ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் – நல்லந்துவனார்
அருஞ்சொற்பொருள்
- அலந்தவர் = வறியவர்
- செறாஅமை = வெறுக்காமை
- நோன்றல் = பொறுத்தல்
- போற்றார் = பகைவர்
- கிளை = உறவினர்
- பேதையார் = அறிவற்றவர்
- மறாஅமை = மறவாமை
- பொறை = பொறுமை
கலித்தொகை நூல் குறிப்பு
- கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் இது.
- கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 150.
- கலித்தொகையில் உள்ள பிரிவுகள் = ஐந்து.
- ஐந்து பிரிவுகள் = முல்லைக்கலி, பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, நெய்தற்கலி, மருதக்கலி.
- கலித்தொகையை தொகுத்தவர் = நல்லந்துவனார்.
- நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
- கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை பாடியவர் = நல்லந்துவனார்.
1. சங்க இலக்கியத்தில்
கலிப்பாவால் இயற்றப்பட்ட நூல்.
அ) பதிற்றுப்பத்து
ஆ) கலித்தொகை
இ) முல்லைப்பாட்டு
ஈ) சிறுபாணாற்றுப்படை
2. கலித்தொகையைத்
தொகுத்தவர்.
அ) நல்லந்துவனார்
ஆ) ஓரம்போகியார்
இ) அம்மூவனார்
ஈ) ஓதலாந்தையார்
3. கலித்தொகை
எத்தனை பிரிவுகளைக் கொண்டது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
4. வறியவர்களுக்கு
உதவி செய்வது.
அ) ஆற்றுதல்
ஆ) போற்றுதல்
இ) பண்பு
ஈ) அன்பு
5. அன்புடையோரைப்
பிரியாது வாழ்வது.
அ) ஆற்றுதல்
ஆ) போற்றுதல்
இ) பண்பு
ஈ) அன்பு
6. சான்றோர்
வழி நடப்பது ..... ஆகும்.
அ) ஆற்றுதல்
ஆ) போற்றுதல்
இ) பண்பு
ஈ) அன்பு
7. உறவினர்களிடம்
வெறுப்பின்றி வாழ்வது.
அ) ஆற்றுதல்
ஆ) போற்றுதல்
இ) பண்பு
ஈ) அன்பு
8. குற்றம்
செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குவது.
அ) செறிவு
ஆ) நிறை
இ) முறை
ஈ) பொறை
9. தம்மை இகழ்வாரைப்
பொதுத்தல் என்பது......
அ) செறிவு
ஆ) நிறை
இ) முறை
ஈ) பொறை
10. மறைபொருள்
காத்தல் என்பது .......
அ) செறிவு
ஆ) நிறை
இ) முறை
ஈ) பொறை




No comments:
Post a Comment