Breaking

Saturday, March 21, 2026

6TH TAMIL - கல்விக் கண் திறந்தவர்


  • கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
  • தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர்.
  • பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர்.
  • அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர்.
  • இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும்.
  • முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன.
  • இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் = கர்மவீரர் காமராசர் ஆவார்.
  • கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் = காமராசர்.
  • காமராசரை “கல்விக் கண் திறந்தவர்” என்று மனதார பாராட்டியவர் = தந்தை பெரியார்.
  • காமராசர் பதவி ஏற்ற உடனே, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.
  • மாநிலம் முழுவதும் அனைவர்க்கும் கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.
  • மாணவர்கள் பசியை போக்க “மதிய உணவுத் திட்டத்தை” துவக்கி வைத்தார்.
  • பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை போக்க “சீருடைத்” திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • பள்ளிகளின் வசதியைப் பெருக்க “பள்ளிச்சீரமைப்பு” மாநாடுகளை நடத்தினார்.
  • மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
  • தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

காமராசரின் சிறப்பு பெயர்கள்

  • பெருந்தலைவர்
  • படிக்காத மேதை
  • கர்மவீரர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப்பங்காளர்
  • தலைவர்களை உருவாக்குபவர்

காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்

  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்

அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை

ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

இ) வழி தெரியவில்லை

ஈ) பேருந்து வசதியில்லை

[விடை : ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை]



2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பசி + இன்றி

ஆ) பசி + யின்றி

இ) பசு + இன்றி

ஈ) பசு + யின்றி

[விடை : அ) பசி + இன்றி]



3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) படி + அறிவு

ஆ) படிப்பு + அறிவு

இ) படி + வறிவு

ஈ) படிப்பு + வறிவு

[விடை : ஆ) படிப்பு + அறிவு]



4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) காட்டாறு

ஆ) காடாறு

இ) காட்டு ஆறு

ஈ) காடுஆறு

[விடை : அ) காட்டாறு]



கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ---------- அறிமுகப்படுத்தினார்.

விடை : சீருடை

2. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர் --------

விடை : தந்தை பெரியார்



குறு வினா

1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

விடை

காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் :

(i) பொறியியல் கல்லூரிகள்

(ii) மருத்துவக் கல்லூரிகள்

(iii) கால்நடை மருத்துவக் கல்லூரிகள்

(iv) ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்

No comments:

Post a Comment