Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 6, 2022

6 STD TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK - 2 (08.08.22 TO 12.08.22)

தலைப்பு :

  • அறிவியல் ஆத்திசூடி
  • அறிவியலால் ஆள்வோம்

பாடத்தின் தன்மை :

  • தமிழில் உள்ள அறிவியல்நெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
  • அறிவியலின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள் :

  • மின்னட்டை
  • விளக்கப்படம்
  • ஒலிபெருக்கி
  • பொருத்தட்டை
  • காட்சிப்படம்
  • மாதிரி உருவங்கள்

பாட அறிமுகம் :

  • ஆத்திசூடி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • அறிவியல் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
  • பாடலின் பொருளை உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • சந்த நயத்தோடு வாசித்தல்

மனவரைபடம்  : அறிவியல் ஆத்திசூடி

மனவரைபடம்  : அறிவியலால் ஆள்வோம்

தொகுத்தல் : அறிவியல் ஆத்திசூடி

  • அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி, முடிந்தவரை புரிதல், விருப்பத்துடன் அணுகுதல், உண்மையை அறி, ஊக்கமே வெற்றி. அறிவியலே வெல்லும், ஏன் என்று கேள், ஐயம் களைந்து சொல், ஒற்றுமையோடு செயல்படு, ஓய்வின்றி உழை, மருந்தாகும் அனுபவம்.

தொகுத்தல் : அறிவியலால் ஆள்வோம்

  • ஆழ்கடல் ஆய்வுகள், நிலவில் வாழ நினைத்தல்
  • செயற்கைக்கோளால் செய்தித் தொடர்பில் சிறத்தல், இயற்கைவளம், புயல்,மழை கண்டறிதல்
  • எந்திர மனிதன் படைப்பு, இணையத்ததல் உலகம் உள்ளங்கையில், பாதிக்கப்பட்ட உறுப்பை மாற்றி உயிர் காத்தல்.
  • அணு பிளந்து தேவைகளை நிறைவேற்றல். நாளைய மனிதன் விண்ணில் நகரம் மற்றும் பாதை அமைப்பான்.

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல்  :

  • மடிக்கணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
  • அறிவியல் தொடர்பான பாடல்களை ஒலிபெருக்கி கொண்டு பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.

வினாக்கள் :

  • எப்படிப்பட்ட சிந்தனை கொள்ள வேண்டும்?
  • எதனைக் கண்டறிய வேண்டும்?
  • எது வெற்றி தரும்?
  • எதில் ஆய்வுகள் நடக்கின்றன?
  • எதில் வாழ நினைக்கிறான் மனிதன்?
  • செயற்கைக்கோளால் எதனைக் கண்டறிய முடிகின்றது?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

  • அறிவியல் ஆத்திசூடி பாடல் வழி அறநெறிக் கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • அறிவியலின் சிறப்புகளைப் பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

  • ஔவை மற்றும் பாரதியின் ஆத்திசூடிகளை எழுத வரச் சொல்லல்.
  • அறிவியல் ஆத்திசூடியைச் சந்த நயத்துடன் பாடுதல்.
  • ஆத்திசூடி ஒன்றைச் சொந்தமாக எழுதி வரச் சொல்லல்.
  • அறிவியலால் ஏற்படும் நன்மைகளை எழுதி வரச் சொல்லுதல்.
  • அறிவியல் தொடர்பான பிற கவிதைகள் எழுதி வருதல்.

No comments:

Post a Comment