Breaking

Saturday, April 4, 2026

9TH TAMIL - தொடர் இலக்கணம், ஆகுபெயர்


ஆகுபெயர் என்றால் என்ன

  • ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

ஆகுபெயர் வகைகள்

  • ஆகுபெயர் எத்தனை வகைப்படும் = பதினாறு வகைகள்.
  • ஆகுபெயர்கள் பதினாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொருளாகு பெயர் என்றால் என்ன

  • பொருளாகு பெயரை “முதலாகுபெயர்” என்றும் கூறுவர்.
  • எ.கா: முல்லையைத் தொடுத்தாள்
  • முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.

இடவாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: வகுப்பறை சிரித்தது
  • வகுப்பறை என்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.

காலவாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: கார் அறுத்தான்
  • கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.

சினையாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: மருக்கொழுந்து நட்டான்
  • மருக்கொழுந்து என்னும் சினைப் (உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.

பண்பாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: மஞ்சள் பூசினாள்
  • மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.

தொழிலாகுபெயர் என்றால் என்ன

  • எ.கா: வற்றல் தின்றான்
  • வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது.

கருவியாகு பெயர் என்றால் என்ன

  • எ.கா: வானொலி கேட்டு மகிழ்ந்தனர்
  • வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது.

காரியவாகு பெயர்

  • எ.கா: பைங்கூழ் வளர்ந்தது
  • கூழ் என்னும் காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது.

கருத்தாவாகு பெயர்

  • எ.கா: அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்
  • அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.

எண்ணலளவை ஆகுபெயர்

  • எ.கா:ஒன்று பெற்றால் ஒளிமயம்
  • ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

எடுத்தலளவை ஆகுபெயர்

  • எ.கா: இரண்டு கிலோ கொடு
  • நிறுத்தி அளக்கும் எடுத்தல் என்னும் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

முகத்தலளவை ஆகுபெயர்

  • எ.கா: அரை லிட்டர் வாங்கு
  • முகந்து அளக்கும் முகத்தல் அளவை பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

நீட்டலளவை ஆகுபெயர்

  • எ.கா: ஐந்து மீட்டர் வெட்டினான்
  • நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

1. ஒரு தொடரில் எழுவாயும் செயப்படுபொருளும் ......... சொல்லாக இருக்கும்.

அ) பெயர் 

ஆ) வினை 

இ) இடை 

ஈ) உரி

2. ஒரு தொடரில் ......... இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

அ) எழுவாய்    

ஆ) செயப்படுபொருள்

இ) பயனிலை    

ஈ) துணைவினை

3. எது இருக்கும் தொடர் விளக்கமாக இருக்கும்?

அ) எழுவாய்    

ஆ) செயப்படுபொருள்

இ) பயனிலை    

ஈ) துணைவினை

4. ‘படித்தேன்’  என்ற தொடரில் எழுவாய் எது?

அ) அவன் 

ஆ) அவள் 

இ) நான்  

ஈ) நீ

5. ‘சொன்னவள் கலா’ இத்தொடரில் அமைந்துள்ள பயனிலை.

அ) பெயர் 

ஆ) வினை 

இ) இடை 

ஈ) உரி

6. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

அ) கவிதா உரை வடித்தாள் - செய்வினை வாக்கியம்

ஆ) அப்துல் நேற்று வந்தான் - தன்வினை வாக்கியம்

இ) பூக்களைப் பறிக்காதீர்  - உணர்ச்சி வாக்கியம்

ஈ) அண்ணன் நாளை வருவான் - செய்தி வாக்கியம்

7. பகுபத உறுப்பிலக்கணம் எத்தனை வகைப்படும்.

அ) ஐந்து  

ஆ) ஆறு  

இ) ஏழு  

ஈ) எட்டு

8. வினைச்சொல்லில் ஏவலாகவும் பெயர்ச்சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமைவது.

அ) பகுதி     

ஆ) இடைநிலை

இ) சாரியை    

ஈ) விகுதி

9. சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல் ......... எனப்படும்.

அ) எழுவாய்    

ஆ) செயப்படுபொருள்

இ) பயனிலை    

ஈ) துணைவினை

10. ‘நான் வந்தேன்’ இதில் வரும் பயனிலை.

அ) பெயர்ப் பயனிலை  

ஆ) வினைப் பயனிலை

இ) உரிப் பயனிலை   

ஈ) வினா பயனிலை

11. ஒன்றன் பெயர்ச்சொல் தன்னைக் குறிக்காமல் தன்னோடு தொடர்புடைய வேறோரு பொருளுக்கு ஆகி வருவது.

அ) தொழிற்பெயர்   

ஆ) ஆகுபெயர்

இ) வினையாலணையும் பெயர் 

ஈ) வழக்கு

12. பொருத்துக.

அ) வகுப்பறை சிரித்தது –   1.எண்ணலளவை ஆகுபெயர்

ஆ) மஞ்சள் பூசினாள் –   2. காரியவாகுபெயர்

இ) பைங்கூர் வளர்ந்தது –   3. பண்பாகுபெயர்

ஈ) ஒன்று பெற்றால் ஒளிமயம் –  4. இடவாகுபெயர்

அ) 4, 3, 2, 1  

ஆ) 3, 2, 4, 1 

இ) 4, 3, 1, 2 

ஈ) 2, 1, 4, 3

13. ‘கார் அறுத்தான்’ – எவ்வகை ஆகுபெயர்?

அ) பொருளாகு பெயர்  

ஆ) சினையாகு பெயர்

இ) காலவாகு பெயர்   

ஈ) கருவியாகு பெயர்

14. அளவைப் பெயர்கள் ............ வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) நான்கு 

ஈ) ஐந்து

15. ஆகுபெயர்கள் ............. ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அ) 6  

ஆ) 12  

இ) 16  

ஈ) 20


No comments:

Post a Comment