வரலாறு மற்றும் புவியியல் குறித்த பொது அறிவு வினா விடைகள் (கி.பி. 700 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை)
இந்திய வரலாறு - இடைக்காலம் மற்றும் ஆட்சியாளர்கள்
1. தொடக்க இடைக்கால இந்திய வரலாறு எந்த காலகட்டத்தை குறிக்கிறது?
o விடை: கி.பி. 700 முதல் 1200 வரை.
2. அன்பில் செப்பேடுகள் எந்த சோழ அரசரைக் குறிப்பிடுகின்றன?
o விடை: சுந்தரச் சோழன்.
3. கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் எங்கு உள்ளன?
o விடை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்.
4. பிராமணரல்லாத உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
o விடை: வேளாண்வகை.
5. சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
o விடை: பள்ளிச் சந்தம்.
6. ஹம்பியிலுள்ள வித்தாலா, விருப்பாக்சா கோவில்களை கட்டியவர்கள் யார்?
o விடை: விஜயநகர அரசர்கள்.
7. முகமது கோரி வெளியிட்ட தங்க நாணயத்தில் எந்த பெண் தெய்வத்தின் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது?
o விடை: இலட்சுமி.
8. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிய உதவும் செப்பு நாணயத்தின் பெயர் என்ன?
o விடை: ஜிட்டல்.
9. 'டங்கா' எனப்படும் வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தவர் யார்?
o விடை: இல்துமிஷ்.
10. இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரே சான்று எது?
o விடை: கல்ஹணரின் ராஜதரங்கினி.
11. தபகத்-இ-நஸிரி என்ற நூலை எழுதியவர் யார்?
o விடை: மின்கஜ் உஸ் சிராஜ்.
12. 16 ஆம் நூற்றாண்டில் 'பாபர் நாமா' நூலை எழுதியவர் யார்?
o விடை: பாபர்.
13. தஜூக் என்ற பாரசீகச் சொல்லின் பொருள் என்ன?
o விடை: சுயசரிதை.
14. ரஜ்புத்ர என்னும் சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?
o விடை: வழித்தோன்றல்.
15. ஆறாம் நூற்றாண்டில் கூர்ஜர அரச வம்சத்தின் அடிக்கல்லை நாட்டியவர் யார்?
o விடை: ஹரிச்சந்திரா.
16. பால அரசவம்சத்தை உருவாக்கியவர் யார்?
o விடை: கோபாலர்.
17. விக்கிரமசீலா மடாலயத்தை உருவாக்கியவர் யார்?
o விடை: தர்மபாலர்.
18. பால வம்சத்தின் மிகச் சிறந்த மற்றும் வலிமை மிக்க அரசர் யார்?
o விடை: முதலாம் மகிபாலர்.
19. சௌகான்கள் அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
o விடை: சிம்மராஜ்.
20. 1191 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரெயின் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் யார்?
o விடை: பிருதிவிராஜ் சௌகான்.
21. 'பிருதிவிராஜ ராசோ' எனும் காவியத்தை இயற்றிய கவிஞர் யார்?
o விடை: சந்த பார்தை.
22. இஸ்லாமை தோற்றுவித்தவர் யார்?
o விடை: இறைதூதர் முகமது நபிகள்.
23. அராபியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை யாரிடமிருந்து கற்றனர்?
o விடை: இந்தியர்களிடம்.
24. கஜினி மாமூது இந்தியாவின் மீது எத்தனை முறை படையெடுப்புகளை நடத்தினார்?
o விடை: பதினேழு முறை.
25. இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசு எங்கு உறுதியாக நிறுவப்பட்டது?
o விடை: ஆஜ்மீர்.
26. ரக் ஷாபந்தன் எனும் பண்பாட்டு மரபு யாருக்கு உரியது?
o விடை: ராஜபுத்திரர்களுக்கு.
சோழர் மற்றும் பாண்டியர் வரலாறு
1. பண்டைய சோழ அரசின் தலைநகரம் எது?
o விடை: உறையூர்.
2. புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரம் கோவிலை தஞ்சாவூரில் கட்டியவர் யார்?
o விடை: முதலாம் ராஜராஜன்.
3. தன்னை கங்கை கொண்டான் என்று பிரகடனப்படுத்திய சோழ அரசர் யார்?
o விடை: ராஜேந்திரன்.
4. சோழர்களின் பொதுவருவாயான நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது?
o விடை: காணிக்கடன்.
5. இடைக்காலப் பாண்டியர்களின் துறைமுகமாகவும், தலைநகராகவும் விளங்கியதாகக் கருதப்படுவது எது?
o விடை: கொற்கை.
6. சமண மதத்திலிருந்து சைவத்திற்கு திருஞானசம்பந்தரால் மாற்றப்பட்ட பாண்டிய அரசன் யார்?
o விடை: அரிகேசரி.
7. வேள்விக்குடிச் செப்பேடுகளின் கொடையாளி யார்?
o விடை: ஜடிலபராந்தக நெடுஞ்சடையன்.
8. பாண்டிய நாட்டில் குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
o விடை: குதிரைச் செட்டிகள்.
டெல்லி சுல்தானியம்
1. அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்?
o விடை: குத்புதீன் ஐபக்.
2. மம்லுக் என்ற அரேபிய சொல்லுக்கு என்ன பொருள்?
o விடை: அடிமை.
3. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதியான குவ்வத்-உல்-இஸ்ஸாம் மஸ்ஜிதைக் கட்டியவர் யார்?
o விடை: குத்புதீன் ஐபக்.
4. இந்தியாவின் முதல் பெண் அரசி யார்?
o விடை: ரஸ்ஸியா சுல்தானா.
5. துருக்கியப் பிரபுக்கள் அடங்கிய 'நாற்பதின்மர் குழுவை' ஒழித்தவர் யார்?
o விடை: கியாசுதீன் பால்பன்.
6. அலாவுதீன் கில்ஜியின் தலைமைத் தளபதி யார்?
o விடை: மாலிக் கபூர்.
7. செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்ட சுல்தான் யார்?
o விடை: முகமது பின் துக்ளக்.
8. சையது அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
o விடை: கிசிர்கான்.
9. ஆக்ரா நகரை நிர்மாணித்த லோடி வம்ச அரசர் யார்?
o விடை: சிக்கந்தர் லோடி.




No comments:
Post a Comment