Breaking

Monday, February 16, 2026

10TH TAMIL - பாய்ச்சல்



நூல் வெளி

  • ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தாெகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம் பெற்றுள்ளது.
  • இதன் ஆசிரியர் சா.கந்தசாமி.
  • இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
  • இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில்
    புகழ்பெற்றார்.
  • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாெதமி விருதைப் பெற்றுள்ளார்.
  • சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார்.
  • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாென்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.
  • தொலைந்து பாேனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை
    இவர் எழுதிய புதினங்களுள் சில.

பலவுள் தெரிக

1. பாய்ச்சல் என்னும் சிறுகதை எந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது?

அ) சா. கந்தசாமியின் கதைகள்
ஆ) தக்கையின் மீது நான்கு கண்கள்
இ) சுடுமண் சிலைகள்
ஈ) தொலைந்து போனவர்கள்

2. பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர்.

அ) ஜெயகாந்தன்
ஆ) சா. கந்தசாமி
இ) ஜெயமோகன்
ஈ) அகிலன்

3. சா. கந்தசாமியின் மாவட்டம் 

அ) நாகப்பட்டினம்
ஆ) தஞ்சாவூர்
இ) திருச்சி
ஈ) திருவாரூர்

4. சா. கந்தசாமியின் ஊர்

அ) மயிலாடுதுறை
ஆ) படைத்தலைவன்குடி
இ) உறையூர்
ஈ) வலங்கைமான்

5. சா. கந்தசாமி எந்தக் குறும்படத்திற்கு அனைத்துலக விருதைப் பெற்றுள்ளார்?

அ) தொலைந்து போனவர்கள்
ஆ) சூர்ய வம்சம்
இ) சாந்தகுமாரி
ஈ) சுடுமண் சிலைகள்

6. சா. கந்தசாமிக்கு எழுத்துலகில் புகழைப் பெற்றுத் தந்த புதினம்.

அ) சாயாவனம்
ஆ) சூர்ய வம்சம்
இ) சாந்தகுமாரி
ஈ) தொலைந்து போனவர்கள்

7. பொருத்திக் காட்டுக. (சா. கந்தசாமியின் படைப்புகள்)

i) தக்கையின் மீது நான்கு கண்கள் – 1. சாகித்திய அகாதெமி விருது
ii) விசாரணைக் கமிஷன் – 2. புதினம்
iii) சுடுமண் சிலைகள் – 3. அனைத்துலக விருது
iv) சூர்ய வம்சம் – 4. சிறுகதைத் தொகுப்பு

அ) 4, 1, 3, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 2, 1
ஈ) 2, 1, 3, 4

8. பாய்ச்சல் கதையில் இடம் பெறுபவர் 

அ) அனுமார்
ஆ) இராமன்
இ) வாலி
ஈ) இராவணன்

9. சா. கந்தசாமியின் சாகித்ய விருது பெற்ற நூல்

அ) சூர்யவம்சம்
ஆ) சாந்தகுமாரி
இ) சாயாவனம்
ஈ) விசாரணைக் கமிஷன்

No comments:

Post a Comment