Breaking

Sunday, April 19, 2026

8TH TAMIL - தமிழர் மருத்துவம்



  • “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றார் திருவள்ளுவர்.
  • அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள்.
  • தமிழர் மருத்துவமுறை பின்தங்கி போனதற்கு காரணங்கள் = நம் மீது நிகழ்ந்த படையெடுப்புகள், சமண, பௌத்த மத கலப்பு, ஆங்கிலேயர் வருகையால் ஏற்பட்ட அறிவியல் மாற்றம்.
  • இறுதியில் சித்த மருத்துவம் என்பது மரபு வழி மருத்துவமாகவும், நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது.
  • இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறியது.
  • “வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே” என்றனர் சித்தர்கள்.
  • வேர், தழை ஆகியவற்றால் குணம் அடையாத போது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும், பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
  • தமிழர் மருத்துவத்தில் “மருந்து என்பது உணவின் நீட்சியாகவே இருக்கிறது”.

1.      ............... மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை.

அ)    தமிழ்         

ஆ)    சித்த         

இ)    அலோபதி     

ஈ)     யுனானி

2.      ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்று கூறியவர்.

அ)    அகத்தியர்                         

ஆ)    திருமூலர்           

இ)    திருவள்ளுவர்                        

ஈ)     ஔவையார்

3.      நிலத்தை மாசுபடுத்துவது........... ஆகும்

அ)    நெகிழிகள்                         

ஆ)    பூச்சிக்கொல்லிகள்

இ)    கழிவு நீர்                          

ஈ)     காற்று

4.      மருந்து என்பது .......... நீட்சியாக இருக்கிறது.

அ)    நோயின்                           

ஆ)    உணவின்   

இ)    ஆரோக்கியமின்மையின்     

ஈ)     சூழலின்

5.      ‘வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்று கூறியவர்கள்.

அ)    யோகிகள்                         

ஆ)    சித்தர்கள்    

இ)    மருத்துவர்கள்              

ஈ)     காட்டுவாசிகள்

No comments:

Post a Comment