மதிப்பீட்டுச் செயல்பாடு
1. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களை உருவாக்குக.
' கண்ணியமிகு தலைவர் ' காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் முகமது
இசுமாயில். மக்கள் அவரைக்காயிதே மில்லத் என்று அன்போடு அழைத்தனர். காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் சமுதாய வழிகாட்டி என்பது பொருள்,
அப்பெயருக்கேற்ப மக்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் காயிதே மில்லத். அவர் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் தன்னுடைய தேவைகளுக்குப் பொதுப்பேருந்திலும் தொடர் வண்டியிலும் பயணம் சென்று எளிமையின் சிகரமாக விளங்கினார்.
கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்
என்று எண்ணியதால் கேரளாவிலும் திருச்சியிலும் இரண்டு கல்லூரிகளைத்
தொடங்கினார். இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராகவும்
பணியாற்றினார்.
1 ) கண்ணியமிகு தலைவர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
2 ) காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன ?
3 ) ' காயிதே மில்லத் ' என்னும் சொல்லின் பொருள் என்ன ?
4 ) ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது எது ?
5 ) காயிதே மில்லத் கல்லூரிகளை எங்கெங்கே தொடங்கினார் ?
2.சொற்றொடரில் விடுபட்ட இடங்களில் பொருத்தமான வினாச்சொற்களை நிரப்புக.
(யார், என்ன, எந்த, எப்போது, எப்படி)
1.இந்தப் பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது?
2. தேசப்பிதா என்று அழைக்கப்படுபவர் யார் ?
3. உன்னுடைய பிறந்த நாள் எப்போது ?
4. இலக்கணம் என்றால் என்ன ?
5. தொடர் வண்டி எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
Tuwijsbndjudbdjelkd
ReplyDelete