- “அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
- “கரிகா லன்தன் பெருமை எல்லாம் கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
- “ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
- “ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்” என்று பாடியவர் = கவிஞர் வைரமுத்து
- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
- இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்மபூஷண் விருதினைப் பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது வென்றவர் = வைரமுத்து.
- இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை ஏழு முறையும் மாநில அரசின் விருதினை ஆறு முறையும் பெற்றவர்.
- இவருடைய கவிதைகள் இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- இப்பாடப் பகுதி வைரமுத்து கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
- “வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு
- “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு
- “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணி.
- அந்தரத் தார்மய னேஎன ஐயுறும் தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன் வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, “ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின்” என்ற பாடல் அடி இடம் பெற்ற நூல் = சீவக சிந்தாமணியின் நாமகள் இலம்பகம்.
1. வைரமுத்து
பிறந்த ஊர்
அ) மேட்டூர்
ஆ) மெட்டூர்
இ) கோட்டூர்
ஈ) படூர்
2. 2003ஆம்
ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வைரமுத்துவின் நூல்.
அ) கல்லிக்காட்டு இதிகாசம்
ஆ) வைகறை மேகங்கள்
இ) இன்னொரு தேசியகீதம்
ஈ) தண்ணீர் தேசம்
3. இந்திய அரசு
வைரமுத்துவிற்கு வழங்கிய விருது.
அ) பத்மஸ்ரீ
ஆ) பத்மபூஷன்
இ) பாரதரத்னா
ஈ) பத்மவிபூஷன்
4. ‘வலவன் ஏவா
வான ஊர்தி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல்.
அ) பதிற்றுப்பத்து
ஆ) புறநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) சீவக சிந்தாமணி
5. ‘ஏவு கணையிலும்
தமிழை எழுதி, எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்’ என்று கூறியவர்?
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) சுரதா
ஈ) வைரமுத்து
6. ‘எந்திர
வூர்தி இயற்றுமின்’
அ) பதிற்றுப்பத்து
ஆ) புறநானூறு
இ) சிலப்பதிகாரம்
ஈ) சீவக சிந்தாமணி
7. ‘காய்ந்து
கிடக்கும் கழனிகள் எங்கும்’ இவ்வடியில் பயின்றுவரும் மோனை.
அ) இணை மோனை
ஆ) பொழிப்பு மோனை
இ) ஒரூஉ மோனை
ஈ) கூழை மோனை
8. ‘எரியும்
தீயும் இழந்த திரிதான்’ இவ்வடியில் பயின்று வரும் எதுகை.
அ) இணை எதுகை
ஆ) பொழிப்பு எதுகை
இ) ஒரூஉ எதுகை
ஈ) கூழை எதுகை
9. ‘பொருத்துங்கள்’
– இச்சொல்லுக்கான பகுபத உறுப்பிலக்கணம்.
அ) பகுதி+விகுதி
ஆ) பகுதி+இடைநிலை+விகுதி
இ) பகுதி+ இடைநிலை+சாரியை+விகுதி
ஈ) பகுதி+சந்தி+இடைநிலை+சாரியை+விகுதி
(பொருத்து – பகுதி, உம் – விகுதி, கள் – விகுதி மேல்
விகுதி)
10. ‘சொன்னோர்’
– இலக்கணக் குறிப்பு
அ) தொழிற்பெயர்
ஆ) வினையாலனையும் பெயர்
இ) வினைத்தொகை
ஈ) ஏவல் வினைமுற்று




No comments:
Post a Comment