Breaking

Thursday, April 2, 2026

6TH TAMIL - இளைய தோழனுக்கு


நூல் வெளி

வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு. மேத்தா. புதுக் கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக இவரைப் போற்றுவர்கண்ணீர்ப் பூக்கள்ஊர்வலம்சோழநிலாமகுடநிலா உள்ளிட்ட பல நூல்களையும் திரையிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் புதுக்கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

மு. மேத்தா கவிதைகள் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.


நட
நாளைமட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்

நட
பாதங்கள்
நடக்கத்
தயாராய் இருந்தால்
பாதைகள்
மறுப்புச் சொல்லப்
போவதில்லை.

நெய்யாய்த் திரியாய்
நீயே மாறினால்
தோல்வியும் உனக்கொரு
தூண்டுகோலாகும்!
வெற்றி
உனைச்சுற்றி
வெளிச்சவிதை
விதைக்கும்!

கவலைகளைத்
தூக்கிக்கொண்டு
திரியாதே ...
அவை
கைக்குழந்தைகளல்ல..

*ஓடிவந்து கைகுலுக்க
ஒருவருமில்லையா?
உன்னுடன் நீயே
கைகுலுக்கிக் கொள்!

தூங்கி விழுந்தால்
பூமி உனக்குப்
படுக்கையாகிறது.
விழித்து நடந்தால்
அதுவே உனக்குப்
பாதையாகிறது!

நீ
விழித்தெழும் திசையே
பூமிக்குக் கிழக்கு!
உன்
விரல்களில் ஒளிரும்
சூரியவிளக்கு!

நட!
நாளைமட்டுமல்ல
இன்றும்
நம்முடையதுதான்
நட! * 
- மு.மேத்தா


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வானம்பாடி இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்

அ) எஸ். இராமக்கிருஷ்ணன்
ஆ) வைரமுத்து
இ) மு. மேத்தா
ஈ) வாலி

2. புதுக்கவிதையை பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவர்.

அ) எஸ். இராமக்கிருஷ்ணன்
ஆ) வைரமுத்து
இ) மு. மேத்தா
ஈ) வாலி

3. மு. மேத்தாவின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

அ) கண்ணீர்ப் பூக்கள்
ஆ) ஊர்வலம்
இ) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
ஈ) மகுடநிலா

4. மு. மேத்தாவின் நூல்களுள் பொருந்தாத ஒன்றைக் கூறுக

அ) கண்ணீர்ப் பூக்கள்
ஆ) ஊர்வலம்
இ) சேரநிலா
ஈ) மகுடநிலா

5. உன்னுடன் நீயே ………………… கொள்.

அ) சேர்ந்து
ஆ) பகை
இ) கைகுலுக்கி
ஈ) நட்பு

6. கவலைகள் …………………. அல்ல.

அ) சுமைகள்
ஆ) சுவைகள்
இ) துன்பங்கள்
ஈ) கைக்குழந்தைகள்

7. ‘விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .

அ) விழி + எழும்
ஆ) விழித்து + எழும்
இ) விழி + தெழும்
ஈ) விழித் + தெழும்

8. 'போவதில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) போவது + இல்லை
ஆ) போ + இல்லை
இ) போவது + தில்லை
ஈ) போவது + தில்லை

9. 'படுக்கையாகிறது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) படுக்கை + யாகிறது
ஆ) படுக்கையா + ஆகிறது
இ) படுக்கையா + கிறது
ஈ) படுக்கை + ஆகிறது

10. தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) தூக்கிகொண்டு
ஆ)தூக்குக்கொண்டு
இ) தூக்கிக்கொண்டு
ஈ) தூக்குகொண்டு

No comments:

Post a Comment