Breaking

Saturday, April 18, 2026

8TH TAMIL - தமிழ்மொழி வாழ்த்து


வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே! -  பாரதியார்

சொல்லும் பொருளும்

நிரந்தரம் - காலம் முழுமையும்
வைப்பு - நிலப்பகுதி
சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
வண்மொழி - வளமிக்கமொழி
இசை - புகழ்
தொல்லை - பழமை, துன்பம்

1.       ‘சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம்பாடவந்த மறவன்’ என்றெல்லாம் பாரதியாரைப் புகழ்ந்தவர்.

)     பாரதிதாசன்                       

)    சுரதா

)     வாணிதாசன்                       

)      து. அரங்கன்

2.       பாரதியாரின் உரைநடை நூல் எது?

          அ)     பூலோகரம்பை                     

          ஆ)    சந்திரிகையின் கதை

          இ)     சின்ன சங்கரன் கதை        

           ஈ)      ஆறில் ஒரு பங்கு 

3.       ‘மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே – என்ற பாடலடியைப் பாடியவர்.

)     பாரதிதாசன்                         

)    சுரதா

)     வாணிதாசன்                       

)      து. அரங்கன்

4.       ‘வைப்பு’ -  என்பதன் பொருள்

அ)     நிலப் பகுதி                         

ஆ)    கடல் பகுதி

இ)     காட்டுப் பகுதி                      

ஈ)      மலைப் பகுதி

5.       பாரதியார் நடத்திய இதழின் பெயர் எது?

          அ)     குயில்                                     

          ஆ)    விஜயா    

இ)     அகரம்                                    

ஈ)      அக்கினி


No comments:

Post a Comment