Breaking

Thursday, April 23, 2026

8TH TAMIL - கோணக்காத்துப் பாட்டு





அருஞ்சொற்பொருள்

  • முகில் = மேகம்
  • கொடிகலங்கி = மிக வருந்தி
  • சம்பிரமுடன் = முறையாக
  • சேகரம் = கூட்டம்
  • வின்னம் = சேதம்
  • வாகு = சரியாக
  • காலன் = எமன்
  • மெத்த = மிகவும்
  • காங்கேய நாடு = கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளில் ஒன்று

கும்மிப் பாடல்கள்

  • நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர்.
  • பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
  • புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
  • பேச்சுத் தமிழில் அமைந்த பாடல்கள் = கும்மிப் பாடல்கள்.
  • கும்மிப் பாடல்கள், “பஞ்சக் கும்மிகள்” எனவும் அழைக்கப்பட்டன.
  • “கோணக்காத்துப் பாட்டு” இயற்றியவர் = வெங்கம்பூர் சாமிநாதன்.
  • “காத்து நொண்டிச் சிந்து” என்று அழைக்கப்படுவது = கோணக்காத்துப் பாட்டு.
  • “பஞ்சக்கும்மிகள்” என்னும் நூலினை தொகுத்தவர் = புலவர் செ. இராசு.

1.      ‘பஞ்சக் கும்மிகள்’ என்னும் நூலைத் தொகுத்தவர்.

அ)    சாமிநாதன்                        

ஆ)    இராசு

இ)    ரங்கராஜன்                        

ஈ)     விநாயகன்

2.      கொங்க மண்டலத்தில் அமைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை

அ)    20            

ஆ)    24            

இ)    30           

ஈ)     35

3.      காங்கேய நாடு எந்த மண்டலத்தில் அமைந்துள்ளது.

அ)    பாண்டிமண்டலம்                  

ஆ)    சோழ மண்டலம்

இ)    கொங்கு மண்டலம்        

ஈ)     சேரமண்டலம்

4.      ‘சேகரம்’ என்பதன் பொருள்

அ)    மேகம் 

ஆ)    கூட்டம்      

இ)    சேதம் 

ஈ)     எமன்

5.      வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய ‘கோணக்காத்துப் பாட்டு’ எந்த நூலிலிருந்து எடுத்தாளப்பெற்றுள்ளது.

அ)    காத்து நொண்டிச் சிந்து            

ஆ)    சூறாவளிப் படைப்போர்

இ)    சூறாவளி நொண்டிச் சிந்து   

ஈ)     துயர நொண்டிச் சிந்து

6.      பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ……………

அ)    தொண்டைமான் நாடு        

ஆ)    ஆர்க்காடு

இ)    காங்கேய நாடு                    

ஈ)     தெத்துக்காடு

7.      கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் ……

அ)    சிவன் 

ஆ)    திருமால்     

இ)    முருகன்      

ஈ) விநாயகன்

8.      நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் …………… பாடல்களாகப் பாடினர்.

அ)    ஒப்பாரி       

ஆ)    கும்மி        

இ)    வள்ளை      

ஈ)     சடங்கு

9.      ………என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

அ)    தொண்டை நாட்டில்         

ஆ)    ஆர்க்காடு

இ)    மைசூர்                     

ஈ)     வாங்கல்

10.     ஆடவர் தம் மனைவி பிள்ளைகளுடன் ......... என்று அலறியபடி ஓடினர்.

அ)    ஐயோ...                           

ஆ)    கூகூ

இ)    ஆஆ                             

ஈ)     அம்மா....

No comments:

Post a Comment