- தொழில் நோக்குடன் கல்வி பயில வேண்டாம் என்கிறார் திரு.வி.க.
- அறிவை பேருக்கும் பொருட்டு கல்வி பயில வேண்டும் என்கிறார் திரு.வி.க.
- தாய்மொழி வழியாக கல்வி பெறுவதே சிறப்பு என்கிறார் திரு.வி.க.
- தாய்மொழி வழியாக கல்வி கற்பதே இயற்கை முறையாகும் என்கிறார் திரு.வி.க.
- முதல் முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயில வேண்டும் என்கிறார் திரு.வி.க.
- “தாய்நாடு” என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது ஆகும் என்கிறார் திரு.வி.க.
- மொழிபெயர்ப்பு முறையை கொண்டு தமிழர்கள் ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது என்கிறார் திரு.வி.க.
- தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் பிறமொழிக் கலப்பு அவசியமாகும் என்கிறார் திரு.வி.க.
- தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் திரு.வி.க.
- கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்கிறார் திரு.வி.க.
- “கலப்பில் வளர்ச்சி உண்டென்பது இயற்கை நுட்பம்” என்கிறார் திரு.வி.க.
- வாழ்விற்குரிய இன்பங்களுள் தலையாயது “காவிய இன்பம்” என்கிறார் திரு.வி.க.
- தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.
- “இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்”.
- இயற்கை ஓவியம் = பத்துப்பாட்டு
- இயற்கை இன்பக்கலம் = கலித்தொகை
- இயற்கை வாழ்வில்லம் = திருக்குறள்
- இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் = சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
- இயற்கைத் தவம் = சிந்தாமணி
- இயற்கைப் பரிணாமம் = கம்பராமாயணம்
- இயற்கை அன்பு = பெரியபுராணம்
- இயற்கை இறையுறையுள் = தேவார திருவாசக திருவாய் மொழிகள்
- இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
- “இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்கிறார் திரு.வி.க
- புறஉலக ஆராய்ச்சிக்கு அறிவியல் “கொழுகொம்பு” போன்றது என்கிறார் திரு.வி.க.
- ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர் = விஜயலட்சுமி பண்டிட்
- “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கூறியவர் = விஜயலட்சுமி பண்டிட்.
- திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்;
- சிறந்த மேடைப் பேச்சாளர்;
- தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்.
- இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
1. கல்வி என்பது வருவாய்
தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப்
பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்’ என்று கூறியவர்.
அ) சர்தார் வல்லபாய் பட்டேல் ஆ) விஜயலட்சுமி பண்டிட்
இ) பெரியார் ஈ) அப்துல்கலாம்
2. ஐ.நாவின் முதல்
பெண் தலைவர் யார்?
அ) முத்துலெட்சுமி ஆ) விஜயலட்சுமி பண்டிட்
இ) ரமாபாய் ஈ) மலாலா
3. பொருத்துக
அ) இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
ஆ) இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இ) இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்
ஈ) இயற்கைத் தவம் - சிந்தாமணி
4. பொருந்தாத ஒன்றைத்
தேர்ந்தெடு.
அ) இயற்கைப் பரிணாமம் - கம்பராமாயணம்
ஆ) இயற்கை அன்பு - பெரியபுராணம்
இ) இயற்கை செல்வம் - சிலப்பதிகாரம்
இ) இயற்கை இறையுறையுள் - திருவாசகம்
5. ‘ஏடன்று கல்வி,
சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க்கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு
தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில்’ என்று கூறியவர்.
அ) சர்தார் வல்லபாய் பட்டேல்
ஆ) குலோத்துங்கன்
இ) பெரியார்
ஈ) அப்துல்கலாம்
6. உலக வாழ்விற்கு
மிக மிக இன்றியமையாதது .............. என்னும் அறிவுக்கலை.
அ) கணிதம்
ஆ) அறிவியல்
இ) வானியல்
ஈ) கணினி
7. புற உலக ஆராய்ச்சிக்கு
அறிவியல் ................... போன்றது.
அ) ஊன்றுகோல்
ஆ) கொழுகொம்பு
இ) பிடிமானம்
ஈ)
8. ‘தமிழ்த்தென்றல்’
என்று அழைக்கப்படுபவர்.
அ) பாவாணர்
ஆ) திரு.வி.க
இ) அண்ணா
ஈ) சுரதா
9. பொருந்தாத ஒன்றைக்
கண்டெடு.
அ) பொதுமை வேட்டல்
ஆ) மலரும் மாலையும்
இ) தமிழ்ச்சோலை
ஈ) பெண்ணின் பெருமை
( விடையாக வருவது தவிர ஏனையவை, திரு.வி.க நூல்கள்)
10. ‘மனித வாழ்க்கையும்
காந்தியடிகளும்’ என்னும் நூலின் ஆசிரியர்.
அ) பாவாணர்
ஆ) திரு.வி.க
இ) அண்ணா
ஈ) சுரதா




No comments:
Post a Comment