Breaking

Sunday, April 19, 2026

6:58:00 AM

8TH TAMIL - நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்



  • உலகில் மிகவும் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை.
  • சிந்துசமவெளி” அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
  • தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
  • நாகை மாவட்டம் “செம்பியன் கண்டியூரில்” கலையழகு மிகுந்த மண்கலங்கள் கிடைத்துள்ளன.
  • மதுரை அருகே கீழடியில் ஏராளமான “சுடுமண் பொருட்கள்” கிடைத்துள்ளன.
  • மண்பாண்டம் செய்ய பயன்படும் சக்கரத்தை “திருவை” என்பர்.
  • களிமண்ணுடன் மெல்லிய மணல் மற்றும் சாம்பல் ஆகியவற்றை சேர்த்து பக்குவப்படுத்தி, மண்பாண்டங்களை செய்வர்.
  • பானை செய்தலைப் “பானை வனைதல்” எனவும் கூறுவர்.
  • முடிவு பெற்ற பானையை மெருகேற்ற “உருட்டுக்கல்” கொண்டு தேய்ப்பர்.
  • மண்பாண்டக் கலையில் அடுத்த வளர்ச்சி நிலை = சுடுமண் சிற்பங்கள்.
  • சுடுமண் சிற்பங்களை ஆங்கிலத்தில் டெரகோட்டா என்பர்.
  • களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.
  • மூங்கிலால் பல வகை பொருட்கள் செய்யப்படுகின்றன.
  • பிறந்த குழந்தைக்கு விளையாட்டு பொருட்கள் முதல் இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.
  • மூங்கில்கள் மூன்று வகைப்படும். அவை, கல்மூங்கில், மலைமூங்கில், கூட்டுமூங்கில்
  • கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில்கள் = கூட்டுமூங்கில்கள்.
  • முற்காலத்தில் பாய்மரப்படகுகளில் பைகளை பயன்படுத்தினர் என்பதனை “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற புறநானூற்று பாடல் அடி விளக்குகிறது.
  • “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு.
  • பழந்தமிழ் இலக்கியங்கள் பாதுகாத்து வைத்தவை = பனையோலை.
  • பனை மரம் = தமிழ்நாட்டின் மாநில மரம்.
  • பிரம்பு என்பது கொடி வகையை சார்ந்த தாவரம் ஆகும்.
  • பிரம்பின் தாவரவியல் பெயர் = கலாமஸ் ரொடாங் (Calamus Rotang)
  • இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் வளருபவை.
  • இது தமிழகத்தில் தற்போது குறைந்துவிட்டது.

1.             பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ)          புல்மூங்கில்                                                     

ஆ)         கல்மூங்கில்

இ)          மலைமூங்கில்                                 

ஈ)           கூட்டுமூங்கில்

                (விடையாகக் குறிப்பிடப்படுவது மூங்கில் வகை அல்ல)

2.             கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில் எது?

அ)          புல்மூங்கில்                                                       

ஆ)         கல்மூங்கில்

இ)          மலைமூங்கில்                                 

ஈ)           கூட்டுமூங்கில்

3.             தமிழ்நாட்டின் மாநில மரம்.

அ)          ஆலமரம்            

ஆ)         தென்னை          

இ)          பனை  

ஈ)           மூங்கில்

4.             கொடி வகையைச் சார்ந்த தாவரம்.

அ)          மூங்கில்              

ஆ)         பிரம்பு 

இ)          கோரை               

ஈ)           நாணல்

5.             பொருத்துக

அ)          தடுக்குப்பாய்   -              குழந்தைகளைப் படுக்கவைக்க

ஆ)         பந்திப்பாய்                       -              உட்கார்ந்து உண்ண

இ)          திண்ணைப்பாய்            -              படுத்துறங்க

ஈ)           பட்டுப்பாய்                      -              திருமணத்துக்கு

6.             ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ எனப் பாய்மரக்கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாய் பற்றி கூறும் நூல். 

அ)          அகநானூறு                                       

ஆ)         புறநானூறு

இ)          கலித்தொகை                                  

ஈ)           பரிபாடல்

7.             பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ)          சிந்துசமவெளி                                              

ஆ)         ஆதிச்சநல்லூர்

இ)          செம்பியன் கண்டியூர்                 

ஈ)           கீழடி

(விடையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது தவிர, ஏனையவை தமிழ்நாட்டில் அமைந்துள்ள இடங்கள்)

8.             பானை செய்ய உதவும் சக்கரத்தை எவ்வாறு அழைப்பர்.

அ)          மிதவை               

ஆ)          திருவை      

இ)

9.             ‘ஊயடயஅரள சுடிவயபே’ என்பது எதனைக் குறிக்கும் தாவரவியல் பெயர்.

