- மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.
- காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.
- அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான்.
- அச்சொற்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் செம்மைப்பட்டன.
- காலப்போக்கில் அவை பண்பட்டுப் பேச்சுமொழி உருவானது.
- மனிதன் தனது கருத்துக்களை தெரிவிக்க பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் “குறியீடுகளை” பொறித்து வைத்தான்.
- “குறியீடுகளே” = எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
- தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
- இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
- ஒவ்வொரு வடிவமும் ஒரு ஒலி சொல்லாக மாறியது.
- ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு ஓசையை குறித்தது.
- “ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து” என்ற உருவான நிலையே “ஒலி எழுத்து நிலை” என்பர்.
- இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
- தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
- கல்வெட்டுகள் கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
- கல்வெட்டுகள் எப்பொழுது முதல் கிடைக்கின்றன = கி.மு. (பொ.ஆ.மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல்
- செப்பேடுகள் கி.பி. (பொ.ஆ.) ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
- செப்பேடுகள் எப்பொழுது முதல் கிடைக்கின்றன = கி.பி. (பொ.ஆ.) ஏழாம் நூற்றாண்டு முதல்
- கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை கொண்டு இருவகையாகப் பிரிக்கலாம். அவை, வட்டெழுத்து, தமிழெழுத்து
- வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும்.
- வட்டெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்.
- சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன.
- எந்த நூற்றாண்டு வரை சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன = பதினொன்றாம் நூற்றாண்டு வரை.
- முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.
- கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் எப்பொழுது முதல் காணப்படுகின்றன = பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு.
- கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் = கண்ணெழுத்துகள்.
- இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” (சிலம்பு 5 : 112) என்னும் தொடரால் அறியலாம்.
- “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்ற தொடர் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம்.
- ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
- ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது.
- புள்ளி இடப்பட்டு எழுதவேண்டிய எழுத்துகள் புள்ளிகள் இல்லாமல் எழுதப்படும்போது அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.
- இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
- தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர்.
- எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார்.
- எ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாகவும் ஓ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார்.
- அதேபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு (ே), இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து (ே ா) புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
- ‘ஸ’ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது.
- மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை.
- எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
1. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை
............ என்பர்.
அ) வரி எழுத்துநிலை
ஆ) ஒலி எழுத்து நிலை
இ) வரிவடிவ நிலை
ஈ) ஒலிவடிவ நிலை
2. கல்வெட்டுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக்
கிடைக்கின்றன.
அ) கி.மு. மூன்றாம்
ஆ) கி.மு.
இரண்டாம்
இ) கி.பி. இரண்டாம்
ஈ) கி.பி மூன்றாம்
3. செப்பேடுகள் ......... நூற்றாண்டு முதல் நமக்குக்
கிடைக்கின்றன.
அ) கி. மு. மூன்றாம்
ஆ) கி.பி. மூன்றாம்
இ) கி.பி. ஆறாம்
ஈ) கி.பி. ஏழாம்
4. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும்
வரிவடிவங்களை ............ வகையாகப் பிரிக்கலாம்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
5. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து.
அ) பிராமி எழுத்து
ஆ) கண்ணெழுத்து
இ) வட்டெழுத்து
ஈ) தமிழெழுத்து
6. சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு
முதல் பதினொன்றாம் நூற்றாண்டுவரை கிடைத்த சாசனங்களில் ........... எழுத்துகளே இடம்பெற்றுள்ளன.
அ) பிராமி எழுத்து
ஆ) கண்ணெழுத்து
இ) வட்டெழுத்து
ஈ) தமிழெழுத்து
7. கடைச்சங்கக் காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட
எழுத்துகள் ....... என்று அழைக்கப்பட்டன.
அ) பிராமி எழுத்து
ஆ) கண்ணெழுத்து
இ) வட்டெழுத்து
ஈ) தமிழெழுத்து
8. ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ எனக்
கண்ணெழுத்து பற்றிக் குறிப்பிடும் இலக்கியம்.
அ) அகநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருமுறைகள்
9. பொருந்தான ஒன்றைத் தேர்ந்தெடு.
அ) கற்சிலை
ஆ) கற்பாறை
இ) செப்பேடு
ஈ) ஓலை
(விடையாக உள்ளது தவிர, ஏனையவை பழங்கலத்தில் எழுதி வைக்கப்பட்டவை)
10. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன
என்பதற்கான சான்று ............... இல் உள்ளன.
அ) கழுகுமலைக் கல்வெட்டு
ஆ) அரச்சலூர் கல்வெட்டு
இ) ஆதிச்ச நல்லூர் கல்வெட்டு
ஈ) உத்திரமேரூர் கல்வெட்டு
11. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைத்
செய்தவர்.
அ) வீரமாமுனிவர்
ஆ) பெரியார்
இ) ஜி.யு. போப்
ஈ) பெருஞ்சித்திரனார்
12. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப்
பெற .............. காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
13. .............. இல் நிறுத்தற் குறிகளும் பத்திப்
பிரித்தலும் கிடையாது.
அ) கல்வெட்டில்
ஆ) செப்பேடுகளில்
இ) ஓலைச் சுவடிகளில்
ஈ) கற்பாறைகளில்
14. எகர, ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின்
மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யாருடைய காலம் முதல் இருந்து வந்துள்ளது.
அ) அகத்தியர்
ஆ) தொல்காப்பியர்
இ) பவனந்தி முனிவர்
ஈ) வீரமாமுனிவர்
15. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக்
களைந்தவர்.
அ) வீரமாமுனிவர்
ஆ) பெரியார்
இ) ஜி.யு. போப்
ஈ) பெருஞ்சித்திரனார்




No comments:
Post a Comment