- தமிழில் “சொல்” என்பதற்கு “நெல்” என்ற பொருளும் உண்டு.
- “சொன்றி, சோறு” என்பவை அவ்வழியில் வந்தவை.
- “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
- தமிழில் “மொழி” என்பதற்கு “சொல்” என்ற பொருளும் உண்டு.
- மொழியை (சொல்லை) மூன்று வகையாக பிரிப்பர். அவை, ஓரெழுத்து மொழி, ஈரெழுத்து மொழி இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களை உடைய மொழி
- “நெட்டெழுத்து (நெடில்) ஏழே ஓரெழுத்து ஒருமொழி” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
- குற்றெழுத்து (குறில்) ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதனை “குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே” என்கிறார் தொல்காப்பியர்.
- தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் = ஏழு.
- நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் = 42.
- நன்னூலார் கூறும் ஓரெழுத்து ஒருமொழி 42 இல் = நெடில் எழுத்துக்கள் 40, குறில் எழுத்துக்கள் 2.
- நன்னூலார் “நொ, து” என்னும் “உயிர்மெய் எழுத்துக்களும்” (குறில்) ஓரெழுத்து ஒருமொளியாக வரும் என்கிறார்.
- பூ, கா ஆகிய ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் இணைந்து “பூங்கா” என்ற சொல் உருவாகியது.
- “யா” என்ற எழுத்துக்கு “வினா” என்று பொருள்.
- ஆ, மா ஆகிய சொற்கள் இணைந்து “ஆமா” என்ற சொல் உருவானது.
- காட்டுப் பசுவிற்கு, “ஆமா” என்ற பெயரும் உண்டு.
- “மா” என்ற எழுத்துக்கு “விலங்கு” என்ற பொருளும் உண்டு.
- ஈ என்னும் பொதுப் பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பை காட்டி நிற்கிறது.
- ஈ என்பதன் பொருள் = ஈக (வழங்குதல்)
- “ஏய்” என்பதன் பொருள் = என்னோடு கூடு, பொருந்து, சேர்.
- கூர்மையான முல்லை உடைய முள்ளம்பன்றியின் பழைய பெயர் = எய்ப்பன்றி.
- செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா. இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- “செந்தமிழ் அந்தணர்” என அழைக்கப்படுபவர் = இரா. இளங்குமரனார்.
- நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
- இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
- திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
- இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து இங்குத் தரப்பட்டுள்ளன.
- “தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்” என்னும் நூலை எழுதியவர் = இரா. இளங்குமரனார்.
1. ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’
என்று கூறியவர்.
அ) அகத்தியர்
ஆ) தொல்காப்பியர்
இ) பவனந்தி முனிவர்
ஈ) வீரமாமுனிவர்
2. சொல்லை .......... வகையாகப் பிரிக்கலாம்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
3. ஓரெழுத்து ஒருமொழியாய் வரும் எழுத்துகள்
எத்தனை?
அ) 30
ஆ) 42
இ) 50
ஈ) 75
4. ஓரெழுத்து ஒருமொழியாய் வரும் குறில் எழுத்துகள்
எத்தணை?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
5. ‘ஆமா’- என்பதன் பொருள்
அ) பெரிய விலங்கு
ஆ) காட்டுப்பசு
இ) காட்டெருமை
ஈ) அனைத்தும்
6. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
அ) அரிமா - சிங்கம்
ஆ) பரிமா – குதிரை
இ) கரிமா - யானை
ஈ) வரிமா – கழுதை
7. ‘செந்தமிழ் அந்தணர்’ என்று அழைக்கப்பட்டவர்.
அ) தமிழழகனார்
ஆ) இரா. இளங்குமரனார்
இ) உ.வே.சாமிநாதையர்
ஈ) பெருஞ்சித்திரனார்
8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) இலக்கண வரலாறு
ஆ) தேவநேயம்
இ) தமிழிசை இயக்கம்
ஈ) தனித்தமிழ்
இயக்கம்
(விடையாக உள்ளது தவிர, ஏனையவை இளங்குமரனார் இயற்றிய நூல்கள்)
9. ‘திருவள்ளுவர் தவச்சாலையும் பாவாணர் நூலகமும்’
அமைந்துள்ள இடம்.
அ) நெல்லூர்
ஆ) பில்லூர்
இ) அல்லூர்
ஈ) நல்லூர்
10. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) ஆன் என்பது ஆ ஆனது
ஆ) பேன் என்பது பே ஆனது
இ) மான் என்பது மா ஆனது
ஈ) கோன் என்பது
கோ ஆனது
(பேய் என்பது பே ஆனது)




No comments:
Post a Comment