Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 10, 2021

9th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 8

மதிப்பீட்டுச் செயல்பாடு

1.  கட்டங்களில் உள்ள கலைச்சொற்களைப் பொருத்தி எழுதுக.

  1. Online    -    இயங்கலை     
  2. Offline    -   முடக்கலை
  3. Telegram  -   தொலைவரி
  4. Hard disk  -    வன்தட்டு
  5. LED           -   ஒளிர்விமுனை
  6. Charger   -  மின்னேற்றி

2 .உரையாடலைப் படித்து அதில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களை அடிக்கோடிடுக.

(எ.கா. சீருடை)

நிறைமதி :   பள்ளிச் சீருடை வாங்கிவிட்டாயா நகுலன்?

நகுலன் ஊரடங்குக் காலம் முடிந்தபின் வாங்கிக்கொள்ளலாம் என அம்மா
கூறினார்கள்.

நிறைமதி : நீ இயங்கலை வகுப்புகளில் கலந்து கொள்கிறாயா?

நகுலன் :   ஆம், பாடங்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கிறேன். கல்வித் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களைத் தொடர்ந்து பார்க்கிறேன்.

நிறைமதி :   நானும் அப்படித்தான். அந்த நேரத்தில் பார்க்கத் தவறினாலும்
வலையொளியில் வருவதைப் பார்த்துப் படித்துவிடுவேன்.


3. கொடுக்கப்பட்ட சொற்களுக்கு இணையான கலைச்சொற்கள் கட்டங்களில் மறைந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.




இடமிருந்து வலம் 

  1. Computer  -   கணினி 
  2. Keyboard  -  விசைப்பலகை 
  3. App            -   செயலி 

வலமிருந்து இடம் 

  1. Browser   -   உலாவி 
  2. Facebook  -   முகநூல் 
  3. Font           -  எழுத்துரு

மேலிருந்து கீழ் 

  1. Pen drive    -   விரலி 
  2. Mouse         - சுட்டி 
  3. Art               -  கலை

கீழிருந்து மேல்               

  1. Radio         -   வானொலி 
  2. WhatsApp   -   புலனம்
  3. internet       -   இணையம் 

No comments:

Post a Comment