- ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது பழமொழி. அதற்குப் பழந்தமிழர்களே சான்றுகளாக விளங்கினர்.
- காலத்தால் முற்பட்டவர்களான பழந்தமிழர் சோம்பித் திரிந்தவர் அல்லர்.
- உழைத்து உயர்ந்து வாழ்க்கையில் இன்பங்காணுவதிலேயே கண்ணுங்கருத்துமாய் விளங்கினர் என்பர்.
- அவர்கள் மலைகளுடனும் காடுகளுடனும் கடலுடனும் கலந்து உறவாடினர்
- “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் = தொல்காப்பியம்.
- தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன.
சேரர்களின் நாடு குடநாடு
- சேரர்களின் நாடு = குடநாடு.
- சேரர்களின் தலைநகரம் = வஞ்சி.
- வஞ்சி நகரம் = மேற்கு மலைத்தொடரில் துவங்கி பேரி ஆற்றங்கரை வரை அமைந்துள்ளது.
- வஞ்சி நகரின் வேறு பெயர் = கருவூர்.
- சேர நாட்டின் துறைமுகங்கள் = தொண்டி, முசிறி, காந்தளூர்.
- சேரர்களின் கொடி = விற்கொடி.
- சேரர்களின் பூ = பனம்பூ.
சேர நாட்டின் எல்லைகள்
- சேர நாடு = இன்றைய கேரளப் பகுதிகளும், தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும்.
கொங்குநாடு
- கொங்குநாடு = சேலம், கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள்.
- கொங்குநாடு பகுதிகளை ஆண்டவர்கள் = சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்தனர்.
கொங்கு மண்டலம்
- “கொங்கு மண்டலச் சதகம்” என்னும் நூலின் ஆசிரியர் = கார்மேகக் கவிஞர்.
- கொங்கு மண்டல எல்லைகளை கூறும் நூல் = கொங்கு மண்டலச் சதகம்.
- கொங்குநாடு எல்லைகள் = கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.
- இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.
- கொங்குநாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.
- ஆன்பொருநை என அழைக்கப்படும் ஆறு = அமராவதி ஆறு.
பழங்கால வணிகம்
- கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்று இருந்ததற்கு காரணம் = அந்நாட்டின் இயற்கை அமைப்பு.
- சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
- செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.
- கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேர மன்னர்கள் அடக்கினர்.
சேர நாட்டில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி
- சேர நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை = மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி
- பிற நாடுகளில் இருந்து சேர நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவை = பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை.
- சேரநாட்டில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட பொருட்களின் விவரத்தை “புறநானூறு” கூறுகிறது.
உப்பும் நெல்லும் ஒரே மதிப்பு உடையவை
- நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர்.
- பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது = நெல்.
- உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன.
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
- உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை, “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்” என்ற பாடல் இடம்பெற்ற நூல் = அகநானூறு.
- உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை கூறும் நூல் = அகநானூறு.
நீலகிரி மாவட்டம்
- கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும்.
- தோட்டப்பயிர்களான காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோசு ஆகியவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன;
- தைலமரம் (யூகலிப்டஸ்) வளர்க்கப்படுகிறது.
- நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்தது.
- புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய்த் தொழிற்சாலை ஆகியனவும் உள்ளன.
கோயம்புத்தூர்
- கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
- பயிர்த்தொழில் = நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
- தொழிற்சாலைகள் = பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
- வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் = கோயம்புத்தூர்.
திண்டுக்கல்
- பயிர் வகைகள் = நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள்
- தொழிற்சாலைகள் = அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள்
- திண்டுக்கல் மாவட்டம் மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவே “தமிழ்நாட்டின் ஹாலந்து” என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
- “தமிழ்நாட்டின் ஹாலந்து” என அழைக்கப்படும் மாவட்டம் = திண்டுக்கல்.
- திண்டுக்கல் சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள் புகழ்பெற்றவை.
ஈரோடு
- பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
- பயிர் வகைகள் = நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள்
- தொழிற்சாலைகள் = துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், நூல் நூற்பு, துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல் பதனிடுதல்.
- தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில்தான் நடைபெறுகின்றது.
திருப்பூர்
- “பின்னலாடை நகரம்” என அழைக்கபடும் நகரம் = திருப்பூர்.
- பயிர் வகைகள் = நெல், கரும்பு, பருத்தி, வாழை
- தொழிற்சாலைகள் = பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள்
- இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- “காங்கேயம் காளைகள்” இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும்.
