தன்வினை என்றால் என்ன
- “எழுவாய்” ஒரு வினையை (செயல்) செய்தால் அது தன்வினை எனப்படும்.
- எ.கா;
- பந்து உருண்டது.
பிறவினை என்றால் என்ன
- “எழுவாய்” ஒரு வினையை செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.
- எ.கா:
- உருட்ட வைத்தான்.
- பிறவினைகள் “வி, பி” போன்ற “விகுதி”களைக் கொண்டும் “செய், வை, பண்ணு” போன்ற “துணை வினைகளை” இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.
செய்வினை என்றால் என்ன
- செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை “செய்வினை” எனப்படும்.
- எ.கா:
- அப்பா சொன்னார்.
- பாட்டு பாடுகிறாள்.
செயப்பாட்டுவினை என்றால் என்ன
- செயப்படுபொருளை முதன்மைப் படுத்தும் வினை செயப்பாட்டு வினை எனப்படும்.
- எ.கா:
- தோசை வைக்கப்பட்டது.
- பாட்டுப் (அவளால்) பாடப்பட்டது.
செய்வினை செயப்பாட்டுவினை
- செயப்பாட்டுவினைத் தொடரில் சேரும் “துணைவினைகள்” = படு, உண், பெறு, ஆயிற்று, போயிற்று, போனது.
- எ.கா:
- கோவலன் கொலையுண்டான்.
- ஓவியம் குமாரனால் வரையப்பட்டது.
- வீடு கட்டியாயிற்று.
- சட்டி உடைந்து போயிற்று.
- பணம் காணாமல் போனது.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. இத்தொடரிலுள்ள வினைமுற்று --------
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்தது
[விடை : ஈ) மேய்ந்தது]
2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
[விடை : அ) படித்தான்]
3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
[விடை : ஆ) ஓடு]




No comments:
Post a Comment