மாகாணி, வீசம்
- மாகாணி, வீசம் போன்றவை அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப்பெயர்களாகும்.
- அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும்.
- பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய்.
- அதனால்தான் இன்றும் பேச்சுவழக்கில் அரை ரூபாயை எட்டணா என்றும் கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றனர்.
சிறுகதை மன்னன்
- சிறுகதை மன்னன் என போற்றப்படுபவர் = புதுமைப்பித்தன்.
- சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
- சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
- நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
- சில திரைப்படங்களுக்குக் கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.
- புதுமைப்பித்தனின் சிறுகதைகள் = மனித யந்திரம், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒருநாள் கழிந்தது போன்றன இவரது சிறுகதைகளுள் புகழ்பெற்றவை.
1. பதினாறு அணா கொண்டது
................
அ) ஒரு ரூபாய் ஆ) இரண்டு ரூபாய்
இ) ஐந்து ரூபாய் ஈ) பத்து ரூபாய்
2. ‘மனித யந்திரம்’
என்பது யாருடைய சிறுகதை.
அ) கு.பா.ராசகோபாலன் ஆ) புதுமைப்பித்தன்
இ) பி.ச குப்புசாமி ஈ) கன்னிவாடி
சீ. சிவக்குமார்
3. ‘சிறுகதை மன்னன்’
என்று அழைக்கப்படுபவர்?
அ) கு.பா.ராசகோபாலன் ஆ) புதுமைப்பித்தன்
இ) ஞானி
4. புதுமைப் பித்தனின் இயற்பெயர். - சொ. விருத்தாசலம்
5. பொருந்தாத ஒன்றைக்
கண்டெடு.
அ) குணச்சித்திரங்கள் ஆ) சாபவிமோசனம்
இ) ஒருநாள் கழிந்தது ஈ) பொன்னகரம்
( விடையாக வருவது தவிர ஏனையவை, புதுமைப்பித்தனின் சிறுகதைகள்)




No comments:
Post a Comment