Breaking

Saturday, April 18, 2026

9TH TAMIL - வல்லினம் மிகா இடங்கள்






  • வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.
  • உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.
  • இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.
  • வியங்கோள் வினைமுற்றை அடுத்து வரும் வல்லினம் மிகாது.
  • விளித்தொடரை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
  • இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது.
  • அவை, இவை என்னும் சுட்டுச்சொற்கள், எவை என்னும் வினாச்சொல் ஆகியவற்றை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
  • அது, எது எனும் சுட்டுச்சொற்களை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
  • பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் ( படித்து என்பதுபோல் வன்றொடர்க் குற்றியலுகரச்சொல் அல்லாதவை ) ஆகியவற்றை அடுத்துவரும் வல்லினம் மிகாது.
  • எழுவாய்த்தொடரில் வரும் வல்லினம் மிகாது.
 வினைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது
  • விடு + கணை = விடுகணை
  • விரி + சுடர் = விரிசுடர்
  • தோய் + தயிர் = தோய்தயிர்
  • பாய் + புலி = பாய்புலி

உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது

  • காய் + கனி = காய்கனி
  • தாய் + தந்தை = தாய்தந்தை
  • முத்து + பவளம் = முத்துபவளம்

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது

  • கதை + சொன்னார் = கதை சொன்னார்.
  • கடல் + தாவினான் = கடல் தாவினான்.
  • புகழ் + பெற்றார் = புகழ் பெற்றார்.
வியங்கோள் வினைமுற்றை அடுத்து வரும் வல்லினம் மிகாது
  • கற்க + கசடற் = கற்க கசடற
  • வளர்க + சிந்தனை = வளர்க சிந்தனை
  • வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
  • காண்க + படம் = காண்க படம்

விளித்தொடரை அடுத்துவரும் வல்லினம் மிகாது

  • முருகா + கேள் = முருகா கேள்.
  • கண்ணா + சொல் = கண்ணா சொல்,
  • கிளியே + தா = கிளியே தா.
  • அண்ணா + போ = அண்ணா போ.

இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது

  • கடகட, தடதட, சட்சட், படபட

அவை, இவை என்னும் சுட்டுச்சொற்கள், எவை என்னும் வினாச்சொல் ஆகியவற்றை அடுத்துவரும் வல்லினம் மிகாது

  • அவை + பறவைகள் = அவை பறவைகள்
  • இவை + சட்டைகள் = இவை சட்டைகள்
  • அவை + தடங்கள் = அவை தடங்கள்
  • எவை + படங்கள் = எவை படங்கள்

அது, எது எனும் சுட்டுச்சொற்களை அடுத்துவரும் வல்லினம் மிகாது

  • அது + கூடை = அது கூடை
  • இது + சட்டி = இது சட்டி
  • அது + தோணி = அது தோணி
  • இது + பாடம் = இது பாடம்

பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் (வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் அல்லாதவை) அடுத்துவரும் வல்லினம் மிகாது

  • வந்த + கயல்விழி = வந்த கயல்விழி
  • தைத்த + சட்டை = தைத்த சட்டை
  • வந்து + தந்தான் = வந்து தந்தான்
  • செய்து + பார்த்தான் = செய்து பார்த்தான்

எழுவாய்த்தொடரில் வரும் வல்லினம் மிகாது

  • கண்ணகி + பார்த்தாள் = கண்ணகி பார்த்தாள்
  • தங்கை + கேட்டாள் = தங்கை கேட்டாள்
  • பூவிழி + தந்தாள் = பூவிழி தந்தாள்

No comments:

Post a Comment