நாமக்கல்
- பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ளன.
- பயிர் வகைகள் = நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி, மலைப்பகுதிகளில் விளையும் திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம்
- முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றது.
- தொழிற்சாலைகள் = சிமெண்ட், காகிதத் தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு, வெண்கலப் பொருள்கள்.
- சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டமாக நாமக்கல் விளங்குகிறது.
சேலம்
- “மாங்கனி நகரம்” என அழைக்கப்படும் நகரம் = சேலம்.
- பயிர் வகைகள் = நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு.
- இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில்தான் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகின்றது.
- தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் இதுவே.
- இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டமாகவும் சேலம் விளங்குகிறது.
- முலாம் பூசும் தொழிலும் பெருமளவில் நடைபெறுகிறது.
- ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கரூர்
- “வஞ்சிமாநகரம்” என அழைக்கப்பட பகுதி = கரூர் மாவட்டம்.
- கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
- பயிர் வகைகள் = நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு
- தொழிற்சாலைகள் = கல்குவாரித் தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு ஆடைகள், தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள்.
- பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.
ஊர்களும் சிறப்புப் பெயர்களும்
- தூத்துக்குடி = முத்து நகரம்
- சிவகாசி = குட்டி ஜப்பான்
- மதுரை = தூங்கா நகரம்
- திருவண்ணாமலை = தீப நகரம்
- ஏற்காடு = ஏழைகளின் ஊட்டி
- சேலம் = மாங்கனி நகரம்
- திண்டுக்கல் = தமிழ்நாட்டின் ஹாலந்து.
1. ‘வண்புகழ்
மூவர் தண்பொழில் வரைப்பு’ என மூவேந்தர்கள் பற்றிக் கூறும் நூல்.
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) தொல்காப்பியம்
ஈ) காக்கைபாடினியம்
2. முடியுடை
மூவேந்தர்களுள் பழமையானவர்கள்.
அ) சேரர்கள்
ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள்
ஈ) எவருமிலர்
3. சேரநாடு
........... நாடு எனப்பட்டது.
அ) குட
ஆ) காங்கேய
இ) கொங்கு
ஈ) மலை
4. பொருந்தாத
ஒன்றைக் கண்டெடு.
அ) கொற்கை
ஆ) தொண்டி
இ) காந்தளூர்
ஈ) முசிறி
( விடையாக வருவது தவிர ஏனையவை, சேரர்களின் துறைமுகங்கள்)
5. சேலம், கோவைப்
பகுதிகள் ........ என்று பெயர்பெற்றன.
அ) மலைநாடு (மலாடு)
ஆ) கொங்குநாடு
இ) தொண்டைநாடு
ஈ) அனைத்தும்
6. ‘கொங்கு
மண்டலச் சதகம்’ என்னும் நூலின் ஆசிரியர்.
அ) கார்மேகக் கவிஞர்
ஆ) இரட்டணை நாராயணகவி
இ) காஞ்சி சபாபதி முதலியார்
ஈ) சிதம்பரவாணர்
7. ...... வணிகத்தில்
சேரநாடு சிறப்புற்றிருந்தது.
அ) கடல்
ஆ) உப்பு
இ) குதிரை
ஈ) ஆடை
8. ‘கடம்பர்கள்’
என்பவர்கள் ....................
அ) கடல் வணிகர்கள்
ஆ) கடற்கொள்ளையர்கள்
இ) உப்பு வணிகர்கள்
ஈ) பட்டு
வணிகர்கள்
9. ‘நெல்லும்
உப்பும்’ ஒரே மதிப்புடையனவாக விளங்கியதைக் கூறும் இலக்கியம்.(நெல்லும் உப்பும் நேரே)
அ) அகநானூறு
ஆ) கலித்தொகை
இ) புறநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
10. கிழக்குத்
தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே ............. ஆகும்.
அ) நீலகிரி
ஆ) திருப்பூர்
இ) நாமக்கல்
ஈ) ஈரோடு
11. கொயம்புத்தூரின்
முந்தைய பெயர்.
அ) கோவண்புத்தூர்
ஆ) கோவன்புத்தூர்
இ) கோயன்புத்தூர்
ஈ) எதுவுமில்லை
12. ‘தமிழ்நாட்டின்
ஹாலந்து’ என்று சிறப்பிக்கப்படுவது.
