Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 6, 2022

7 STD TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK - 2 (08.08.22 TO 12.08.22)

தலைப்பு  :

  • புலி தாங்கிய குகை
  • பாஞ்சைவளம்

பாடத்தின் தன்மை :

  • பண்டைத் தமிழரின் வீர நெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
  • பாஞ்சாலங்குறிச்சியின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள் :


  • மின்னட்டை
  • விளக்கப்படம்
  • மடிக்கணினி
  • பொருத்தட்டை
  • காட்சிப்படம்
  • மாதிரி உருவங்கள்

பாட அறிமுகம் :

  • சங்க இலக்கியம் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • பாஞ்சாலங்குறிச்சி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
  • பாடலின் பொருளை உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • உரக்கப்படித்தல்
  • சந்த நயத்தோடு வாசித்தல்

மனவரைபடம் – புலி தாங்கிய குகை :

மனவரைபடம் – பாஞ்சைவளம் :

தொகுத்தல் – புலி தாங்கிய குகை :

  • சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு, எதுவும் தெரியாதவள் போல நீ ‘உன் மகன் எங்கே?’ என்று என்னைக் கேட்கின்றாய்.
  • அவன் எங்கு இக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ‘புலி தங்கிய குகை’ போன்று அவனைப் பெற்ற வயிறு என்னிடம் உள்ளது.
  • அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க் காண்பாயாக! என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள்.

தொகுத்தல் – பாஞ்சைவளம் :

  • பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.
  • பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.
  • பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  • வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.
  • வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.
  • பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
  • மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

  • மடிகணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
  • பாஞ்சாலங்குறிச்சி தொடர்பான வரலாற்று நிகழ்வைக் கூறி பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள் :

  • புறநானூறு எவ்வகைத் தொகை நூல்?
  • காவற்பெண்டு பற்றிக் கூறுக ?
  • புறநானூறு எதனை வெளிப்படுத்தும் நூல் ?
  • பாஞ்சாலங்குறிச்சி கோட்டைகள் குறித்து எழுதுக?
  • பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் யாது?
  • பாஞ்சை வளம் பாடல் எந்நூலில் அமைந்துள்ளது?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

  • புறநானூற்றுப் பாடல் வழி பண்டைய தமிழரின்வீர உணர்வை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • பாஞ்சாலங்குறிச்சியின் சிறப்புகளைப் பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

  • பாடலை மனனம் செய்து, ஒரு முறை எழுதி வரச் சொல்லல்.
  • சிறு வினா விடைகளை நன்கு படித்து வரச்சொல்லல்
  • வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாற்றினை அறிந்து எழுதி வரச் சொல்லல்

No comments:

Post a Comment