
தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென
முயலுநர் உண்மையானே (புறநானூறு - 182)
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" – வள்ளலார்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை - அன்னை தெரசா
குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. - கைலாஷ் சத்யார்த்தி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென, முயலுநர் உண்மையானே என்று கூறும் நூல்.
அ) பதிற்றுப்பத்து
ஆ) புறநானூறு
இ) பரிபாடல்
ஈ) ஆத்திசூடி
2. "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று கூறியவர்.
அ) இராமலிங்கம்
ஆ) சுந்தரலிங்கம்
இ) இராம பத்மநாபன்
ஈ) விநாயகம்
3. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர்.
அ) வள்ளலார்
ஆ) அன்னை தெரசா
இ) கைலாஷ் தத்யார்த்தி
ஈ) ஹிதேந்திரன்
4. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் என்று கூறியவர்.
அ) வள்ளலார்
ஆ) அன்னை தெரசா
இ) கைலாஷ் தத்யார்த்தி
ஈ) ஹிதேந்திரன்
5. உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள் என்று கூறியவர்.
அ) வள்ளலார்
ஆ) அன்னை தெரசா
இ) கைலாஷ் தத்யார்த்தி
ஈ) ஹிதேந்திரன்
6. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
அ) மனித வாழ்க்கை
ஆ) மனித உரிமை
இ) மனித நேயம்
ஈ) மனித உடைமை
7. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் ......... காட்டியவர் வள்ளலார்.
அ) கோபம்
ஆ) வெறுப்பு
இ) கவலை
ஈ) அன்பு
8. அன்னை தெரசாவிற்கு ............ க்கான 'நோபல் பரிசு' கிடைத்தது
அ) பொருளாதாரம்
ஆ) இயற்பியல்
இ) மருத்துவம்
ஈ) அமைதி
9. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்
ஆ) குழந்தைகளை நேசிப்போம்
இ) குழந்தைகளை வளர்ப்போம்
ஈ) குழந்தைகள் உதவி மையம்
பொருத்துக
1. வள்ளலார் – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெரசா – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
விடை
1. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்




No comments:
Post a Comment