Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 8, 2025

10TH TAMIL - விருந்து போற்றுதும்




வாழை இலையில் விருந்து

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர்.

தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வரவேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்புஊறுகாய்இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறிகீரைகூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்துஅவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.

எத்திசையும் புகழ் மணக்க.


அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைக் கொண்டு வாழையிலையில் விருந்து வைக்கின்றனர். முருங்கைக்காய் சாம்பார்மோர்க்குழம்புவேப்பம்பூ ரசம்வெண்டைக்காய்க் கூட்டுதினைப் பாயசம்அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர். அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர். தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

1. 'விருந்தே புதுமை' என்று கூறியவர் - தொல்காப்பியர்

2. திருவள்ளுவர் விருந்தோம்பலை எந்த இயலில் கூறுகிறார் - இல்லறவியல்

3. விருந்தினரை அனிச்சம் மலரோடு ஒப்பிடுபவர் - திருவள்ளுவர்

4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வர் என்றவர் - கம்பர்

5. "பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே"
- கம்பராமாயணம்,1:2:36

6. அமிழ்தமே கிடைத்தாலும் தனித்து உண்ணுதல் இல்லை என்று கூறும் நூல் - புறநானூறு

7. "உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்ட லும் இலரே.
புறநானூறு, 182 (கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி)

8. தமியர் உண்ட லும் இலரே என்று கூறிய பாண்டிய மன்னன் - கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

9. "மோப்பக் குழையும் அனிச்சம்" என்று கூறும் நூல் - திருக்குறள்

10.  "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல" - கலிங்கத்துப்பரணி, 477

10. "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்று கூறும் நூல் - நற்றிணை (142)

11. காலின் ஏழடிப் பின் சென்று" என்று கூறும் நூல் - பொருநராற்றுப்படை, 166

12. விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி விருந்தினருக்கு விருந்தளித்த செய்தியைக் கூறும் நூல். - புறநானூறு

13. குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலள்
புறநானூறு (333)

14. விருந்தினருக்காக கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்த செய்தியைக் கூறும் நூல் - புறநானூறு

15. நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்
-  புறநானூறு, 316

16. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்ற செய்தியைக் கூறும் நூல்- சிறுபாணாற்றுப்படை (அடி:160-163).

17. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை வைத்திருந்தனர் தமிழர்கள் என்ற செய்தியைக் கூறும் நூல்.- குறுந்தொகை

18. இரவில் கதவை மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததைக் கூறும் நூல்-குறுந்தொகை

19. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ" இவ்வடிகள் இடம்பெற்ற நூல்- குறுந்தொகை (118)

20. "மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" என்று கூறியவர் - ஔவையார்

21. "மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" என்ற அடி இடம்பெற்ற நூல் - கொன்றை வேந்தன்

22. "வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் - திறமுடனே
புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈது)
எல்லா உலகும் பெறும்"
 - ஔவையார் தனிப்பாடல்

23. யாருடைய காலங்களில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன. - நாயக்கர், மராட்டியர்.

24. இன்று விருந்தினர்கள் என்பவர்கள். -  உறவினர்கள், நண்பர்கள்

25. வாழை இலை விருத்து விழா எங்கு கொண்டாடப்படுகிறது - அமெரிக்கா

26. விருந்தினரைப் பேணுதற்காக தமிழர்கள் தங்களின் இல்லங்களில் அமைத்த ஒன்று. -  திண்ணை 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

2. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து

3. மினசோட்டோ தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள இடம் 

அ) மொரிசியஸ்
ஆ) அமெரிக்கா
இ) மலேசியா
ஈ) இலங்கை

4. தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்.

அ) தொன்மை
ஆ) முதுமை
இ) புதுமை
ஈ) இளமை

5. தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?

அ) சிலப்பதிகாரம், கண்ணகி
ஆ) கம்பராமாயணம், சீதை
இ) நளவெண்பா, தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை

6. பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்திவந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து அன்றி விளைவான யாவையே என்று குறிப்பிடும் நூல்?

அ) சிலப்பதிகாரம்
ஆ) நளவெண்பா
இ) சீவகசிந்தாமணி
ஈ) கம்பராமாயணம்

7. அல்லில் ஆயினும் விருந்து வரின்
உவக்கும் என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.

அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) நற்றிணை

8. காலின் ஏழடிப் பின் சென்று என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்

அ) பொருநாராற்றுப்படை
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) பெரும்பாணாற்றுப்படை
ஈ) கூத்தாராற்றுப்படை

9. “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
மேன்மேலும் முகமலரும் மேலார் போல” இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ) கலிங்கத்துப்பரணி
ஆ) கம்பராமாயணம்
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்

10. தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள்

அ) பழையவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டு பெரியாழ்
இ) பழையவாள், கருங்கோட்டு சீறியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டு சீறியாழ்

11. மருந்தே ஆயினும் விந்தோடு உண் என்று பாடியவர் யார்? நூல் எது?

ஒளவையார், ஆத்திச்சூடி
குமரகுரபரர், நீதிநெறிவிளக்கம்
வள்ளலால் ஜீவகாருண்ய ஒழுக்கம்
ஒளவையார், கொன்றைவேந்தன்

12. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்க ஆண்டுதோறும் கொண்டாடும் விழா

அ) இறைச்சி உணவு விருந்து விழா
ஆ) வேட்டி சேலை உடுத்தும் விழா
இ) வாழையிலை விருந்து விழா
ஈ) நவதானிய விழா

13. விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்

அ) திருவள்ளுவர்
ஆ) இளங்கோவடிகள்
இ) தொல்காப்பியர்
ஈ) கம்பர்

14. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்

அ) திருவள்ளுவர்
ஆ) கம்பர்
இ) தொல்காப்பியர்
ஈ) இளங்கோவடிகள்

15. இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி குறிப்பிடும் நூல்

அ) நற்றிணை
ஆ) பெரியபுராணம்
இ) பெரும்பாணாற்றுப்படை
ஈ) கம்பராமாயணம்

16. அமெரிக்காவில் நடைபெறும் வாழையிலை விருத்தில் அல்லாத ஒன்று.

அ) வேப்பம்பூ ரசம்
ஆ) தினைப்பாயசம்
இ) பூசணிக்காய் கூட்டு
ஈ) மோர்க்குழம்பு

பொருத்துக

1. விருந்தே புதுமைஅ. செயங்கொண்டார்
2. இல்லறவியல்ஆ. இளங்கோவடிகள்
3. சிலப்பதிகாரம்இ. தொல்காப்பியர்
4. கலிங்கத்துப்பரணிஈ. திருவள்ளுவர்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. விருந்தே புதுமைஅ. திருவள்ளுவர்
2.மோப்பக் குழையும் அனிச்சம்ஆ. தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்இ. இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைஈ. ஒளவையார்
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

No comments:

Post a Comment