அ)          மூங்கில்              

ஆ)         பிரம்பு 

இ)          கோரை               

ஈ)           நாணல்

10.          கீழ்க்கண்டவற்றுள் ‘முதுமக்கள் தாழி’ கிடைக்கப்பெற்ற இடம்.         

அ)          சிந்து சமவெளி                                               

ஆ)         ஆதிச்சநல்லூர்

இ)          செம்பியன் கண்டியூர்                 

ஈ)           கீழடி



6:36:00 AM

8TH TAMIL - திருக்கேதாரம்



பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே. – சுந்தரர்

அருஞ்சொற்பொருள்

  • பண் = இசை
  • கனகச்சுனை = பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள் = மதயானைகள்
  • முரலும் = முழங்கும்
  • பழவெய் = முதிர்ந்த மூங்கில்

சுந்தரர் ஆசிரியர் குறிப்பு

  • சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
  • இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

  • “கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே” என்று பாடியவர் = சுந்தரர்.
  • கிண் என்ற ஓசை முழங்கும் நகரம் = திருக்கேதாரம்
  • பண் = இசை
  • கனகச்சுனை = பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள் = மதயானைகள்
  • முரலும் = முழங்கும்
  • பழவெய் = முதிர்ந்த மூங்கில்
  • சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
  • இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
  • இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
  • இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  • தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
  • பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

1. ‘சுந்தரர்’ இயற்றிய தேவாரம் எத்தனையாவது திருமுறையாக அமைந்துள்ளது.

அ)    மூன்றாம்     

ஆ)    ஐந்தாம்       

இ)    ஏழாம் 

ஈ)     எட்டாம்

2. சுந்தரர் இயற்றிய மற்றொரு நூல்.

அ)    திருத்தொண்டர் தொகை   

ஆ)    திருத்தொண்டர் அந்தாதி

இ)    திருத்தொண்டர் புராணம்     

ஈ)     திருவிருத்தம்

3.      பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ)    திருஞானசம்பந்தர்           

ஆ)    திருநாவுக்கரசர்

இ)    சுந்தரர்                     

ஈ)     மாணிக்கவாசகர்

( விடையாக வருபவர் தவிர ஏனையோர், தேவாரம் பாடியோர்)

4.      ‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்பது யாருடைய சிறப்புப் பெயர்.

அ)    திருஞானசம்பந்தர்           

ஆ)    திருநாவுக்கரசர்

இ)    சுந்தரர்                             

ஈ)     மாணிக்கவாசகர்

5.      தேவாரத்தைத் தொகுத்தவர்.

அ)    நம்பியாண்டார் நம்பி              

ஆ)    நாதமுனி

இ)    சேக்கிழார்                         

ஈ)     வரகுண பாண்டியன்

5:15:00 AM

8TH TAMIL - வினைமுற்று




  • செயலை “வினை” என்றும் கூறுவர்.
  • ஒரு செயலை குறிக்கும் சொல் “வினைச்சொல்” எனப்படும்.
  • எ.கா: படிதான், ஆடினான்.
  • பொருள் முற்று பெற்ற வினைச்சொற்களை “முற்றுவினை” அல்லது “வினைமுற்று” என்பர்.
  • வினைமுற்று வரும் இடங்கள்,ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம்
  • வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
  • வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை, தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று
  • ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையானவை = ஆறு. அவை, செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
  • ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையாவையான “செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்” ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு “காலத்தை வெளிப்படையாக காட்டாது” செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, “குறிப்பு வினைமுற்று” எனப்படும்.
  • காலத்தை வெளிப்படையாக காட்டாத வினைமுற்று = குறிப்பு வினைமுற்று
  • செயலை செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று = குறிப்பு வினைமுற்று.
  • தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் தவிர ஏவல் வினைமுற்று, வியன்கோல் வினைமுற்று போன்ற பிற வகைகளும் உள்ளன.
  • தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும்.
  • எ.கா: பாடம் படி, கடைக்குப் போ.
  • ஏவல் வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை, ஒருமை ஏவல் வினைமுற்று, பன்மை ஏவல் வினைமுற்று
  • ஒருமை ஏவல் வினைமுற்று (எழுது = ஒருமை)
  • பன்மை ஏவல் வினைமுற்று (எழுதுமின் / எழுதுங்கள் = பன்மை)
  • வியங்கோள் வினைமுற்று எதனை பொருள்களில் வரும் = நான்கு
  • “வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல்” ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று “வியங்கோள் வினைமுற்று” எனப்படும்.
  • வியங்கோள் வினைமுற்று “இரு திணைகள், ஐந்து பால்களையும், மூன்று இடங்களையும்” காட்டும்
  • விகுதி பெற்றே வரும் வினைமுற்று = வியங்கோள் வினைமுற்று
  • வியங்கோள் வினைமுற்று விகுதிகள் = க, இய, இயர், அல்

1.      ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ............. எனப்படும்.

