Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 26, 2025

TNPSC Part - 4 ஒருபொருள் தரும் பல சொற்கள் (2022 to 2024 TNPSC Exams Question And Answers)


1. கப்பல் செலுத்துபவரை இப்பெயர்களாலும் அழைப்பர்

A) நாவாய் ஓட்டுனர், கடல்வழிகாட்டி
B) மீகாமன், நீகான்
C) நங்கூரர், கலஞ்செய்யர்
D) பாய்மரர், பரிமுக அம்பி

2. ஒழி என்பதன் பொருள் கண்டறிக. 

A) அழித்து விடு, தொலைத்து விடு
B) அறிவு, அழகு
C) வெளிச்சம், பதுங்கிக் கொள்
D) ஓசை, புகழ்

3. அவிந்தன, நெகிழ்ந்தன, விண்டன, கொண்ட ஆகிய சொற்கள் தரும் பொருளைக் கண்டறிக. 

A) மலர்ந்தன
B) கூம்பின
C) வளர்ந்த
D) வாடின

4. தொலி, தோல், தோடு, ஓடு ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கின்றன. 

A) காய்களின் மேற்பகுதி
B) வீடுகளின் மேற்பகுதி
C) பழங்களின் மேற்பகுதி
D) மரங்களின் மேற்பகுதி

5. "அணி" எனும் சொல் தரும் பலபொருள்களைத் தேர்க. 

A) அணிகலன், அழகு, வரிசை, அணிதல்
B) சிரிப்பு, நகை, மகிழ்ச்சி, துன்பம்
C) வரிசை, அழகு, சிரிப்பு, அழுகை
D) அழகு, சிரிப்பு, வரிசை, இன்பம்

6. ஒரு பொருள் தரும் பல சொற்கள் கூலம், காழ், முத்து, முதிரை ஆகிய சொற்கள் எதனை உணர்த்துகின்றன?
 
A) இளம் பயிர் வகை
B) மணி வகை
C) காய் வகை
D) குலை வகை

7. முறி, குருத்து, கொழுந்தாடை முதலிய சொற்கள் தாவரத்தின் எப்பகுதியைக் குறிக்கும்.

A) நுனிப்பகுதி
B) இலை
C) கிளை
D) வேர்

8. அழகு என்னும் சொல்லைக் குறிக்கும் சரியான பிறச்சொற்களைக் கண்டறிக.

A) பெண் மயில், அன்னம்
B) கவின், வனப்பு
C) பறவையின் மூக்கு, பச்சைக்கிளி
D) சோலை, அருவி

9. போது, அலர், வீ, செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்.

A) பூவின் நிலைகள்
B) இளம் பயிர் வகைகள்
C) பிஞ்சு வகைகள்
D) இலை வகைகள்

10. திங்கள் - ன் பொருள்

(A) மாதம், கிழமை, சந்திரன், நிலவு
(B) வாரம், நாள், சந்திரன், பகலவன்
(C) கிழமை, சந்திரன், நாள், சூரியன்
(D) சந்திரன், சூரியன், பகலவன், பரிதி


No comments:

Post a Comment