Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - எச்சம்



  • படித்தான், படித்த, படித்து மேற்கண்ட சொற்களில் படித்தான் என்ற சொல்லில் பொருள் முற்றுப் பெற்றுள்ளது.
  • ஆனால் படித்த, படித்து என்ற சொற்களில் பொருள் முற்றுப் பெறவில்லை.
  • பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல், “எச்சம்” எனப்படும்.
  • எச்சம் மூன்று வகைப்படும். அவை, பெயரெச்சம், வினையெச்சம், முற்றெச்சம்
  • எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் அது “பெயரெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
      • படித்த மாணவன்.
      • படித்த பள்ளி.
  • பெயரெச்சம் மூன்று காலங்களிலும் வரும்.
  • எ.கா:
      • பாடிய பாடல் = இறந்தகாலப் பெயரெச்சம்
      • பாடுகின்ற பாடல் = நிகழ்காலப் பெயரெச்சம்
      • பாடும் பாடல் = எதிர்காலப் பெயரெச்சம்
  • செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் பெயரெச்சம் “தெரிநிலைப் பெயரெச்சம்” எனப்படும்.
  • எ.கா;
    • எழுதிய கடிதம்
  • இதில் “எழுதிய” = எழுதுதல் என்ற செயலையும், இறந்த காலத்தையும் வெளிப்படையாக காட்டுகிறது.
  • ஒரு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் “குறிப்புப் பெயரெச்சம்” எனப்படும்.
  • எ.கா;
    • சிறிய கடிதம்
  • இதில் “சிறிய” என்னும் சொல் செயலையோ, காலத்தையோ வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் காட்டுகிறது.
  • வினையை (செயலை) கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
  • எ.கா: படித்து முடித்தான், படித்து வியந்தான்.
  • செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் வினையெச்சம் “தெரிநிலை வினையெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
    • எழுதி வந்தான்
  • இதில் “எழுதி” என்ற சொல் எழுதுதல் என்ற செயலையும், இறந்த காலத்தையும் வெளிப்படையாக காட்டுகிறது.
  • ஒரு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் வினையெச்சம் “குறிப்பு வினையெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
    • மெல்ல வந்தான்
  • இத்தொடரில் “மெல்ல” என்னும் சொல் காலத்தை வெளிப்படையாக காட்டாமல் “மெல்ல” என்ற பண்பினை மட்டுமே வெளிப்படையாக காட்டுகிறது.
  • ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது “முற்றெச்சம்” எனப்படும்.
  • எ.கா:
    • வள்ளி படித்தனள்
  • இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் “படித்தாள்” என்னும் வினைமுற்றுப் பொருளை தருகிறது.
  • எ.கா:
    • வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்
  • இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.

1.             முற்று பெறாத வினை ........ எனப்படும்.

அ)          முற்று                                                   

ஆ)         எச்சம் 

இ)          முற்றெச்சம்                                                     

ஈ)           வினையெச்சம்

2.             எச்சம் ............ வகைப்படும்.

அ)          இரண்டு             

ஆ)         மூன்று 

இ)          நான்கு 

ஈ)           ஒன்பது

3.             ‘படித்த மாணவன்’ – என்பது ...............

அ)          தெரிநிலை பெயரெச்சம்        

ஆ)         குறிப்பு பெயரெச்சம்   

இ)          தெரிநிலை வினையெச்சம்     

ஈ)           குறிப்பு வினையெச்சம்

4.             ‘சிரிய கடிதம்’ – என்பது ...............

அ)          தெரிநிலை பெயரெச்சம்           

ஆ)         குறிப்பு பெயரெச்சம் 

இ)          தெரிநிலை வினையெச்சம்     

ஈ)           குறிப்பு வினையெச்சம்

5.             ‘எழுதி வந்தான்’ – என்பது ...............

அ)          தெரிநிலை பெயரெச்சம்           

ஆ)         குறிப்பு பெயரெச்சம்   

இ)          தெரிநிலை வினையெச்சம்   

ஈ)           குறிப்பு வினையெச்சம்

6.             ‘மெல்ல வந்தான்’ – என்பது ...............

அ)          தெரிநிலை பெயரெச்சம்           

ஆ)         குறிப்பு பெயரெச்சம்   

இ)          தெரிநிலை வினையெச்சம்     

ஈ)           குறிப்பு வினையெச்சம்

7.             ‘படித்தான் மகிழ்ந்தான்’ – என்பது ...............

அ)          பெயரெச்சம்                                    

ஆ)         வினையெச்சம்              

இ)          முற்றெச்சம்                                                    

ஈ)           குறிப்பு வினையெச்சம்

8. ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது.......... எனப்படும்.

அ)          பெயரெச்சம்                                    

ஆ)         வினையெச்சம்              

இ)          முற்றெச்சம்                                                    

ஈ)           குறிப்பு வினையெச்சம்

9.             குறிப்பு வினையெச்சம் ............. வெளிப்படையாகக் காட்டாது.

அ)          காலத்தை         

ஆ)         வினையை        

இ)          பண்பினை        

ஈ)           பெயரை

10.          கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ................

அ)          படித்து 

ஆ)         பார்த்த               

இ)          எழுதி                    

ஈ)           வந்து

No comments:

Post a Comment