ) ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் 

ஈ) பண்டித ரமாபாய்

13. குழந்தைத் திருமணத்தைத் தடுக்க ......... ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.

அ) 1882  

ஆ) 1848  

இ) 1929  

ஈ) 1997

14. ஈவெரா-நாகம்பை இலவசக் கல்வி உதவித்திட்டம் ......... உரியது.

அ) பட்டமேற்படிப்பிற்கு  

ஆ) பட்டய மேற்படிப்பிற்கு

இ) பொறியியல் படிப்பிற்கு 

ஈ) மருத்துவ படிப்பிற்கு

15. ........ ஆம் ஆண்டு கோத்தாரிக் கல்விக் குழு தன் பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

அ) 1882  

ஆ) 1848  

இ) 1964  

ஈ) 1997

No comments:

Post a Comment