Breaking

Thursday, April 23, 2026

8TH TAMIL - ஒன்றே குலம்



அருஞ்சொற்பொருள்

  • நமன் = எமன்
  • சித்தம் = உள்ளம்
  • நம்பர் = அடியார்
  • நாணமே = கூசாமல்
  • உய்ம்மின் = ஈடேறுங்கள்
  • ஈயில் = வழங்கினால்
  • படமாடக்கோயில் = படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

திருமூலர் ஆசிரியர் குறிப்பு

  • அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர்.
  • இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • எனவே, இந்நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர்.
  • இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
  • “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருமூலரின் திருமந்திரம்.
  • “படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருமூலரின் திருமந்திரம்.

 

1.             அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.                

அ)          அகத்தியர்                                                         

ஆ)         பாம்பாட்டி சித்தர்

இ)          திருமூலர்                                                           

ஈ)           குதம்பைச் சித்தர்

2.             ‘தமிழ் மூவாயிரம்’ என்று அழைக்கப்படுவது.      

அ)          தேவாரம்                                                            

ஆ)         திருவாசகம்     

இ)         திருமந்திரம்                                                   

ஈ)           திருவாய்மொழி

3.             ‘திருமூலம்’ எத்தனையாவது திருமுறையாக உள்ளது.

அ)          எட்டாம் திருமுறை        

ஆ)         ஒன்பதாம் திருமுறை 

இ)         பத்தாம் திருமுறை     

ஈ)           பதினோராம் திருமுறை

4.     திருமந்திரத்தில் அமைந்துள்ள பாடல்களில் எண்ணிக்கை

அ)     2000                       

ஆ)         3000       

இ)          4000                       

ஈ)           5000

5.     ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறியவர்.

அ)     திருஞான சம்பந்தர்      

ஆ)         ஔவையார்

இ)      திருமூலர்                                          

ஈ)           திருவள்ளுவர்


No comments:

Post a Comment