Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 6, 2022

8 STD TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK - 2 (08.08.22 TO 12.08.22)

தலைப்பு :

  • நோயும் மருந்தும்
  • வருமுன் காப்போம்

பாடத்தின் தன்மை :

  • அறம் சார் நெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
  • உடல்நலம் பேணுதலை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.

கற்கும் முறை :

  • ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.

துணைக் கருவிகள் :

  • மின்னட்டை
  • விளக்கப்படம்
  • மடிக்கணினி
  • பொருத்தட்டை
  • காட்சிப்படம்
  • மின்அட்டை

பாட அறிமுகம் :

  • நோய் மற்றும் மருந்து குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.

வாசித்தல் :

  • நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
  • பாடலின் பொருளை உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.

கற்றல் திறன்கள் :

  • புதிய சொற்களை அடிக்கோடிடல்
  • அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
  • உரக்கப்படித்தல்
  • சந்த நயத்தோடு வாசித்தல்

மனவரைபடம் : நோயும் மருந்தும்


மனவரைபடம் : வருமுன் காப்போம்

தொகுத்தல் : நோயும் மருந்தும்

  • பெண்ணே! நோயின் தன்மை மூன்று வகை என அறிவாயாக!
  • அவை மருந்தால் நீங்கும் நோய், தீராத நோய், வெளியில் நீங்கும் உள்ளிருக்கும் நோய் ஆகும்.
  • அந்த நோயைத் தீர்க்கும் மருந்துகள் நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவை ஆகும்.

தொகுத்தல் : வருமுன் காப்போம்

  • உடலில் உறுதி உடையவர் உலகில் மகிழ்ச்சி உடையவர் ஆவர். நோயாளிக்கு இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்த இடம் சுகம். நாள்தோறும் தூய்மை நீடித்த வாழ்வு தரும்.
  • காலை மலை நடைப்பயிற்சி நல்லகாற்று சுவாசித்தல் நோயும் எமனும் அணுகாது.
  • கூழே ஆனாலும் குளித்துக் குடி.
  • அதிகம் உண்டால் நோய்பட்டு பாயில் விழுவீர். தூய்மை காற்று, நல்ல குடிநீர்,பசித்தபின் உண்ணல் : நோய் அணுகாது.நூற்றாண்டு வாழவைக்கும்.

வழங்குதல் :

  • மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.

வலுவூட்டல் :

  • மடிகணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
  • உடல் நலம் பற்றிய கதை ஒன்று கூறி பாடத்தை வலுவூட்டுதல்.

மதிப்பீடு :

  • மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
  • நீலகேசி எவ்வகை நூல்?
  • இந்நூல் எத்தனைச் சருக்கங்களைக் கொண்டது?
  • மருந்துகள் யாவை?
  • உலகில் மகிழ்ச்சி உடையவர் யாவர்?
  • நீடித்த வாழ்வை எப்போது பெறுவாய்?
  • கவிமணியின் இயற்பெயர் யாது?

குறைதீர் கற்பித்தல் :

  • மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.

எழுதுதல் :

  • சொல்வதை எழுதுதல்,
  • பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.

கற்றல் விளைவுகள் :

  • நீலகேசிப் பாடல் வழி அற உணர்வை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
  • உடல்நலம் காத்தல் பற்றிப் பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

தொடர்பணி :

  • பாடலை மனனம் செய்து, ஒரு முறை எழுதி வரச் சொல்லல்.
  • சிறு வினா விடையை நன்கு படித்து வரச்சொல்லல்

No comments:

Post a Comment