புவியியல் - நீர்க்கோளம் மற்றும் பெருங்கடல்கள்:
1. அரபிக்கடலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கும் நீர்ப்பகுதி எது?
விடை: இந்தியப் பெருங்கடல்.
2. தென்பெருங்கடல் (அண்டார்டிக் பெருங்கடல்) பரப்பளவு தோராயமாக எவ்வளவு?
விடை: 21.96 மில்லியன் சதுர கி.மீ.
3. ஆர்க்டிக் பெருங்கடலின் மொத்தப் பரப்பளவு தோராயமாக எவ்வளவு?
விடை: 15.56 மில்லியன் சதுர கி.மீ.
4. பசிபிக் பெருங்கடலையும் ஆர்க்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீர்ச்சந்தி?
விடை: பேரிங் நீர்ச்சந்தி.
5. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதியான 'மில்வாக்கி அகழி' எந்த அகழியில் அமைந்துள்ளது?
விடை: போர்ட்டோரிக்கோ அகழி.
6. புவியின் மேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளைத் தவிர நிலத்தடி நீர் மற்றும் காற்றில் உள்ள நீராவி ஆகியவை எந்தக் கோளத்தைச் சேர்ந்தவை?
விடை: நீர்க்கோளம் (Hydro sphere).
புவியியல் - அட்ச தீர்க்கக் கோடுகள்:
1. புவியின் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்?
விடை: தீர்க்கக்கோடுகள்.
2. நிலநடுக்கோட்டிற்கு இணையாகக் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள்?
விடை: அட்சக்கோடுகள்.
3. 180° தீர்க்கக்கோடு எந்தப் பெருங்கடலின் வழியாகச் செல்கிறது?
விடை: பசிபிக் பெருங்கடல்.
4. இரு தீர்க்கக்கோடுகளுக்கு இடையிலான தூரம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் எவ்வளவு இருக்கும்?
விடை: 111 கி.மீ.
5. இரு தீர்க்கக்கோடுகளுக்கு இடையிலான தூரம் துருவப் பகுதியில் எவ்வளவு இருக்கும்?
விடை: 0 கி.மீ (ஒன்றாக இணைகின்றன).
6. கிரீன்விச் தீர்க்கக்கோட்டிலிருந்து கிழக்காகச் செல்லும் ஒவ்வொரு 15° தீர்க்கக்கோட்டிற்கும் நேரம் எவ்வளவு அதிகரிக்கும்?
விடை: 1 மணி நேரம் கூடும்.
7. ஒரு நாட்டின் மையத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக்கோடு?
விடை: திட்டத் தீர்க்கக்கோடு (Standard Meridian).
புவியியல் - கண்டங்கள்:
1. ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடல்?
விடை: மத்திய தரைக்கடல்.
2. ஆசியக் கண்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள மலைகள் மற்றும் கடல்?
விடை: யூரல் மலைகள் மற்றும் காஸ்பியன் கடல்.
3. பிலிப்பைன்ஸ் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் மலைச்சரிவுகளில் அமைக்கப்பட்ட விவசாய முறை?
விடை: பனாப் (Banaue) படிக்கட்டு முறை நெல் விவசாயம்.
4. கம்போடியாவில் உள்ள 'டோன்லே சாப்' ஏரியின் சிறப்பு என்ன?
விடை: உலகின் மிகச் சிறந்த நன்னீர் மீன்பிடி ஏரி.
5. ஐரோப்பிய கண்டத்தின் நிலப்பரப்பில் எவ்வளவு சதவிகிதம் வேளாண்மைக்கு ஏற்றதாக உள்ளது?
விடை: 30 சதவிகிதம்.
6. ஐரோப்பாவின் எந்த ஆறு 'சர்வதேச நதி' என்று அழைக்கப்படுகிறது?
விடை: டேன்யூப் ஆறு (ஒன்பது நாடுகள் வழியாகப் பாய்வதால்).
7. நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகள் எந்த வகையான மின்சார உற்பத்தியில் முன்னணியில் உள்ளன?
விடை: நீர் மின்சாரம்.
8. ஐரோப்பாவில் எந்த நாடு மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளது?
விடை: ஐஸ்லாந்து (3 நபர்கள் / சதுர கி.மீ).
இந்திய தேசிய சின்னங்கள் மற்றும் மொழிகள்:
1. இந்திய தேசியக் கொடியின் நீள, அகல விகிதம் என்ன?
விடை: 3:2.
2. ஜூலை 22, 1947-ல் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
விடை: இந்திய தேசியக் கொடி.
3. தேசிய கீதத்தை முதன்முதலில் 1911 ஆம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் பாடியவர்?
விடை: சரளாதேவி சௌதுராணி (தாதாபாய் நௌரோஜியின் பேத்தி).
4. இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு?
விடை: கங்கை ஆற்று ஓங்கில் (Dolphin).
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அட்டவணை மொழிகளைப் பற்றி குறிப்பிடுகிறது?
விடை: எட்டாவது அட்டவணை.
6. 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது எத்தனை மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன?
விடை: 14 மொழிகள் (தற்போது 22).
7. செம்மொழியான தெலுங்கு மற்றும் கன்னடம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன?
விடை: 2008 ஆம் ஆண்டு.
இந்திய அரசியலமைப்பு மற்றும் மக்களாட்சி:
1. இந்திய அரசமைப்புச் சட்டத்தை கையால் கைப்பட எழுதியவர் (Calligrapher)?
விடை: பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா.
2. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
விடை: 8 பேர்.
3. மக்களாட்சி முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள்?
விடை: கிரேக்கர்கள் (ஏதென்ஸ் நகரம்).
4. உலக மக்களாட்சி தினத்தை ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டு அறிவித்தது?
விடை: 2007 ஆம் ஆண்டு.
உள்ளாட்சி அமைப்புகள் - தமிழ்நாடு:
1. இந்தியாவின் மிகப்பழமையான உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1688.
2. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
விடை: 1994 ஆம் ஆண்டு.
3. கிராம ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
விடை: மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
4. கிராம ஊராட்சியின் ஆய்வாளராகச் செயல்படும் மாவட்ட அளவிலான அதிகாரி?
விடை: மாவட்ட ஆட்சியர்.
5. இந்தியாவில் தேசிய ஊராட்சி தினம் (National Panchayati Raj Day) எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
விடை: ஏப்ரல் 24.
6. உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?
விடை: மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில்.
7. நகராட்சி நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், மக்கள் குறை தீர்க்கவும் அரசால் நியமிக்கப்படும் அதிகாரி?
விடை: நகராட்சி ஆணையர்.
8. பேரூராட்சி மன்றக் கூட்டங்களை நடத்துபவர் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றுபவர்?
விடை: பேரூராட்சித் தலைவர்.
9. கிராம சபை கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடும் நாட்கள் எவை?
விடை: ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2.
10. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையம் எங்கு அமைந்துள்ளது?
விடை: சென்னை, கோயம்பேடு.
மக்கள்தொகை - தமிழ்நாடு (2011 கணக்கெடுப்பு):
1. தமிழ்நாட்டில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம்?
விடை: நீலகிரி.
2. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதம் என்ன?
விடை: 80.09 சதவிகிதம்.




No comments:
Post a Comment