மதிப்பீட்டுச் செயல்பாடு
குறிப்புகளைக்கொண்டு வனவிலங்கு வாரவிழா, மரம் நடுவிழாக் குறித்து ஒரு
துண்டறிக்கை உருவாக்குக.
விழா : வனவிலங்கு வாரவிழா
இடம் : அரசு உயர்நிலைப்பள்ளி, முகாசிப் பிடாரியூர், ஈரோடு மாவட்டம்.
விழா : வனவிலங்கு வாரவிழாவும் மரம் நடுவிழாவும்
நாள் : 06.07.2021
நேரம் : 9.30மணிமுதல் 12.00மணிவரை
தலைமை : அ.பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்
சிறப்பு விருந்தினர் :திரு. கலைச்செல்வன், வனவிலங்கு - பறவைகள் ஆர்வலர்,
இயற்கை ஆர்வலர், புகைப்படக் கலைஞர்
விழாவின் நோக்கம்
- வனவிலங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்.
- வனவிலங்குகள் கணக்கெடுப்பை ஊக்குவித்தல்.
- வனவிலங்குப் பூங்காக்கள், காப்பகங்களைப் பார்வையிடல்.
- வனவிலங்குச் சட்டங்களை மதித்தல்
- வெளிநாடு, உள்நாட்டுப் பறவைகளுக்குச் சிறப்புப் பாதுகாப்பு கொடுத்தல்.
- மூலிகைச்செடியோடு பயன்தரும் மரங்களை வளர்த்துக்காடுகளை உருவாக்குதல்.
தொடர்முழக்கம் மற்றும் பேரணி நடத்துதல்
- உடற்கல்வி ஆசிரியர்கள்
வனத்தைக் காத்து வனவிலங்கை வாழ்விப்போம்!
விதைப்பந்துகள் வழங்கல் - பசுமைப்படை மாணவர்கள்.
விழாத் தொகுப்பாளர்கள் - தமிழ்த்துறை ஆசிரியர்கள்.
விழா ஏற்பாட்டாளர்கள் - அறிவியல் ஆசிரியர்கள்
மரக்கன்று வழங்குபவர்கள் - சென்னிமலை வனக்காப்பாளர்கள்.
பரிசு வழங்கல்- வெளிநாடுவாழ் உள்ளூர் மக்கள்.
No comments:
Post a Comment