அ)    பெயர்ச்சொல்               

ஆ)    வினைச்சொல்

இ)    இடைச்சொல்               

ஈ)     உரிச்சொல்

2.      வினைமுற்று ............ வகைப்படும்.

அ)    இரண்டு      

ஆ)    மூன்று 

இ)    நான்கு 

ஈ)     ஐந்து

3.      காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது.......... வினைமுற்று.

அ)    தெரிநிலை   

ஆ)    குறிப்பு 

இ)    வியங்கோள் 

ஈ)      ஏவல்

4.      காலத்தை வெளிப்படையாகக் காட்டாதது.......... வினைமுற்று.

அ)    தெரிநிலை    

ஆ)    குறிப்பு       

இ)    வியங்கோள் 

ஈ)      ஏவல்

5.      கட்டளைப் பொருளில் வருவது ......... வினைமுற்று.

அ)    தெரிநிலை    

ஆ)    குறிப்பு 

இ)    வியங்கோள் 

ஈ)      ஏவல்

6.      வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் பொருளில் வருவது .......... வினைமுற்று

அ)    தெரிநிலை    

ஆ)    குறிப்பு 

இ)    வியங்கோள் 

ஈ)     ஏவல்

7.      பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ................

அ)    படித்தான்    

ஆ)    நடக்கிறான்

இ) உண்பான்     

ஈ)     ஓடாது

8.      பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று ................

அ)     செல்க           

)     ஓடு          

)    வாழ்க 

ஈ)     வாழிய

9.      பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ)    எழுதினாள்    -     தெரிநிலை வினைமுற்று

)     பொன்னன்    -      குறிப்பு வினைமுற்று

இ)    ஒழிக         -       எதிர்மறை வினைமுற்று

ஈ)     எழுதுமின்    -      ஏவல் வினைமுற்று

10.     ‘பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்’ ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு வருவது.

அ)    தெரிநிலை    வினைமுற்று 

ஆ)    குறிப்பு வினைமுற்று      

இ)    வியங்கோள் வினைமுற்று   

ஈ)     ஏவல் வினைமுற்று

5:02:00 AM

8TH TAMIL - ஆன்ற குடிப்பிறத்தல்


ஆன்ற குடிப்பிறத்தல்

  • திருடன் = சிகாமணி.
  • சிகாமணியின் தந்தை = பண்டுக்கிழவர்
  • சிகாமணியின் மகன் = சகாதேவன்.
  • சகாதேவன் யாருடன் வேட்டியை கொடுத்து அனுப்பினான் = கிருஷ்ணமூர்த்தி.

பி.ச.குப்புசாமி ஆசிரியர் குறிப்பு

  • பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்.
  • இவர் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
  • ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்னும் நூலை எழுதியுள்ளார்.
  • “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்ற நூலின் ஆசிரியர் = பி.ச.குப்புசாமி.
  • பி.ச.குப்புசாமி எழுதிய மற்றொரு நூல் = ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்.

1.             ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்னும் நூலின் ஆசிரியர்.

அ)          குலோதுங்கன்                                 

ஆ)         பி.ச. குப்புசாமி             

இ)          வேழவேந்தன்                                  

ஈ)           ந. பிச்சமூர்த்தி

2.             ‘ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ என்ற நூலின் ஆசிரியர்.

அ)          குலோதுங்கன்                                 

ஆ)         பி.ச. குப்புசாமி             

இ)          வேழவேந்தன்                                  

ஈ)           ந. பிச்சமூர்த்தி

3.             பி.ச. குப்புசாமி .............. நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அ)          தொடக்க           

ஆ)         நடு                        

இ)          உயர்                     

ஈ)           மேல்

4.             பி.ச. குப்புசாமி யாரோடு நிருங்கிப் பழகியவர்.

அ)          ந. பிச்சமூர்த்தியோடு                  

ஆ)         ஜெயகாந்தனோடு

இ)          வல்லிக்கண்ணனோடு                                

ஈ)           ஈ.வே.ராவோடு

5.             ‘ஆன்ற குடிபிறத்தல்’ என்னும் பகுதி எந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது.

அ)          கூடாநட்பு                                                           

ஆ)         சான்றான்மை

இ)          பண்புடைமை                                                

ஈ)           அன்புடைமை