

ஐவகை நிலங்கள்
குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும்
பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும்.
பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)
1. கார்காலம் - ஆவணி, புரட்டாசி
2. குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனிக் காலம் - மார்கழி, தை
4. பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
5. இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
6. முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி
சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)
1. காலை - காலை 6 மணி முதல் 10 மணி வரை
2. நண்பகல் - காலை 10 மணி முதல் 2 மணி வரை
3. எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
4. மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
5. யாமம் - இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
6. வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.


- குறிஞ்சி – முருகன்
- முல்லை – திருமால்
- மருதம் – இந்திரன்
- நெய்தல் – வருணன்
- பாலை – கொற்றவை
- குறிஞ்சி – வெற்பன், குறவர், குறத்தியர்
- முல்லை – தோன்றல், ஆயர். ஆய்ச்சியர்
- மருதம் – ஊரன், உழவர், உழத்தியர்
- நெய்தல் – சேர்ப்பன், பரதன், பரத்தியர்
- பாலை – எயினர், எயிற்றியர்
- குறிஞ்சி – மலைநெல், தினை
- முல்லை – வரகு, சாமை
- மருதம் – செந்நெல், வெண்ணெல்
- நெய்தல் – மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
- பாலை – சூறையாடலால் வரும் பொருள்
- குறிஞ்சி – புலி, கரடி, சிங்கம்
- முல்லை – முயல், மான், புலி
- மருதம் – எருமை, நீர்நாய்
- நெய்தல் – முதலை, சுறா
- பாலை – வலியிழந்த யானை
- குறிஞ்சி – குறிஞ்சி, காந்தள்
- முல்லை – முல்லை, தோன்றி
- மருதம் – செங்கழுநீர், தாமரை
- நெய்தல் – தாழை, நெய்தல்
- பாலை – குரவம், பாதிரி
- குறிஞ்சி – அகில், வேங்கை
- முல்லை – கொன்றை, காயா
- மருதம் – காஞ்சி, மருதம்
- நெய்தல் – புன்னை, ஞாழல்
- பாலை – இலுப்பை, பாலை
- குறிஞ்சி – கிளி, மயில்
- முல்லை – காட்டுக்கோழி, மயில்
- மருதம் – நாரை, நீர்க்கோழி, அன்னம்
- நெய்தல் – கடற்காகம்
- பாலை – புறா, பருந்து
- குறிஞ்சி – சிறுகுடி
- முல்லை – பாடி, சேரி
- மருதம் – பேரூர், மூதூர்
- நெய்தல் – பட்டினம், பாக்கம்
- பாலை – குறும்பு
- குறிஞ்சி – அருவி நீர், சுனைநீர்
- முல்லை – காட்டாறு
- மருதம் – மனைக்கிணறு, பொய்கை
- நெய்தல் – மணற்கிணறு, உவர்க்கழி
- பாலை – வற்றிய சுனை, கிணறு
- குறிஞ்சி – தொண்டகம்
- முல்லை – ஏறு கோட்பறை
- மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
- நெய்தல் – மீன் கோட்பறை
- பாலை – துடி
- குறிஞ்சி – குறிஞ்சி யாழ்
- முல்லை – முல்லை யாழ்
- மருதம் – மருத யாழ்
- நெய்தல் – விளரி யாழ்
- பாலை – பாலை யாழ்
- குறிஞ்சி – குறிஞ்சிப்பண்
- முல்லை – முல்லைப்பண்
- மருதம் – மருதப்பண்
- நெய்தல் – செவ்வழிப்பண்
- பாலை – பஞ்சுரபண்
13. ஐந்திணைகளின் தொழில்கள்
- குறிஞ்சி – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
- முல்லை – ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்
- மருதம் – நெல்லரிதல், களை பறித்தல்
- நெய்தல் – மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்
- பாலை – வழிப்பறி, நிரை கவர்தல்
1. கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
அ) 3, 4, 1, 2, 5
ஆ) 4, 3, 1, 5, 2
இ) 3, 2, 5, 1, 4
ஈ) 3, 5, 1, 2, 4
2. பொருத்தமான விடையைக் கண்டறிக.
i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி
அ) 4, 3, 2, 5, 1
ஆ) 5, 4, 1, 2, 3
இ) 4, 3, 5, 1, 2
ஈ) 3, 4, 5, 2, 1
3. பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) முல்லை – வரகு, சாமை
ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்
இ) நெய்தல் – தினை
ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்
4. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) முன்பனி
ஈ) பின்பனி
5. ஐந்திணைகளுக்கு உரியன
i) முதற்பொருள்
ii) கருப்பொருள்
iii) உரிப்பொருள்
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii – மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
6. பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்
ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்
iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்
iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 2, 1
7. மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
8. பொழுது எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
9. பொருத்திக் காட்டுக.
இ) நான்கு
ஈ) ஆறு
9. பொருத்திக் காட்டுக.
i) கார்காலம் – 1. மாசி, பங்குனி
ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை
iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை
iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3,1
ஈ) 3, 4, 2, 1
10. இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள்
அ) ஆவணி, புரட்டாசி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி, ஆடி
ஈ) மார்கழி, தை
Question 11.
ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) இளவேனிற்காலம்
ஈ) முதுவேனிற்காலம்
Answer:
ஈ) முதுவேனிற்காலம்
Question 12.
பொருத்திக் காட்டுக.
i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை
iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை
அ) 4, 3, 2, 1|
ஆ) 2, 1, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1
Question 13.
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
Answer:
இ) யாமம்
Question 14.
வைகறைக்குரிய கால நேரம்……………
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Answer:
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
Question 15.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கார்காலம்
ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்
iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி
iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3
Question 16.
நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை
Question 17.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. வைகறை
ii) முல்லை – 2. எற்பாடு
iii) மருதம் – 3. யாமம்
iv) நெய்தல் – 4. மாலை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2
Question 18.
திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கொற்றவை
ii) முல்லை – 2. வருணன்
iii) மருதம் – 3. இந்திரன்
iv) நெய்தல் – 4. திருமால்
v) பாலை – 5. முருகன்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3,1
இ) 3, 2, 4, 5, 1
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 19.
திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.
i) வெற்பன் – 1. குறிஞ்சி
ii) தோன்றல் – 2. முல்லை
iii) ஊரன் – மருதம்
iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்
v) எயினர் – 5. பாலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 5, 4, 1, 2
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
ஈ) 1, 2, 3, 4, 5
Question 20.
பொருத்திக் காட்டுக.
i) புலி – 1. பாலை
ii) மான் – 2. நெய்தல்
iii) எருமை – 3. மருதம்
iv) முதலை – 4. முல்லை
v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 2, 1, 4, 5, 3
ஈ) 4, 2, 3, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 21.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி
ii) முல்லை – 2. தாழை
iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்
iv) நெய்தல் – 4. தோன்றி
v) பாலை – 5. காந்தள்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 2, 3, 4, 1, 5
ஈ) 3, 1, 4, 2, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 22.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை
ii) முல்லை – 2. கொன்றை, காயா
iii) மருதம் – 3. காஞ்சி
iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்
v) பாலை – 5. இலுப்பை
அ) 1, 2, 3, 4, 5
ஆ) 2, 3, 1, 5, 4
இ) 3, 4, 2, 1, 5
ஈ) 5, 4, 3, 2, 1
Answer:
அ) 1, 2, 3, 4, 5
Question 23.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடற்காகம்
ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்
iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
iv) நெய்தல் – 4. கிளி, மயில்
v) பாலை – 5. புறா, பருந்து
அ) 4, 2, 3, 1, 5
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 5, 2
ஈ) 3, 4, 2, 5, 1
Answer:
அ) 4, 2, 3, 1, 5
Question 24.
விளரி யாழ் எத்திணைக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
இ) நெய்தல்
Question 25.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. துடி
ii) முல்லை – 2. மீன் கோட்பறை
iii) மருதம் – 3. மணமுழா
iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை
v) பாலை
5. தொண்டகம்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 3, 4, 5, 2, 1
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
அ) 5, 4, 3, 2, 1
Question 26.
செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே
அ) நெய்தல், பாலை
ஆ) குறிஞ்சி, முல்லை
இ) மருதம், நெய்தல்
ஈ) மருதம், பாலை
Answer:
அ) நெய்தல், பாலை
Question 27.
முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்
அ) வெண்நெல், வரகு
ஆ) மலைநெல், திணை
இ) வரகு, சாமை
ஈ) மீன், செந்நெல்
Answer:
இ) வரகு, சாமை




No comments:
Post a Comment