Breaking

Saturday, April 25, 2026

6TH SOCIAL SCIENCE Question And Answer - 25





இலக்கியம் மற்றும் வரலாற்று நூல்கள்

1. “சந்திர வியாகரணம்” என்ற இலக்கண நூலை எழுதிய பௌத்த அறிஞர்: சந்திரோகோமியா.

2. காஞ்சிக் கடிகையில் இருந்த புகழ் பெற்ற அறிஞரான வாத்ஸ்யாயர் எழுதிய நூல்: நியாய பாஷ்யா.

3. மகாபாரதத்தின் மீள் தருகையான “விக்கிரமார்ஜுன விஜயம்” என்ற நூலை எழுதிய கன்னட அறிஞர்: பம்பா.

4. சுங்க வம்ச அரசன் அக்னிமித்திரனை கதாநாயகனாகக் கொண்டு காளிதாசர் இயற்றிய சமஸ்கிருத நாடகம்: மாளவிகாக்னிமித்ரம்.

5. தேசியப் பாடலான "வந்தே மாதரம்" எடுக்கப்பட்ட நாவல்: ஆனந்த மடம்.

6. "சத்யமேவ ஜெயதே" என்ற வாக்கியம் எடுக்கப்பட்ட உபநிடதம்: முண்டக உபநிடதம்.

7. "இந்தியா எனது தாய்நாடு" என்ற தேசிய உறுதிமொழியைத் தெலுங்கு மொழியில் எழுதியவர்: பிதிமாரி வெங்கட சுப்பாராவ்.

8. களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட புகழ்பெற்ற தமிழ் இலக்கண இலக்கிய நூல்: முத்தொள்ளாயிரம்.

9. புத்தர் முந்தைய பிறவிகளில் மனிதராகவும், விலங்காகவும் வாழ்ந்ததைப் பற்றி விளக்கும் கதைகள்: ஜாதகக் கதைகள்.

10. ராஷ்டிரகூட மன்னர் அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கன்னட இலக்கிய நூல்: கவிராஜமார்க்கம்.

11. இரண்டாம் சந்திரகுப்தரின் அவையில் இருந்த சமஸ்கிருதப் புலவர் 'வரருசி' வல்லமை பெற்ற துறை: இலக்கண ஆசிரியர்.

12. ஐகோல் கல்வெட்டைப் பொறித்த இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர்: ரவிகீர்த்தி.

வரிகள், பட்டங்கள் மற்றும் நிர்வாகம் - வரலாறு

1. ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட "பாகா, ஹிரண்யா, பாலி" என்பவை: அரசால் வசூலிக்கப்பட்ட வரிகள்.

2. குப்தர் காலத்தில் "பாலாதிகிரிதா" என்ற சொல் குறித்தது: காலாட்படைத் தளபதி.

3. குப்தர் காலத்தில் "மஹாபாலாதிகிரிதா" என்ற சொல் குறித்தது: குதிரைப்படைத் தளபதி.

4. குப்தர் காலத்தில் மாகாணங்களை (புக்தி) நிர்வகித்த ஆளுநர்கள்: உபாரிகா.

5. குப்தர் காலத்தில் மாவட்டங்களை (விஷ்யா) நிர்வகித்த அதிகாரியின் பெயர்: விஷ்யாபதி.

6. மௌரியப் பேரரசில் "கண்டகசோதனம்" என்ற சொல் குறித்தது: குற்றவியல் நீதிமன்றங்கள்.

7. மௌரிய நிர்வாகத்தில் சிவில் நீதிமன்றங்கள் அழைக்கப்பட்ட விதம்: தர்மஸ்தீயம்.

8. மௌரியர் காலத்தில் நாணயங்களை வெளியிடும் பொறுப்பைக் கொண்டிருந்த அதிகாரி: லக்ஷனத்தியக்ஷா.

9. மௌரியர்களின் அமைச்சரவை அழைக்கப்பட்ட விதம்: மந்திரி பரிஷத்.

10. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கு 'சித்திரகாரப்புலி' என்ற பட்டம் வழங்கப்பட்டதன் காரணம்: ஓவியக் கலையில் அவர் கொண்டிருந்த அதீத ஈடுபாட்டிற்காக.

11. சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாக விளங்கிய வஞ்சி அமைந்திருந்த நதிக்கரை: பெரியாறு.

12. சங்க காலத்தில் 'இமயவரம்பன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்ட சேர அரசன்: நெடுஞ்சேரலாதன்.

13. பாண்டியர்களின் முக்கியத் துறைமுகமான கொற்கை அமைந்திருந்த நதியின் முகத்துவாரம்: தாமிரபரணி நதி.

14. சங்க கால சமூகத்தில் ஒட்டுமொத்த ஆட்சிப்பகுதி பிரிக்கப்பட்டிருந்த முறை: மண்டலம், நாடு, கூற்றம், ஊர்.

வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் அரசர்கள்

1. குப்த பேரரசர்களின் கடைசி சிறந்த அரசர் என வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுபவர்: பாலாதித்யர் (முதலாம் நரசிம்மகுப்தர்).

