தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை
- தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் = அயோத்திதாச பண்டிதர்.
- சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் = அம்பேத்கர், பெரியார்.
- பெரியார், அம்பேத்கர் ஆகியோர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
அயோத்திதாசர் வாழ்க்கை குறிப்பு
- பிறந்த நாள் = 20.05.1845
- பிறந்த ஊர் = சென்னை.
- அயோத்திதாசரின் இயற்பெயர் = காத்தவராயன்.
- இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்.
- இவர் “அயோத்திதாசப் பண்டிதர்” என்பவரிடம் கல்வியும், சித்த மருத்துவமும் பயின்றார்.
- காத்தவராயன் யாரிடம் சித்த மருத்துவம் பயின்றார் = அயோத்திதாசப் பண்டிதர்.
- தம்மீது அன்பு காட்டிய ஆசிரியர் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார்.
பர்மா தமிழர்கள்
- சிறிது காலம் நீலகிரி சென்று வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்கு பின்பு பர்மா சென்று வாழ்ந்தார்.
- பர்மாவில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டார் அயோத்திதாசர்.
சிந்தனைகளின் அடித்தளம்
- அயோத்திதாசர் அறிந்த மொழிகள் = தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம்.
- அயோத்திதாசர் கற்றறிந்த துறைகள் = இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத் தத்துவம்.
ஒருபைசாத்தமிழன்
- அயோத்திதாசர் துவக்கிய இதழின் பெயர் = ஒருபைசாத்தமிழன்,
- ஒருபைசாத்தமிழன் இதழ் துவங்கப்பட்ட ஆண்டு = 1907 (சென்னை).
- அயோத்திதாசர் ஒரு வருடத்திற்கு பிறகு (1908) “ஒருபைசாத்தமிழன்” இதழை “தமிழன்” என்று பெயர் மாற்றம் செய்தார்.
பகுத்தறிவு ஊட்டல்
- அயோத்திதாசர் தமது “தமிழன்” இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுத் சிந்தனை, இன உணர்வு, சமோகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.
கல்வி அறிவு அவசியம்
- “ஒரு மனிதன் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம்” என்று கருதியவர் அயோத்திதாசர்.
- “நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளிவீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்படவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
- “மரம் வளர்த்தல்” பற்றி கற்க வேண்டும் என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
- “சங்ககாலப் பெண்களைப்போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும்
- “ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
- “நல்ல நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
மக்களும் மழையும்
- மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் ஒழுக்கம் தொடர்பான கருத்துக்களை கூறியுள்ளார்.
- “நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது” எனக் கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
திராவிட மகாஜன சங்கம்
- அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
- “திராவிட மகாஜன சங்கத்தை” துவக்கியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
- “திராவிட மகாஜன சங்கத்தை” அயோத்திதாசர் துவக்கிய ஆண்டு = 1892.
அரசியல் விடுதலையும் மக்கள் உரிமையும்
- “விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
- “சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
- “மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
தனித்தன்மை உடைய சிந்தனையாளர்
- பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறைகொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் = அயோத்திதாசர்.
- அயோத்திதாசரை, அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளராக மதித்தனர்.
ஒரு நாட்டின் தலைவன்
- ஒரு நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றவனாக விளங்குதல் வேண்டும்.
- அவன் அறம் அல்லாதவற்றை நீக்கி, அறத்தை நிலைநிறுத்த வேண்டும் எனக் கூறுகிறார் அயோத்திதாசர்.
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்
- அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் = போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்திரனச் சுருக்கம், பாலவாகடம்.
பெரியாரின் முன்னோடி
- “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்” என்று கூறியவர் தந்தை பெரியார்
- தந்தை பெரியாருக்கு முன்னோடியாக இருந்தவர்கள் = பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும்.
அயோத்திதாசர் எழுதிய நூல்கள்
- அயோத்திதாசர் எழுதிய நூல்கள் = புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன.
- திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை
- சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ள இடம் = சென்னை தாம்பரம்.
1. ‘தென்னிந்தியச்
சமூக சீர்திருத்தத்தின் தந்தை’ எனப் போற்றப்படுபவர்.
அ) அயோத்திதாசர்
ஆ) பெரியார்
இ) அண்ணா
2. அயோத்திதாசரின் இயற்பெயர். - காத்தவராயன்
3. ‘ஒருபைசாத்
தமிழன்’ என்பது அயோத்திதாசர் நடத்திய ......... இதழ்.
அ) நாள்
ஆ) வார
இ) மாத
ஈ)
காலாண்டு
4. ‘என் பகுத்தறிவுப்
பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி
அயோத்திராசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்’ என்று கூறியவர்.
அ) பெரியார்
ஆ) அம்போத்கர்
இ) அண்ணா
ஈ) கலைஞர்
5. ‘வானம் பொய்ப்பதற்குக் காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இன்மையே’ என்று கூறியவர். - அயோத்திதாசர்
6. திருவள்ளுவர்,
ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை
எழுதியவர்.
7. ‘திராவிட
மகாஜன சங்கம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர்.
8. ‘திராவிட
மகாஜன சங்கம்’ என்னும் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.
அ) 1845
ஆ) 1892
இ) 1907
ஈ) 1910
9. ‘அயோத்திதாசர் பெயரில் அமைந்த மருத்துவமனை எங்கு அமைந்துள்ளது?
அ) செங்கல்பட்டு
ஆ) தாம்பரம்
இ) பல்லாவரம்
ஈ) இராயப்போட்டை
10. பொருந்தாத
ஒன்றைக் கண்டெடு.
அ) புத்தரது ஆதிவேதம்
ஆ) இந்திரர் தேச சரித்திரம்
இ) பாலவாகடம்
ஈ) விவாக விளக்கம்
( விடையாக வருவது தவிர ஏனையவை, அயோத்திதாசரின் இலக்கியங்கள்)




No comments:
Post a Comment