
நூல் வெளி
இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் 'பராபரக் கண்ணி' என்னும் தலைப்பில் உள்ளன. 'கண்ணி' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!*
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே*
சொல்லும் பொருளும்
- தண்டருள் - குளிர்ந்த கருணை
- கூர் – மிகுதி
- செம்மையருக்கு - சான்றோருக்கு
- ஏவல் - தொண்டு
- பணி - தொண்டு
- எய்தும் – கிடைக்கும்
- எல்லாரும் - எல்லா மக்களும்
- அல்லாமல் - அதைத்தவிர
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பராபரக் கண்ணியின் நூலாசிரியர்
அ) தாயுமானவர்
ஆ) மாணிக்கவாசகர்
இ) மதுரகவி ஆழிவார்
ஈ) நம்மாழ்வார்
2. திருச்சியை ஆய்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்காயராகப் பணி புரிந்தவர்.
அ) தாயுமானவர்
ஆ) மாணிக்கவாசகர்
இ) மதுரகவி ஆழிவார்
ஈ) நம்மாழ்வார்
3. தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது
அ) கண்ணிநுண் சிறுத்தாம்பு
ஆ) தாயுமானவர் பாடல்கள்
இ) நாலாயிர திவ்விய பிரபந்தம்
ஈ) திருவாசகம்
4. கண்ணி என்பது
அ) இரண்டடிகளால் பாடப்படும் பாடல்வகை
ஆ) மூன்றடிகளால் பாடப்படும் பாடல்வகை
இ) சம அடிகளால் பாடப்படும் பாடல்வகை
ஈ) இவை அனைத்தும்
5. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) தம்முயிர்
ஆ) தமதுயிர்
இ) தம் உயிர்
ஈ) தம்முஉயிர்
6. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) இன்புற்றிருக்க
ஆ)இன்புறுறிருக்க
இ) இன்புற்று இருக்க
ஈ) இன்புறு இருக்க
7. 'தானென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தானெ + என்று
ஆ) தான் + என்று
இ) தா + னென்று
ஈ) தான் + னென்று
8. 'சோம்பல்' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்
அ) அழிவு
ஆ) துன்பம்
இ) சுறுசுறுப்பு
ஈ) சோகம்




No comments:
Post a Comment