2. சந்த அசோகர் (தீய அசோகர்) கலிங்கப் போருக்குப் பின் மாறியது: தம்ம அசோகர் (நீதிமான் அசோகர்).

3. கலிங்கப்போரின் பயங்கரத்தை அசோகர் மிகத் தெளிவாகப் பொறித்துள்ள பாறைக் கல்வெட்டு: 13-வது பாறைக் கல்வெட்டு.

4. அசோகரின் தர்மக் கொள்கைகளை முதன்மையாக விளக்கும் கல்வெட்டு: 2-வது தூண் கல்வெட்டு.

5. மகாயானம் மற்றும் ஹீனயானம் என பௌத்தம் அதிகாரப்பூர்வமாக இரண்டாகப் பிரிந்த மாநாடு: காஷ்மீரில் நடைபெற்ற நான்காம் பௌத்த மாநாடு.

6. பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு ஆகியோர் பண்டைய மகதத்தின் எந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்: ஹரியங்கா வம்சம்.

7. நந்த அரச வம்சத்தை தோற்றுவித்த மகாபத்ம நந்தரின் எட்டு மகன்கள் வரலாற்றில் அழைக்கப்பட்ட விதம்: நவநந்தர்கள்.

8. கனிஷ்கர் எந்த மரபைச் சேர்ந்தவர்: யூச்சி பழங்குடி மரபு.

சமயம் - பௌத்தம் மற்றும் சமணம்

1. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதரின் (ஆதிநாதர்) சின்னம்: காளை.

2. சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சின்னம்: சிங்கம்.

3. மகாவீரர் தனது 72-வது வயதில் நிர்வாணம் (இறப்பு) அடைந்த இடம்: பீகார் மாநிலத்தில் உள்ள பவபுரி.

4. சமணர்கள் தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்திய 'ரஜோகரனா' என்ற சிறிய துடைப்பம் செய்யப்பட்ட பொருள்: கம்பளி நூல்கள்.

சிந்து சமவெளி மற்றும் வேத காலம்

1. சிந்துவெளி மக்கள் எடையளவுகளில் பயன்படுத்திய எண்ணின் மடங்குகள்: 16 இன் மடங்குகள்.

2. சிந்துவெளி முத்திரைகளில் பெரும்பாலும் காணப்படும் விலங்கின் உருவம்: செபு (Zebu) எனப்படும் பெரிய காளைகள்.

3. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் மக்கள் அறியாத விலங்கு: குதிரை.

4. வேத காலத்தில் ஆரிய சமூகத்தின் அடிப்படை அலகு: குலா (குடும்பம்).

5. ரிக் வேத காலத்தில் பல குடும்பங்கள் (குலா) ஒன்று சேர்ந்து உருவான அமைப்பு: கிராமம்.

6. வேதகால சமூகத்தில் பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து உருவான குழுவின் பெயர்: விஸ் (Vis).

7. வேத காலத்தில் 'விஸ்' என்ற குழுக்களின் தலைவர் அழைக்கப்பட்ட விதம்: விசயபதி.

8. ரிக் வேதத்தில் 'சப்த சிந்து' (ஏழு நதிகள் பாயும் பகுதி) எனக் குறிப்பிடப்படுவது: தற்போதைய பஞ்சாப்.

9. பின் வேதகாலத்தில் (கி.மு. 1000 - 600) ஆரியர்கள் குடிபெயர்ந்த பகுதி: கங்கைச் சமவெளிப் பகுதி.

கட்டிடக்கலை

1. மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ரதம் யாருடைய கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது: மாமல்லன் (முதலாம் நரசிம்மவர்மன்) பாணி.

2. காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன்: இரண்டாம் நந்திவர்மன்.

3. பட்டடக்கல்லில் உள்ள விருப்பாக்ஷா கோவில் யாருடைய நினைவாக, யாரால் கட்டப்பட்டது: இரண்டாம் விக்கிரமாதித்யனின் அரசி லோகமாதேவியால் கட்டப்பட்டது.

4. பட்டடக்கல்லில் உள்ள பாபநாதர் கோவில் கட்டப்பட்டுள்ள கட்டிடக்கலைப் பாணி: வட இந்திய (நாகரா) பாணி.

5. எல்லோராவில் உள்ள புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஷ்டிரகூட அரசர்: முதலாம் கிருஷ்ணர்.

6. ராஷ்டிரகூட அரச வம்சத்தை நிறுவிய அரசர்: தந்திதுர்க்கர்.

7. சாளுக்கியர்களின் வெசாரா (Vesara) கட்டடக்கலையானது எவற்றின் கலவை: திராவிட மற்றும் நாகரா கட்டடக் கலையின் கலவை.

8. கனிஷ்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட கலையழகு மிக்க பௌத்த சிற்பங்கள் சேர்ந்த கலைப்பள்ளி: காந்தாரக் கலைப்பள்ளி.

No comments:

Post a Comment