Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 8, 2025

10TH TAMIL - தொகாநிலைத் தொடர்


தொகாநிலைத்தொடர்

ஒரு தொடரில் இருசொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

எ.கா காற்று வீசியது, குயில் கூவியது

தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்

  1. எழுவாய்த் தொடர்
  2. விளித் தொடர்
  3. வினைமுற்றுத் தொடர்
  4. பெயரெச்சத் தொடர்
  5. வினையெச்சத் தொடர்
  6. வேற்றுமைத் தொடர்
  7. இடைச்சொல் தொடர்
  8. உரிச்சொல் தொடர்
  9. அடுக்குத் தொடர்

1. எழுவாய்த்தொடர்

எழுவாயுடன் பெயர்வினைவினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.

எ.கா 

இனியன் கவிஞர் - பெயர்

காவிரி பாய்ந்தது - வினை

பேருந்து வருமா? - வினா

2. விளித்தொடர்

விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

எ.கா நண்பா எழுது!

3. வினைமுற்றுத்தொடர்

வினை முற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

எ.கா பாடினாள் கண்ணகி

4. பெயரெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினைபெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

எ.கா கேட்ட பாடல் 

5. வினையெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினைவினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.

எ.கா பாடி மகிழ்ந்தனர்

6. வேற்றுமைத்தொடர்

வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.

எ.கா

கட்டுரையைப் படித்தாள்.

அன்பால் கட்டினார் 

அறிஞருக்குப் பொன்னாடை

7. இடைச்சொல் தொடர்

நிலைமொழியில் பெயர் அல்லது வினைச் சொல்லின் முன்போ, பின்போ இடைச்சொல் சேர்ந்து வருவது இடைச்சொல் தொடர் ஆகும்.

எ.கா மற்றொன்று - மற்று + ஒன்று. 

8. உரிச்சொல் தொடர்

உரிச்சொல்லுடன் பெயரோவினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

எ.கா சாலச் சிறந்தது 

9. அடுக்குத் தொடர்

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

எ.கா வருக! வருக! வருக!

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எழுவாயுடன் பெயர் இணைந்து வருவது

அ) இனியன் கவிஞன்
ஆ) காவிரி பாய்ந்தது
இ) பேருந்து வருமா?
ஈ) கண்ணகி பாடினாள்

2. தொடரின் இறுதியில் இடம்பெற வேண்டிய வினைமுற்று முதலில் வருவது

அ) எழுவாய்த் தொடர்
ஆ) வினைமுற்றுத் தொடர்
இ) பெயரெச்சத் தொடர்
ஈ) வேற்றுடைத் தொடர்

3. முற்றுபெறாத வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது.

அ) எழுவாய்த் தொடர்
ஆ) வினையெச்சத் தொடர்
இ) பெயரெச்சத் தொடர்
ஈ) வேற்றுடைத் தொடர்

4. முற்றுபெறாத வினை வினைச்சொல்லைக் கொண்டு முடிவது.

அ) எழுவாய்த் தொடர்
ஆ) வினையெச்சத் தொடர்
இ) பெயரெச்சத் தொடர்
ஈ) வேற்றுடைத் தொடர்

5. பாடி மகிழ்ந்தனர் என்பது எவ்வகைத் தொடர்

அ) எழுவாய்த் தொடர்
ஆ) வினையெச்சத் தொடர்
இ) பெயரெச்சத் தொடர்
ஈ) வேற்றுடைத் தொடர்

6. பின்வருவனவற்றுள் வேற்றுமைத் தொடர் அல்லாத ஒன்று

அ) வீட்டுக்கு வந்தான்
ஆ) மலைக்கண் உள்ளார்
இ) அன்பால் கட்டினார்
ஈ) திண்ணை வீடு

7. தொகாநிலைத் தொடர் வகைகள்

அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஒன்பது
ஈ) எட்டு

8. பழகப் பழகப் பாலும் புளிக்கும் - இத்தொடரில் இடம்பெறுவது

அ) வேற்றுமைத்தொடர்
ஆ) வினைத்தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) அடுக்குத் தொடர்

9. வடித்தக் கஞ்சியில் சேலையை அலசினேன் - இத்தொடரில் இடம்பெறுவது

அ) வினையெச்சத் தொடர்
ஆ) வினைத்தொடர்
இ) பெயரெச்சத் தொடர்
ஈ) இடைச்சொல் தொடர்

10. மற்றொன்று - எவ்வகைத் தொடர்

அ) வினையெச்சத் தொடர்
ஆ) வினைத்தொடர்
இ) பெயரெச்சத் தொடர்
ஈ) இடைச்சொல் தொடர்

No comments:

Post a Comment