Breaking

Saturday, April 18, 2026

9TH TAMIL - யாப்பிலக்கணம்


யாப்பின் ஆறு உறுப்புகள்
  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை 
அசை - இரண்டு
  1. நேரசை
  2. நிரையசை
நேரசை
  • தனிக்குறில் - ப
  • தனிக்குறில், ஒற்று - பல்
  • தனிநெடில் - பா
  • தனிநெடில், ஒற்று - பால்
நிரையசை
  • இருகுறில் - அணி
  • இருகுறில், ஒற்று - அணில்
  • குறில், நெடில் - விழா
  • குறில், நெடில், ஒற்று - விழார்
சீர் - நான்கு
  1. ஓரசைச்சீர்
  2. ஈரசைச்சீர்
  3. மூவசைச்சீர்
  4. நாலசைச்சீர்
ஓரசைச் சீர்

அசை வாய்பாடு
  • நேர் - நாள்
  • நிரை - மலர்
  • நேர்பு - காசு
  • நிரைபு – பிறப்பு

தளை

பாடலில், நின்ற சீரின் ஈற்றசையும், அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் தளை எனப்படும். இது ஒன்றியும் ஒன்றாமலும் வரும். அது ஏழு வகைப்படும்.

1. நேரொன்றாசிரியத்தளை - மா முன் நேர்
2. நிரையொன்றாசிரியத்தளை - விளம் முன் நிரை
3. இயற்சீர் வெண்டளை - மா முன் நிரை, விளம் முன் நேர்
4. வெண்சீர் வெண்டளை - காய் முன் நேர்
5. கலித்தளை - காய் முன் நிரை
6. ஒன்றிய வஞ்சித்தளை - கனி முன் நிரை
7. ஒன்றா வஞ்சித்தளை - கனி முன் நேர்

அடி

இரண்டும் இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது' அடி' எனப்படும். அவை ஐந்து வகைப்படும்.

இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி; 
மூன்று சீர்களைக் கொண்டது சிந்தடி; 
நான்கு சீர்களைக் கொண்டது அளவடி; 
ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடி; 
ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது கழிநெடிலடி.

தொடை

தொடை - தொடுத்தல். பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது 'தொடை' ஆகும். தொடை என்னும் செய்யுள் உறுப்பு, பாடலில் உள்ள அடிகள் தோறும் அல்லது சீர்கள் தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை பொருந்தி வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.

மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடை என்று எட்டு வகைகளாகத் தொடை அமைகிறது.

மோனைத் தொடை: ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி அமைவது. (எ.கா.)

ற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ற்றினால் ஒற்றிக் கொளல்.

எது கைத் தொடை: அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது. (எ.கா.)

தினல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
னல்ல செய்யாமை நன்று.

இயைபுத் தொடை: அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது. (எ.கா.)

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

1. யாப்புறுப்புகள் ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) நான்கு  

இ) ஆறு  

ஈ) ஏழு

2. அசை ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) ஆறு  

ஈ) ஏழு

3. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ) இயற்சீர் 

ஆ) வெண்சீர் 

இ) மாச்சீர் 

ஈ) விளச்சீர்

4. நாலசைச்சீர் ..............

அ) நான்கு 

ஆ) ஏழு  

இ) எட்டு  

ஈ) பதினாறு

5. ‘வெண்சீர்’ ....... என அழைக்கப்படுவது.

அ) மாச்சீர் 

ஆ) விளச்சீர் 

இ) காய்ச்சீர் 

ஈ) கனிச்சீர்

6. தளை ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) ஆறு  

ஈ) ஏழு

7. ‘கனிமுன் நிரை’ வருவது ................

அ) இயற்சீர் வெண்டளை  

ஆ) வெண்சீர் வெண்டளை

இ) ஒன்றிய வஞ்சித்தளை  

ஈ) ஒன்றாத வஞ்சித்தளை

8. அடி ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) ஐந்து  

இ) ஆறு  

ஈ) ஏழு

9. தொடை ............. வகைப்படும்.

அ) இரண்டு 

ஆ) மூன்று 

இ) ஆறு  

ஈ) எட்டு

10. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது.

அ) சிந்தடி    

ஆ) அளவடி

இ) நெடிலடி    

ஈ) கழிநெடிலடி

No comments:

Post a Comment