Breaking

Saturday, April 18, 2026

9TH TAMIL - பெரியாரின் சிந்தனைகள்



தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்கள்

  • வெண்தாடி வேந்தர்
  • பகுத்தறிவுப் பகலவன்
  • வைக்கம் வீரர்
  • ஈரோட்டுச் சிங்கம்
  • சுய மரியாதை சுடர்
  • பெண்ணினப் போர் முரசு
  • புத்துலகத் தொலை நோக்காளர்
  • தெற்காசியாவின் சாக்ரடீஸ்

தந்தை பெரியார்

  • மூடப்பழக்கத்தில் மூழ்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் = தந்தை பெரியார்.
  • தானே முயன்று கற்று, தானாகவே சிந்தித்து அறிவார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் = தந்தை பெரியார்.
  • “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை. அதனால் வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகின்றன. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • சாதி, மனிதனுக்கு தேவையில்லை என்று கூறியவர் = தந்தை பெரியார்.
  • மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? என்றவர் = தந்தை பெரியார்.
  • மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? என்று கேட்டவர் = தந்தைப் பெரியார்.
  • பெரியார் பின்பற்றிய கொள்கை = கடவுள் மறுப்புக் கொள்கை.
  • சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவி = கல்வி.
  • “கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்; மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்” என்றார் பெரியார்.
  • “சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்” என்றார் பெரியார்.
  • அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார் பெரியார்.
  • மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
  • திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக்கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார்.
  • பெரியார் மதிப்புமிக்க நூலாக கருதியது = திருக்குறள்.
  • இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன;
  • திருக்குறளை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார் பெரியார்.
  • “மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார் பெரியார்.
  • உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார் (ஐயா – அய்யா, ஒளவை – அவ்வை).
  • மெய்யெழுத்துகளில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.
  • பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.
  • நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.
  • கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆண்களுக்கு நிகரான உரிமை, பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.
  • வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும் என்றார் பெரியார்.
  • 1938 நவம்பர் 13 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
  • 27.06.1970 இல் யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பு தந்தை பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • பெரியார் துவக்கிய இயக்கம் = சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதை இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு = 1925.

பெரியார் எதிர்த்தவை

  • இந்தித் திணிப்பு
  • குலக்கல்வித் திட்டம்
  • தேவதாசி முறை
  • கள் உண்ணுதல்
  • குழந்தை திருமணம்
  • மணக்கொடை

பெரியார் விதைத்த விதைகள்

  • கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு
  • பெண்களுக்கான சொத்துரிமை
  • குடும்ப நலத்திட்டம்
  • கலப்புத் திருமணம்
  • சீர்திருத்தத் திருமணம் ஏற்பு

பெரியார் நடத்திய இதழ்கள்

  • குடியரசு
  • விடுதலை
  • உண்மை
  • ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

1. பெரியார் என்றவுடன் நினைவுக்கு வருவது, அவரின் .............

அ) பகுத்தறிவுக் கொள்கை  

ஆ) மணக்கொடை

இ) கலப்புத் திருமண வரவேற்பு 

ஈ) சுயமரியாதை இயக்கம்

2. 1938 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈவெ.ராவுக்கு வழங்கிய பட்டம்.

அ) வைக்கம் வீரர்   

ஆ) பெரியார்

இ) பெண்ணினப் போராளி  

ஈ) பகுத்தறிவுப் பகலவன்

3. 1970 ஆம் ஆண்டு ..................., தந்தைப் பெரியாரைத் ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

அ) காமன்வெல்த் அமைப்பு 

ஆ) தெற்காசிய கூட்டமைப்பு

இ) யுனெஸ்கோ நிறுவனம்  

ஈ) யுனிசீப் நிறுவனம்

4. பெரியார் தோற்றுவித்த இயக்கம் எது?

அ) கலப்புத் திருமண இயக்கம் 

ஆ) சுயமதியாதை இயக்கம்

இ) கள்ளுண்ணாமை இயக்கம் 

ஈ) மணக்கொடை மறுப்பு

5. சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு.

அ) 1925  

ஆ) 1938  

இ) 1949  

ஈ) 1970

6. பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ) குடியரசு 

ஆ) விடுதலை 

இ) உண்மை 

ஈ) முரசு

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை பெரியார் நடத்திய இதழ்கள்)

 7. பெரியார் நடத்திய ஆங்கில இதழின் பெயர்.

அ) தி வேல்ட் 

ஆ) ரிவோல்ட் 

இ) திராவிடா 

ஈ) இந்தியா

8. பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ) தேவதாசி முறை   

ஆ) மணக்கொடை

இ) இந்தித் திணிப்பு   

ஈ) கலப்புத் திருமணம்

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை பெரியார் எதிர்த்தவை)

9. பொருந்தாத ஒன்றைக் கண்டெடு.

அ) சீர்திருத்தத் திருமணம்  

ஆ) குடும்ப நலத்திட்டம்

இ) குழந்தைத் திருமணம்  

ஈ) சொத்துரிமை

(விடையாக உள்ளதைத் தவிர ஏனையவை பெரியார் ஆதரித்தவை)

10. ‘தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் மணக்குகையில் சிறுத்தை எழும்’ என்று பெரியாரை அடையாளப்படுத்தியவர்.

அ) திரு.வி.க.    

ஆ) அண்ணா

இ) இராஜாஜி    

ஈ) பாரதிதாசன் 

No comments:

Post a Comment