Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - வினைமுற்று





  • செயலை “வினை” என்றும் கூறுவர்.
  • ஒரு செயலை குறிக்கும் சொல் “வினைச்சொல்” எனப்படும்.
  • எ.கா: படிதான், ஆடினான்.
  • பொருள் முற்று பெற்ற வினைச்சொற்களை “முற்றுவினை” அல்லது “வினைமுற்று” என்பர்.
  • வினைமுற்று வரும் இடங்கள்,ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம்
  • வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
  • வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை, தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று
  • ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையானவை = ஆறு. அவை, செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
  • ஒரு செயல் நடைபெறுவதற்கு முதன்மையாவையான “செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்” ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு “காலத்தை வெளிப்படையாக காட்டாது” செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, “குறிப்பு வினைமுற்று” எனப்படும்.
  • காலத்தை வெளிப்படையாக காட்டாத வினைமுற்று = குறிப்பு வினைமுற்று
  • செயலை செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று = குறிப்பு வினைமுற்று.
  • தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள் தவிர ஏவல் வினைமுற்று, வியன்கோல் வினைமுற்று போன்ற பிற வகைகளும் உள்ளன.
  • தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும்.
  • எ.கா: பாடம் படி, கடைக்குப் போ.
  • ஏவல் வினைமுற்று இரண்டு வகைப்படும். அவை, ஒருமை ஏவல் வினைமுற்று, பன்மை ஏவல் வினைமுற்று
  • ஒருமை ஏவல் வினைமுற்று (எழுது = ஒருமை)
  • பன்மை ஏவல் வினைமுற்று (எழுதுமின் / எழுதுங்கள் = பன்மை)
  • வியங்கோள் வினைமுற்று எதனை பொருள்களில் வரும் = நான்கு
  • “வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல்” ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று “வியங்கோள் வினைமுற்று” எனப்படும்.
  • வியங்கோள் வினைமுற்று “இரு திணைகள், ஐந்து பால்களையும், மூன்று இடங்களையும்” காட்டும்
  • விகுதி பெற்றே வரும் வினைமுற்று = வியங்கோள் வினைமுற்று
  • வியங்கோள் வினைமுற்று விகுதிகள் = க, இய, இயர், அல்

1.      ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ............. எனப்படும்.

அ)    பெயர்ச்சொல்               

ஆ)    வினைச்சொல்

இ)    இடைச்சொல்               

ஈ)     உரிச்சொல்

2.      வினைமுற்று ............ வகைப்படும்.

அ)    இரண்டு      

ஆ)    மூன்று 

இ)    நான்கு 

ஈ)     ஐந்து

3.      காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது.......... வினைமுற்று.

அ)    தெரிநிலை   

ஆ)    குறிப்பு 

இ)    வியங்கோள் 

ஈ)      ஏவல்

4.      காலத்தை வெளிப்படையாகக் காட்டாதது.......... வினைமுற்று.

அ)    தெரிநிலை    

ஆ)    குறிப்பு       

இ)    வியங்கோள் 

ஈ)      ஏவல்

5.      கட்டளைப் பொருளில் வருவது ......... வினைமுற்று.

அ)    தெரிநிலை    

ஆ)    குறிப்பு 

இ)    வியங்கோள் 

ஈ)      ஏவல்

6.      வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் பொருளில் வருவது .......... வினைமுற்று

அ)    தெரிநிலை    

ஆ)    குறிப்பு 

இ)    வியங்கோள் 

ஈ)     ஏவல்

7.      பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ................

அ)    படித்தான்    

ஆ)    நடக்கிறான்

இ) உண்பான்     

ஈ)     ஓடாது

8.      பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று ................

அ)     செல்க           

)     ஓடு          

)    வாழ்க 

ஈ)     வாழிய

9.      பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

அ)    எழுதினாள்    -     தெரிநிலை வினைமுற்று

)     பொன்னன்    -      குறிப்பு வினைமுற்று

இ)    ஒழிக         -       எதிர்மறை வினைமுற்று

ஈ)     எழுதுமின்    -      ஏவல் வினைமுற்று

10.     ‘பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில்’ ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு வருவது.

அ)    தெரிநிலை    வினைமுற்று 

ஆ)    குறிப்பு வினைமுற்று      

இ)    வியங்கோள் வினைமுற்று   

ஈ)     ஏவல் வினைமுற்று

No comments:

Post a Comment