Breaking

Saturday, March 21, 2026

6TH TAMIL - முதல் எழுத்தும் சார்பு எழுத்தும்


முதல் எழுத்துகள்
  • தமிழில் எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை,முதல் எழுத்துகள்
  • சார்பு எழுத்துகள்
  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்.
  • முதல் எழுத்துகள் மொத்தம் = 30
  • பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
சார்பு எழுத்துகள்

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள்.
சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும். அவை,
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஔகாரக்குறுக்கம்
  9. மகரக் குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய் எழுத்து
  • மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
  • ஆய்த எழுத்துமூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
  • முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
  • நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
  • தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
  • தனித்து இயங்காது.
  • முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும்.

அ) மூன்று
ஆ) இரண்டு
இ) ஐந்து
ஈ) ஏழு

2. முதல் எழுத்துகள் எத்தனை வகைப்படும்

அ) ஐந்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினெட்டு
ஈ) முப்பது

3. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்

அ) ஐந்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினெட்டு
ஈ) பத்து

4. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

அ) முப்புள்ளி
ஆ) தனிநிலை
இ) ஒற்று
ஈ) முப்பாற்புள்ளி

5. நுட்பமான ஒலிப்பு முறையை உடைய எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) மெய் எழுத்து
இ) ஆய்த எழுத்து
ஈ) உயிர்மெய்

6. சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்து

அ) உயிர் எழுத்து
ஆ) மெய் எழுத்து
இ) ஆய்த எழுத்து
ஈ) உயிர்மெய்

No comments:

Post a Comment