
நூல் வெளி
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே - நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் - நீ
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
வெற்றிமேல் வெற்றிவர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சொல்லும் பொருளும்
தூற்றும் படி – இகழும் படி
மூத்தோர் – பெரியோர்
மூத்தோர் – பெரியோர்
மேதைகள் – அறிஞர்கள்
மாற்றார் – மற்றவர்
நெறி – வழி
வற்றாமல் – அழியாமல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் --------- நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
2. நாம் --------- சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர் பிறர் --------- நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
2. நாம் --------- சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப் + பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி
6. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி
7. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
அ) மருதகாசி
ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இ) கண்ணதாசன்
ஈ) வாலி




No comments:
Post a Comment