- ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது = அகராதி.
- ஒரு பொருள் குறித்த அணைத்து விவரங்களையும் அறிந்துக் கொள்ள பயன்படுவது = கலைக்களஞ்சியம்.
- கலைக்களஞ்சியத்தில் பெரும்பாலும் தகவல்கள் அகர வரிசையில் அமைந்திருக்கும்
- நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலை = இசை.
- இசைக்கலை வெளிப்படுத்தும் சுவைகள் = ஒன்பது.
- இசையை இரண்டாக பிரிப்பர். அவை, குரல்வழி இசை, கருவிவழி இசை.
- இசையின் இனிமைக்கு துணை செய்பவை = இசைக்கருவிகள்.
- இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் = பாணர்.
- நல்லியாழ் மருப்பின் மெல்ல வங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
- இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை, தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி.
- விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள்.
- எ.கா: முழவு, முரசு, உடுக்கை, குடமுழா, திமிலை, பறை
- நரம்பு அல்லது தந்திகளை உடையவை.
- தந்திகளை கொண்டு உருவாக்கப்படும் இசைக்கருவி = நரம்புக்கருவி
- எ.கா: யாழ், வீணை
- காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை
- எ.கா: குழல், சங்கு, கொம்பு
- ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை, கஞ்சக்கருவி எனப்படும்.
- எ.கா: சாலரா, சேகண்டி
- உடுக்கை ஒரு தோல்கருவி.
- உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு “கைப்பறை” ஆகும்.
- பித்தளையால் ஆனது.
- வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் பொருத்தப்பட்டிருக்கும்.
- இரு வாய்களையும் இணைக்கும் கயிறு இடையில் கட்டப்பட்டிருக்கும்.
- வலது வாயின் மீதுதான் அடிப்பர்.
- பெரிய உடுக்கையை “தவண்டை” என்பர்.
- “தவண்டை” என்பது பெரிய உடுக்கை.
- சிறிய உடுக்கையை “குடுகுடுப்பை” என்பர்.
- தில்லை நடராசரின் கைகளில் இந்த குடுகுடுப்பையை காணலாம்.
- இறை வழிபாடு, குறிசொல்லும் பொழுது இதனை பயன்படுத்துவர்.
- “தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தேவாரம் (திருஞானசம்பந்தர்).
- “தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்” என்று கூறியவர் = திருஞானசம்பந்தர்.
- குடமுழா ஒரு தோல் கருவி ஆகும்.
- இது முரசு வகை கருவி ஆகும்.
- ஐந்து முகங்களை உடைய முரசு வகை கருவி.
- ஐந்து வட்டவடிவ வாய்களுடன் ஒரு பெரிய குடத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
- நடுவில் உள்ள வாய் மற்றவற்றை விட பெரியதாக இருக்கும்.
- வாய்ப்பகுதி தோலால் மூடப்பட்டிருக்கும்.
- ஐந்து வாயில் இருந்து ஐந்து வகை இசை பிறக்கும்.
- குடமுழா கருவியை “பஞ்சமகா சப்தம்” என்று அழைப்பர்.
- “பஞ்சமகா சப்தம்” என்று அழைக்கப்படும் கருவி = குடமுழா.
- சென்னை அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- குழல் ஒரு காற்றுக்கருவி ஆகும்.
- மூங்கில், சந்தானம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களில் இருந்து உருவாக்கப்படுகிறது குழல்.
- இதனை “வேய்ங்குழல், புல்லாங்குழல்” என்றும் அழைப்பர்.
- ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு ஏற்ப ஏழு துளைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
- குழல் கருவியின் நீளம் = இருபது விரல்.
- குழல்களின் வகைகளை கூறிய நூல் = சிலப்பதிகாரம்.
- “கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல்” என்று பலவகையான குழல்களின் செய்திகளை கூறும் நூல் = சிலப்பதிகாரம்.
- “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” என்று வள்ளுவர் கூறுகிறார்.
- கொம்பு ஒரு காற்றுக்கருவி ஆகும்.
- இறந்த மாடுகளின் கொம்புகளில் இருந்து உருவாக்கப்படும் இசைக்கருவி.
- தற்போது “பித்தளை அல்லது வெண்கலம்” கொண்டு இக்கருவி உருவாக்கப்படுகிறது.
- வேடர்கள் வேட்டையின் போது ஊதும் கருவி = கொம்பு.
- திருடர்கள், விலங்குகளை விரட்டவும் இக்கருவி ஊதப்படுகிறது.
- கொம்பின் வகைகள் = ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்துரி.
- எக்காளம் என்பது கொம்பு வகை இசைக்கருவி ஆகும்.
- சிங்கநாதம் என்பது கொம்பு வகை இசைக்கருவி ஆகும்.
- துத்துரி என்பது கொம்பு வகை இசைக்கருவி ஆகும்.
- சங்கு ஒரு இயற்கை கருவி ஆகும்.
- சங்கு ஒரு காற்றுக்கருவி ஆகும்.
