தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்
குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ - திறம் எல்லாம்
வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச்
சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே* - (கண்ணிகள் 69-72)
- முத்திக்கனி - உருவகம்
- தெள்ளமுது - பண்புத்தொகை
- குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- நா - ஓரெழுத்து ஒருமொழி
- செவிகள் உணவான - நான்காம் வேற்றுமைத்தொகை.
- சிந்தா மணி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
கொள்வார் - கொள் + வ் + ஆர்
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
உணர் - பகுதி த் - சந்தி,
த் - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
1. வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் எனப்படுவது..........
அ) பள்ளு
ஆ) தூது
இ) அம்மானை
ஈ) கலம்பகம்
2. தூது இலக்கியம் பாடப்படும் வடிவம்.
அ) கலித்துறை
ஆ) கலித்தாழிசை
இ) கலிவிருத்தம்
ஈ) கலிவெண்பா
3. தமிழ்விடு தூது இலக்கியத்தில் அமைந்துள்ள கண்ணியின் எண்ணிக்கை.
அ) 232
ஆ) 283
இ) 268
ஈ) 286
4. தமிழ்விடுதூது என்னும் இலக்கியத்தை உ.வே.சா பதிப்பித்த ஆண்டு
அ) 1927
ஆ) 1930
இ) 1932
ஈ) 1942
5. தமிழில் வண்ணங்கள் எத்தனை
அ) 20
ஆ) 50
இ) 96
ஈ) 100
6. மதுரை சொச்சநாதர் மீது காதல் கொண்ட ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்.
அ) தமிழ்விடுதூது
ஆ) தமிழோவியம்
இ) திருக்குற்றால குறவஞ்சி
ஈ) முக்கூடற்பள்ளு
7. பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ) சத்துவம்
ஆ) புலம்
இ) இராசசம்
ஈ) தாமசம்
8. வனப்பு ....... வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
ஈ) எட்டு
9. முற்றும் உணர்ந்த தேவர்கள் பெற்ற குணம்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
10. செவிக்கு விருந்தளிக்கும் சுவை எத்தணை.
அ) மூன்று
ஆ) எட்டு
இ) ஒன்பது
ஈ) பத்து




No comments:
Post a Comment