Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 8, 2025

10TH TAMIL - காசிக்காண்டம்



நூல் வெளி

காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. 'இல்லொழுக்கங் கூறிய' பகுதியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
  - இல்லொழுக்கம், (பா எண் : 17)

சொல்லும் பொருளும்

அருகுற - அருகில்
முகமன் - ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்

இலக்கணக்குறிப்பு

நன்மொழி - பண்புத்தொகை

வியத்தல், நோக்கல், எழுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் - தொழிற்பெயர்கள்

பகுபத உறுப்பிலக்கணம்

உரைத்த - உரை + த் + த் + அ

உரை - பகுதி

த் சந்தி

த் - இறந்த கால இடைநிலை

 - பெயரெச்ச விகுதி


வருக - வா(வரு) + க

வா - பகுதி

வரு - எனத் திரிந்தது விகாரம்

க - வியங்கோள் வினைமுற்று விகுதி

"ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகும் தானே” -
 விவேகசிந்தாமணி. (4)

பலவுள் தெரிக
1. காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல்

அ) காசிபுராணம்
ஆ) காஞ்சிக்காதை
இ) காசிக்காண்டம்
ஈ) பெரியபுராணம்

2. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்

அ) குணசேகர பாண்டியன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) அதிவீரராம பாண்டியன்.
ஈ) பராங்குசன்

3. சீவலமாறன் என்ற பட்டம் பெற்ற பாண்டிய மன்னன்

அ) குணசேகர பாண்டியன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) அதிவீரராம பாண்டியன்.
ஈ) பராங்குசன்

4. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகிய நூல்களின் ஆசிரியர்

அ) குணசேகர பாண்டியன்
ஆ) நெடுஞ்செழியன்
இ) அதிவீரராம பாண்டியன்.
ஈ) பராங்குசன்

5. கீழ்க்கண்டவற்றுள் அதிவீரராம பாண்டியர் நூல் அல்லாத ஒன்று

அ) நைடதம்
ஆ) லிங்கபுராணம்
இ) கூர்மபுராணம்
ஈ) திருக்கை வழக்கம்

6. சிறந்த அறங்களை எடுத்துரைக்கும் அதிவீரராம பாண்டியர் நூல்.

அ) வெற்றி வேற்கை
ஆ) நன்னெறி
இ) நல்வழி
ஈ) குறுந்தொகை

7. வெற்றி வேற்கை என்னும் நூலின் வேறு பெயர்

அ) நைடதம்
ஆ) நன்னெறி
இ) நல்வழி
ஈ) நறுந்தொகை

8. உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தமாகும் என்று கூறும் நூல்

அ) நன்னெறி
ஆ) நறுந்தொகை
இ) விவேகசிந்தாமணி
ஈ) கொன்றை வேந்தன்

9. ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்

அ) விருந்தினன்
ஆ) உறவினன்
இ) முகமன் 
ஈ) மகிழ்நன்

10. ஒழுக்கமும் வழிபடும் பண்பே என்று கூறும் நூல்

அ) நன்னெறி
ஆ) நறுந்தொகை
இ) காசிக்காண்டம்
ஈ) கொன்றை வேந்தன்

11. முப்பழம் - பிரித்து எழுதுக

அ) மும்மை + பழம்
ஆ) மூன்று + பழம்
இ) முப் + பழம்
ஈ) மூ +  பழம்

12. நன்மொழி - இலக்கணக் குறிப்பு தருக

அ) வினைத்தொகை
ஆ பண்புத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உவமைத்தொகை

13. திருந்துற நோக்கல் வருகஎன உரைத்தல் இத்தொடரில் பயின்று வருவது

அ) மோனை, எதுகை
ஆ)  எதுகை, இயைபு
இ) இயைபு, முரண்
ஈ) மோனை இயைபு

14. கப்பிய பசியி னோடு கடும்பசி ஆகும் என்று கூறும் நூல் 

அ) நன்னெறி
ஆ) நறுந்தொகை
இ) விவேகசிந்தாமணி
ஈ) கொன்றை வேந்தன்

15. உரைத்த - உரை + த் + த் + அ - இதில் என்பது

அ) பெயரெச்ச விகுதி
ஆ) வினையெச்ச விகுதி
இ) வியங்கோள் வினைமுற்றுவிகுதி
ஈ) பன்மை விகுதி

No comments:

Post a Comment