அ) சேலம்
ஆ) திண்டுக்கல்
இ) கோவை
ஈ) திருப்பூர்
13. தமிழ்நாட்டின்
பரப்பளவில் இரண்டாவது பெரிய நகரம்.
அ) சேலம்
ஆ) ஈரோடு
இ) வேலூர்
ஈ) விழுப்புரம்
14. தமிழ்நாட்டிலேயே
‘மஞ்சள் சந்தை’ நடைபெறும் இடம்.
அ) சேலம்
ஆ) ஈரோடு
இ) வேலூர்
ஈ) விழுப்புரம்
15. பின்னலாடை
நகரமாகத் திகழ்வது.
அ) சேலம்
ஆ) கரூர்
இ) நாமக்கல்
ஈ) திருப்பூர்
16. இந்தியாவின்
முதல் ஆயத்த ஆடைப் பூங்கா அமைந்துள்ள இடம்.
அ) சேலம்
ஆ) கரூர்
இ) நாமக்கல்
ஈ) திருப்பூர்
17. திருப்பூரில்
அமைந்துள்ள ‘ஆயத்த ஆடைப் பூங்கா’ யாருடைய பெயரில் அமைந்துள்ளது.
அ) நேரு
ஆ) காந்தி
இ) நேதாஜி
ஈ) இந்திரா
18. தேசிய அளவில்
புகழ்பெற்ற ‘காங்கேயம்’ காளைகள் ............ மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.
அ) சேலம்
ஆ) கரூர்
இ) கோவை
ஈ) திருப்பூர்
19. ‘மாங்கனி நகரம்’
என்று சிறப்பிக்கப்படுவது.
அ) சேலம்
ஆ) கரூர்
இ) கோவை
ஈ) தர்மபுரி
20. பொருந்தாத
ஒன்றைக் கண்டெடு.
அ) கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் சேலம்
ஆ) ஜவ்வரிரி அதிக அளவு உற்பத்தி செய்யும் மாவட்டம்
சேலம்.
இ) பால் பண்ணைத் தொழில் சிறப்பாக நடைபெறுமிடம்
சேலம்
ஈ) முட்டைக்கோழி வளர்ப்பில் முதன்மையான இடம் சேலம்
21. ஏழைகளின் ஊட்டி
என்று அழைக்கப்படும் ஏற்காடு .......... மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அ) சேலம்
ஆ) கரூர்
இ) கோவை
ஈ) தர்மபுரி
22. ‘கிரேக்க அறிஞர்
தாலமி’ தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிடுவது.
அ) சேலம்
ஆ) கரூர்
இ) கோவை
ஈ) தர்மபுரி
23. பொருந்தாத
ஒன்றைக் கண்டெடு.
அ) தூத்துக்குடி – முத்து நகரம்
ஆ) சிவகாசி
– குட்டி ஜப்பான்
இ) ஈரோடு – கரும்பு நகரம்
ஈ) மதுரை – தூங்கா நகரம்
24. பொருந்தாத
ஒன்றைக் கண்டெடு.
அ) சேலம் - தமிழநாட்டின் ஹாலந்து
ஆ) நாமக்கல் – முட்டைக்கோழி வளர்ப்பு
இ) கரூர் – பேருந்து கட்டுமானத் தொழிற்சாலை
ஈ) ஈரோடு – மஞ்சள் சந்தை
25. சேரர்களின்
தலைநகரம் .......
அ) காஞ்சி
ஆ) வஞ்சி
இ) தொண்டி
ஈ) முசிறி
26. பழங்காலத்தில்
விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது.
அ) புல்
ஆ) நெல்
இ) உப்பு
ஈ) மிளகு
27. ஆன்பொருநை
என்று அழைக்கப்படும் ஆறு.
அ) நொய்யல்
ஆ) பவானி
இ) அமராவதி
ஈ) காவிரி
28. வீட்டு உபயோகப்
பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
அ) சேலம்
ஆ) திண்டுக்கல்
இ) கோயம்புத்தூர்
ஈ) திருப்பூர்
29. சுங்குடிச்
சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர்.
அ) சிலுக்குவார்பட்டி
ஆ) சின்னாளப்பட்டி
இ) பாப்பாரப்பட்டி
ஈ) திருப்பூர்
30. ‘சிற்றுந்து,
சரக்குந்து’ ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டம்.
அ) சேலம்
ஆ) திண்டுக்கல்
இ) நாமக்கல்
ஈ) திருப்பூர்




No comments:
Post a Comment