ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே
பாடல் பொருள்
- நம்மிடம் உள்ள தீய பழக்கங்களை நீக்க வேண்டுமானால் முதலில் நீக்க வேண்டியது = சினம்.
- முதலில் ஆராய வேண்டியது = மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.
- முதலில் போற்றிக் காக்க வேண்டியது = நன்னெறியினை காக்க வேண்டும்.
- “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
- “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
- “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
- “காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = யசோதர காவியம்.
இலக்கணக்குறிப்பு
- ஆக்குக = வியங்கோள் வினைமுற்று
- போக்குக = வியங்கோள் வினைமுற்று
- நோக்குக = வியங்கோள் வினைமுற்று
யசோதர காவியம் நூல் குறிப்பு
- ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
- இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
- இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.
- இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
- யசோதர காவியம், ‘யசோதரன்’ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
- இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது;
- பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கூறுவர்.
1. யசோதர காவியத்தின்
பாட்டுடைத் தலைவன் யார்?
அ) உதயகுமாரன்
ஆ) யசோதரன்
இ) சீவகன்
ஈ) சனகன்
2. யசோதரன்
எந்நாட்டு மன்னன்?
அ) மாளவம்
ஆ) மகதம்
இ) கலிங்கம்
ஈ) அவந்தி
3. யசோதர காவியத்தின்
உட்பிரிவுகள் .......... என அழைக்கப்படுகிறது.
அ) காதை
ஆ) படலம்
இ) இலம்பகம்
ஈ) சருக்கம்
4. யசோதர காவியத்தில்
அமைந்துள்ள சருக்கங்களின் எண்ணிக்கை.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
5. யசோதர காவியத்தில்
அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.
அ) 300
ஆ) 320
இ) 350
ஈ) 355




No comments:
Post a Comment