Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 21, 2026

6TH TAMIL - கல்வியைப் போற்று


நூல் வெளி
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
  • சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி, சதாவதானி என்னும் பட்டம் பெற்றவர்.
  • இவர் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருமதினத்து அந்தாதி உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று.


சொல்லும் பொருளும்
  • பெருக்கி – வளர்த்து
  • திருத்தி – சீராக்கி
  • மருளை – மயக்கத்தை
  • அருத்துவதும் – தருவதும்
  • திருத்தி – சீராக்கி
  • மதி – அறிவு
  • ஆவி – உயிர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கல்வியானது நமது ______ துணையாய் அமைகிறது

அ) ஆவிக்குத்
ஆ) கண்ணுக்குத்
இ) உடலுக்குத்
ஈ) செவிக்குத்

2. அருந்துணை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அருந்து + துணை
ஆ) அருமை + துணை
இ) அரு + துணை
ஈ) அருந் + துணை

3. கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கல்விஎன்றே
ஆ) கல்வியன்றே
இ) கல்வின்றே
ஈ) கல்வியென்றே

4. கா.ப.செய்குதம்பிப் பாவலர் பிறந்த ஊர்
  • செவல்குடி
  • இடையன்குளம்
  • இடலாக்குடி
  • பனையன்குளம்
5. சீறாப்புறாணத்திற்கு உரை எழுதியவர்.
  • பாரதிதாசன்
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர்
  • பாரதியார்
  • திருத்தக்கதேவர்
6. நீதி வெண்பா என்ற நூலின் ஆசிரியர்
  • கா.ப.செய்குதம்பிப் பாவலர்
  • பாரதிதாசன்
  • பாரதியார்
  • கண்ணதாசன்
7. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி என்று இவ்வடிகளில் வரும் தொடை நயம் 
  • எதுகை
  • மோனை
  • இயைபு
  • முரண்
8. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் என வரும் பாடலைப் பாடியவர்
  • ஔவையார்
  • கபிலர்
  • பூதஞ்சேந்தனார்
  • காரியாசான்
9. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் என வரும் பாடல் இடம்பெற்ற நூல். 

அ) கொன்றைவேந்தன்
ஆ) மூதுரை
இ) ஆத்திச்சூடி
ஈ) ஆசாரக்கோவை

10. செய்குதம்பிப் பாவலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்
  • சதாவதானி
  • தசதாவதானி
  • மொழிஞாயிறு
  • கவிமணி
11. செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை
  • ஆடல்
  • பாடல்
  • ஓவியம்
  • சதாவனம்
12. சதாவதானி என்பது _______
  • நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
  • ஆயிரம் யானைகளைப் போரில் கொல்வது
  • நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
  • ஆயிரம் பேருக்கு உணவிடுவது
13. போற்றிக் கற்க வேண்டியது
  • கல்வி
  • நூல்
  • ஒழுக்கம்
  • பண்பு

இலக்கணக் குறிப்பு
  • போற்று, பெருக்கி, 
  • திருத்தி, அகற்றி – வினையெச்சங்கள்
  • அருந்துணை – பண்புத்தொகை
பகுபத உறுப்பிலக்கணம்

1. பெருக்கி = பெருக்கு + இ

பெருக்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி

2. திருத்தி = திருத்து + இ

திருத்து – பகுதி
இ – வினையெச்ச விகுதி

No comments:

Post a Comment