நூல் வெளி
ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
பெருநீரால் வாரி சிறக்க! இருநிலத்து
இட்ட வித்து எஞ்சாமை நாறுக! நாறார
முட்டாது வந்து மழை பெய்க! பெய்தபின்
ஒட்டாது வந்து கிளைபயில்க! அக்கிளை
பால்வார் பிறைஞ்சிக் கதிரீன! அக்கதிர்
ஏர்கெழு செல்வர் களம்நிறைக! அக்களத்துப்
போரெல்லாங் காவாது வைகுக! போரின்
உருகெழும் ஓதை வெரீஇப் பெடையோடு
நாரை பிரியும் விளைவயல்
யாணர்த் தாகஅவன் அகன்றலை நாடே!
சொல்லும் பொருளும்
- வாரி – வருவாய்
- எஞ்சாமை – குறைவின்றி
- முட்டாது - தட்டுப்பாடின்றி
- ஓட்டாது - வாட்டம்
- வைகுக - தங்குக
- ஓதை - ஓசை
- வெரீஇ - அஞ்சி
- யாணர் - புதுவருவாய்.
1. ‘தகடூர்’ என்பது
இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) தஞ்சாவூர்
ஆ) தர்மபுரி
இ) ஈரோடு
ஈ) சேலம்
2. ‘போரின், உருகெழும் ஓரை வெரீஇப் பெடையொடு, நாரை பிரியும் விளைவயல்’ என்னும் பாடலடிகள் இடம்பெற்ற நூல்.
அ) தகடூர் யாத்திரை
ஆ) கொங்குமண்டலச்
சதகம்
இ) புறத்திரட்டு
ஈ) தனிப்பாடல் திரட்டு
3. தகடூர் யாத்திரை
பாடல்கள் சில ............ என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
அ) தனிப்பாடல் திரட்டு
ஆ) தொகைப்பாடல் திரட்டு
இ) புறத்திரட்டு
ஈ) இலக்கியத் திரட்டு
4. என் நண்பன் செய்த
தொழிலில் அவனுக்கு ...... பெருகிற்று.
அ) காரி
ஆ) ஓரி
இ) வாரி
ஈ) பாரி
5. பொருந்தாத ஒன்றைக்
கண்டெடு.
அ) வாரி – வருவாய்
ஆ) வெரீஇ – மகிழ்ந்து
இ) யாணர் – புதுவருவாய்
ஈ) ஓதை – ஓசை




No comments:
Post a Comment