- சங்கு “வலது” புறம் சுழிந்து இருக்கும்.
- அதனால் சங்கை “வலம்புரிச்சங்கு” என்று கூறுவர்.
- சங்கின் ஒலியை “சங்கநாதம்” என்பர்.
- இலக்கியங்களில் சங்கின் ஒலியை “பணிலம்” என்பர்.
- “பணிலம்” என்பது சங்கின் ஒலியாகும்.
- “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருப்பாவை (ஆண்டாள்).
- சாலரா ஒரு கஞ்சக்கருவி ஆகும்.
- பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படும் கருவி இது.
- உட்புறம் குவிந்து இருக்கும் கருவி = சாலரா.
- சாலரா கருவியை “பாண்டில்” எனவும் அழைப்பர்.
- “பாண்டில்” என அழைக்கப்படும் கருவி = சாலரா (ஜால்ரா).
- கோவில் கூட்டு வழிபாடு, இன்னிசை அரங்குகளில் இசைக்கப்படும் இன்றியமையாத கருவி.
- இக்கருவியை தற்காலத்தில் “ஜால்ரா” என்பர்.
- சேகண்டி ஒரு கஞ்சக்கருவி ஆகும்.
- வட்ட வடிவமான “மணி வகையை” சேர்ந்த இசைக்கருவி = சேகண்டி.
- குச்சி, இரும்புத் துண்டி கொண்டு அடித்து ஒலி எழுப்புவர்.
- தேவைக்கு ஏற்ப பல அளவுகளில் உருவாக்கப்படும்.
- சேகண்டி கருவியை “சேமங்கலம்” என்றும் கூறுவர்.
- சேமங்கலம் என்று அழைக்கப்படும் இசைக்கருவி = சேகண்டி.
- இறுதி ஊர்வலத்தின் போது இசைக்கப்டும் கருவி இது.
- திமிலை ஒரு தோல்கருவி ஆகும்.
- பலா மரத்தினால் செய்யப்படும் கருவி = திமிலை.
- விலங்குத் தோலால் கட்டப்படும் கருவி இது.
- “மணல் கடிகார” வடிவில் அமைக்கப்படும் இசைக்கருவி = திமிலை.
- “பாணி” என அழைக்கபடும் இசைக்கருவி = திமிலை.
- “சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி” என்ற அடி இடம்பெற்றுள்ள நூல் = பெரியபுராணம்.
- “வியன்துடி திமிலை தட்டி” என்ற அடி இடம்பெற்றுள்ள நூல் = பெரியபுராணம்.
- பறை ஒரு தோல் கருவி ஆகும்.
- விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி இது.
- பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க “கோட்பறையை” பயன்படுத்தினர்.
- ஆநிரைகளை கவர்ந்து வர “ஆகோட்பறையை” முழங்குவர்.
- பறையை “தப்பு” எனவும் கூறுவர்.
- பறையை இசைத்துக்கொண்டே ஆடும் ஆட்டம் “தப்பாட்டம்” எனப்படும்.
- மத்தளம் ஒரு வகை தோல் கருவி ஆகும்.
- “மத்து” என்பது = ஓசையின் பெயர்.
- இசைக்கருவிகளுக்கு எல்லாம் அடிப்படை = தளம்.
- மத்து + தளம் = மத்தளம்.
- மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் “அடியார்க்கு நல்லார்”.
- இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்டும்.
- மத்தளத்தை “முதற்கருவி” என்பர்.
- முதற்கருவி எனப்படும் இசைக்கருவி = மத்தளம்.
- தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் பெயரும் உள்ளது.
- “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நாச்சியார் திருமொழி.
- “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்” என்று பாடியவர் = ஆண்டாள்.
- முரசு ஒரு தோல்கருவி ஆகும்.
- தமிழர்களின் போர்களில் பயன்படுத்தப்படும் முதன்மையான இசைக்கருவி = முரசு.
- தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது = முரசு.
- முரசு மூன்று வகைப்படும். அவை,
- படைமுரசு
- கொடைமுரசு
- மணமுரசு
- தமிழ் மக்களிடம் “முப்பத்தாறு” வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக “சிலப்பதிகாரம்” கூறுகிறது.
- தமிழ் மக்களிடம் “முப்பத்தாறு” வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல் = சிலப்பதிகாரம்.
- “மாக்கண் முரசம்” என்று முரசு பற்றி குறிப்பிடும் நூல் = மதுரைக்காஞ்சி.
- முழவு ஒரு தோல் கருவி ஆகும்.
- முழவு, “முரசு” வகையை சேர்ந்த தோல் கருவி ஆகும்.
- ஒரே முகத்தை உடைய கருவி = முழவு.
- ஒரே பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவி = முழவு.
- இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர்.
- “மண்ணமை முழவு” என்று கூறும் நூல் = பொருநராற்றுப்படை.
- காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவுகள் = நாழிகை முழவு, காலை முழவு.
- “கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
- யாழ் ஒரு நரம்புக் கருவி ஆகும்.
- வேட்டுவர் (வேடர்) வில்லை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இசைக் கருவி = யாழ்.
- மிகப்பழமையான யாழ் கருவிகள் = பேரியாழ், செங்கோட்டியாழ்.
- யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது.
- இருபத்தொரு நரம்புகளை கொண்ட யாழ் = பேரியாழ்.
- பத்தொன்பது நரம்புகளை கொண்ட யாழ் = மகரயாழ்.
- மீன் வடிவில் அமைந்த யாழ் = மகரயாழ்.
- பதினான்கு நரம்புகளை கொண்ட யாழ் = சகோடயாழ்.
- யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து வீணையாக மாறியது என்பர்.
- வீணை ஒரு நரம்புக் கருவி ஆகும்.
- யாழ் போன்ற அமைப்பை உடைய இசைக்கருவி = வீணை.
- வீணை “ஏழு நரம்புகளைக்” கொண்டது.
- வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை = ஏழு.
- இரு கைகளால் வாசிக்கும் கருவி.
- இடது கை விரல்களால் நர்மபுகளை அமுக்கியும், வலது கை விரல்களால் கம்பிகளை மீட்டியும் இசைக்க வேண்டும்.
- நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை, வீணையின் தண்டு, குடம் ஆகியவை ஓசையை பெருக்கி அனுப்புகின்றன.
- மகேந்திரவர்ம பல்லவன் பயன்படுத்திய வீணை = பரிவாதினி என்னும் வீணை வகை.
1. இசை
............ வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
2. இசைக் கருவிகள்
............ வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
3. இசைக்கருவிகளை
இசைத்து பாடல் பாடுவோர் .......... எனப்பட்டனர்.
அ) பாணர்
ஆ) விரலியர்
4. ‘தண்டுடுக்கை
தாளந்தக்கை சாரநடம் பயில்வார்’ என்ற உடுக்கை குறித்த பாடலைப் பாடியவர்.
அ) திருஞானசம்பந்தர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
5. .......
முகங்களை உடைய முரசு வகையைச் சார்ந்தது குடமுழா.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
6. ‘கொன்றைக்குழல்,
முல்லைக்குழல், ஆம்பல்குழல்’ எனப் பலவகையானக் குழல்கள் இருப்பதைக் கூறும் நூல்.
அ) கலித்தொகை
ஆ) பதிற்றுப்பத்து
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருவாசகம்
7. பொருந்தாத
ஒன்றைக் கண்டெடு.
அ) பணிலம் – சங்கு
ஆ) பாண்டில் – சாலரா
இ) சேமங்கலம் – சேகண்டி
ஈ) பாணி – முழவு (பாணி – திமிலை)
8. மணல் கடிகார
வடிவத்தில் அமைந்திருக்கும் இசைக்கருவி.
அ) திமிலை
ஆ) சாலரா
இ) முழவு
ஈ) மத்தளம்
9. ‘முதற்கருவி’
என்று அழைக்கப்படுவது.
அ) திமிலை
ஆ) சாலரா
இ) முழவு
ஈ) மத்தளம்
10 தமிழ் மக்களிடம்
............... வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
அ) பத்து
ஆ) பதினாறு
இ) முப்பத்தாறு
ஈ) நாற்பது
11. முரசினை ’மாக்கண்
முரசம்’ எனக் குறிப்பிடும் நூல்.
அ) கலித்தொகை
ஆ) பதிற்றுப்பத்து
இ) மதுரைக்காஞ்சி
ஈ) சிலப்பதிகாரம்
12. முழவினை ‘மண்ணமை
முழவு’ எனக் குறிப்பிடும் நூல்.
அ) கலித்தொகை
ஆ) பதிற்றுப்பத்து
இ) புறநானூறு
ஈ) பொருநராற்றுப்படை
13. ‘கரைஉணக் கிழிந்த
முழவுமருள் பெரும்பழம்’ எனக் குறிப்பிடும் நூல்.
அ) கலித்தொகை
ஆ) பதிற்றுப்பத்து
இ) புறநானூறு
ஈ) பொருநராற்றுப்படை
14. பொருந்தாத
ஒன்றைக் கண்டெடு.
அ) வீனை – ஏழு நரம்புகளைக் கொண்டது
ஆ) பேரியாழ் - இதுபத்தொரு நரம்புகள் கொண்டது.
இ) மகரயாழ் – பத்தொன்பது நரம்புகள் கொண்டது.
ஈ) சகோடயாழ் – பதினான்கு நரம்புகள் கொண்டது.
(விடையாக
வருவது தவிர, ஏனையவை யாழ் வகையைச் சார்ந்தவை)
15. மீன் வடிவம்
கொண்ட யாழ் எது?
அ) செங்கோட்டுயாழ்
ஆ) பேரியாழ்
இ) மகரயாழ்
ஈ) சகோடயாழ்.




No comments:
Post a Comment